Saturday, September 26, 2009

தியாகதீபம் லெப்.கேணல்.திலீபன் 22 ம் ஆண்டு நினைவஞ்சலி

Wednesday, September 2, 2009

ஈழ விடுதலைக்கான இறுதிக் கணக்கீடுகள்

மனிதர்கள் இதுவரை படைத்துள்ள அகிம்சைத் தத்துவங்கள், புரட்சிகர தத்துவங்கள், மனித நேயக்கோட்பாடுகள், உரிமை சாசனங்கள் இவை எவையாலுமே இதுவரை ஈழமக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. சிங்களத்தின் முன்னே காந்திய அகிம்சை தோற்றுள்ளது. மார்க்சியத்தின் மக்கள் வன்முறை தோற்றுள்ளது. சர்வதேச நெறிமுறைச் சட்டங்கள் அமைதியாகி உள்ளது. இந்நிலைமைகள் இதுவரை நாம் பின்பற்றிவந்த அனைத்து சமூகக் கோட்பாடுகளையும் மீள்பரிசீலனை செய்ய கோருகிறது. அவற்றில் நமது தோல்விக்கு காரணமானவற்றை உடனடியாக கைவிட வேண்டும். தேவையான புதிய எதார்த்தமான கோட்பாடுகளை நாம் தயக்கமின்றி ஏற்க வேண்டும். இவற்றிலிருந்து ஈழவிடுதலைப் போராட்டத்தின் தீர்வுக்கான அணுகுமுறைகளை நாம் வகுத்தாக வேண்டும்.

ஈழமும், காந்தியமும்

மனித உறவுகளுக்கிடையே பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு காந்தியம் வைக்கும் வழிமுறை மனமாற்றம் என்பதாகும். தீங்கு செய்யும் ஒன்றை மனம் திருந்தும்படி செய்வதே இந்த மனமாற்ற அணுகுமுறை ஆகும். காந்தியத்தின் மனமாற்றத்துவம் சில எல்லைகள் வரை வெற்றியளிக்கும்தான். கணவன் மனைவி உறவுகள், சகோதர உறவுகள், நட்புறவுகள்… இதுபோன்ற நெருங்கிய உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒருவருக்கொருவர் மனம் மாறுதல் மூலம் காந்தியம் பிரச்சனைகளை தீர்க்க முடியும். ஆனால் மனமாற்றத்திற்கு உட்படுத்தப்பட முடியாத சாத்தியப்பாடு, தனி நபரிடமோ, சமூகப் பிரிவிடமோ உண்டு என்பதை காந்தியம் ஏற்றாக வேண்டும். அவ்விடங்களில் காந்தியம் பிரச்சனைகளை தீர்க்கும் சக்தியற்றதாகிவிடுகிறது.

காந்தியக் கண்ணோட்டதின்படி முதல் 30 ஆண்டுகால ஈழ அரசியல் போராட்டம் ஓர் அகிம்சை போராட்டமே. அதாவது சிங்களர்களின் அடக்கு முறைகளுக்கு திருப்பித் தாக்காத அவர்களது மனமாற்றத்தையே எதிர்பார்த்து, பெரிதும் நம்பி நடத்திய அகிம்சை போராட்டமே, உண்மையிலேயே செல்வநாயகம் காந்தியை விடவும் மிதவாதியாக இருந்தார் என்றே சொல்லலாம். காந்தியாவது விடுதலை கேட்டார். செல்வநாயகம் நீண்ட காலமாக வெறும் உரிமைகள் தான் கேட்டார். காந்தி சட்டத்தை மீறத்தான் போய் கொண்டிருக்கிறேன் என்று தண்டியாத்திரை நடத்தினார். வெள்ளையனே வெளியேறு என்றார். செல்வநாயகம் கோரிக்கைகள் ஒப்பந்தங்கள் என்று நடத்தினார். இவ்வளவு மிதமான அகிம்சை போராட்டங்கள் – ஈழவிடுதலையை அல்ல- உரிமைகளைத் தரும் மனமாற்றத்தைக் கூட சிங்களர்களிடம் ஏற்டுத்தவில்லை. இதற்கு காந்தியம் என்ன சொல்கிறது? அதன்பிறகு வந்த ஆயுதப்போராட்டம் காந்தியத்திற்கு தவறானதாக இருக்கலாம். இப்போது அங்கு ஆயுதப்போராட்டம் இல்லை. இராஜபக்சேயையும், சிங்களர்களையும் தம்மால் மனம்மாற்றமுடியும் என்ற நம்பிக்கை கொண்டு காந்தியே அங்கு சென்று அகிம்சாவழியில் போராடினால் அவருக்கு உடல் சித்திரவதையும், மரணமும் உறுதி என்பதே இன்றைய ஈழ நிலை.

காந்திய மனமாற்ற வழிமுறை என்பது உயர்ந்த – நாகரீக -பண்பட்ட – மனிதநேயமிக்க மனித சமுதாயத்திற்கு எடுபட முடியும். சிங்கள இனம் அத்தகைய ஒரு இனமல்ல. எனவே சிங்களத்தின் முன் காந்தியம் முழுமையாக தோல்வியுற்றுள்ளது.

ஈழமும், மார்க்சியமும்

தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமை என்ற மார்க்சிய கோட்பாடு – அவசியமற்ற பிரிவினைகளைத் தவிர்க்கவும், அவசியமான பிரிவினைகளை ஏற்கவும், உள்ளடக்கிய கோட்பாடு, இலங்கையில், சிங்கள மக்கள் மீதும், ஆட்சியாளர்கள் மீதும் நம்பிக்கை வைத்து 30 ஆண்டுகாலம் பிரிவினைக் கோரிக்கை எழுப்பப்படவில்லை. இது அவசியமற்ற பிரிவினைகளைத் தவிர்க்கச் சொல்லும் மார்க்சிய இயங்கியலுக்கு ஏற்பானதே. இதற்கு மேலும் சிங்கள – தமிழ் மக்களின் இணைப்பு சாத்தியமில்லை என்ற நிலையில் 1977ல் தமிழ் மக்கள் பிரிவினைக்கு ஆதரவளித்தனர். இது அவசியமான பிரிவினையை ஏற்கும் மார்க்சிய இயங்கியலுக்கு ஏற்புடையது. ஈழவிடுதலைக்கான பெரும் அறவழி மக்கள் போராட்டங்கள் நடந்தன. மக்கள் போராட்டங்கள் மீது நம்பிக்கை வைக்கும் தத்துவமான மார்க்சியத்திற்கு இது ஏற்பானதே. அரசியல் போராட்டங்கள், அதன் உச்சகட்டத்தில் ஆயுதபோராட்டமாவதை மார்க்சியம் ஏற்கிறது. அதுவும் ஈழத்தில் நடந்தேறிவிட்டது. மார்க்சியத்தின் தேசிய இனச்சிக்கல் குறித்த முழு இயங்கியல் அணுகுமுறையும் ஈழத்தில் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு, முடிக்கப்பட்டு இறுதியில் சிங்கள இனத்தால் தோற்கடிக்கப்பட்டு நிற்கிறது. இதற்கு மேலும் ஈழத்தில் என்னசெய்ய வேண்டும் என்று மார்க்சியம் சொல்கிறது? மார்க்சியத்தின் தேசிய சுயநிர்ணய உரிமை குறித்த முக்கிய அணுகுமுறை ஒன்று ஈழத்திற்கு பொருத்திப் பார்க்கப்படவேண்டி உள்ளது. அது ஈழமும், தேசிய சுயநிர்ணய உரிமையும் என்ற தலைப்பில் இக்கட்டுரையில் பின்னர் வருகிறது.

ஈழமும் முதலாளித்துவமும்

சுயநலனே மனிதனின் இயக்குவிசை என்கிறது முதலாளித்துவம். இந்த சுயநலன் என்பது தனிமனித அளவினதாக இருக்கலாம். குடும்ப அளவினதாக இருக்கலாம். இன அளவினதாக இருக்கலாம். ஒரு நாட்டின் ஆட்சியாளர் அளவினதாக இருக்கலாம். உலக மேலாதிக்க அளவினதாக இருக்கலாம். இப்படித்தான் சுயநலனாய் மனிதர்கள் இயங்குகிறார்கள் என்று சொன்னால் அதை ஏற்கலாம். ஆனால் இப்படித்தான் இருக்க முடியும் இருக்க வேண்டும் என்று சொன்னால் விலங்கின நிலைக்கும், மனித நிலைக்கும் வேறுபாடற்றதாகும்.

இயக்குவிசை (சுயநலன்) என்ற எலும்புத்துண்டு இல்லாமல் தனிமனிதன் முதல் ஐ.நாவரை முதலாளித்துவத்தின் எந்த அரசியல் பொருளாதார அரங்கும் இயங்காது. இவ்வாறு இல்லாமல் நீதி, நேர்மை, மனிதாபிமானம் என்பதெல்லாம் தனிமனித மனம் சார்ந்தவை, மனித தன்மைக்கு அப்பாற்பட்ட தெய்வீகத்தன்மையானவை, போற்றுதலுக்கு மட்டுமே உரியவை. இத்தகையவர்கள் ஆட்சியாளர்களில் இருப்பது அரிதிலும் அரிது. ஏனெனில் இவர்கள் அனைவரும் இயக்குவிசை கோட்பாட்டை கொண்டிருப்பவர்களே. இலங்கை என்ற சின்ன எலும்புத்துண்டிற்காக இந்தியா, சீனா மற்றும் பலநாடுகள் போட்டியிடுகின்றன. இந்தியசந்தை என்ற எலும்புத்துண்டை மனதில் கொண்டு உலகநாடுகள் இலங்கையை செல்லமாக வைத்துக்கொள்கின்றன. சிங்களர்களைப் பாருங்கள், இலங்கை என்ற எலும்புத்துண்டை இந்தியாவுக்கும், சீனாவுக்கும் மாற்றி மாற்றி காட்டி பதிலுக்கு அனைத்து சர்வதேச சட்ட நெறிமுறைகளையும் மீறி இன அழிப்பை பலவடிவங்களில் தொடர்ந்து பயமில்லாமல் செய்கிறார்கள். எனவே முதலாளித்துவ உலக அமைப்பில் குறிப்பாக அதன் ஆட்சி அரங்குகளில் இருந்து நீங்கள் எதையாவது பெற முயன்றால் அதன் இயக்குவிசை கோட்பாடின்படியே பெற முடியும்.

ஈழப்போராட்டம் இயக்குவிசை கோட்பாட்டிற்கு மாறாக, உலக ஆட்சி அரங்குகளில் நீதி, தயவு, நேர்மை, நெறிமுறை, இவற்றை எதிர்பார்த்து வருகிறது. பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்ட அபாய நிமிடங்களில் கூட தங்களது இயக்கு விசை கோட்பாட்டைவிட்டு இறங்கி வரவில்லை உலக நாடுகள், ஏதோ ஒன்றை பெறுவது மட்டும் அல்ல, இருப்பில் உள்ள எதையும் இழந்துவிடக்கூடாது என்பதும் இயக்குவிசைக் கோட்பாடுதான். உலக ஆட்சி அரங்குகளை இந்த இயக்கு விசைக்கோட்பாட்டின் அடிப்படையில் அணுகி ஈழ விடுதலையின் சாத்தியப்பாட்டை நாம் பார்க்க வேண்டும். மாறாக இந்திய அரசின் ஆதரவை நம்பி, அமெரிக்க மேற்குலக ஆதரவை நம்பி ஈழவிடுதலை என்ற சிந்தனைக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஈழமும் சிங்களமியமும்

நாம் இதுவரை பார்த்த காந்தியமும், மார்கசியமும், முதலாளித்துவ நெறிமுறைகளும் தோற்றுப்போனது இந்த சிங்களமியத்திடம்தான். ஏனெனில் மேற்சொன்ன தத்துவங்கள், கோட்பாடுகள், அனைத்தும் நவீன மனித சமுதாயத்திற்காக வகுக்கப்பட்டவை. ஆனால் சிங்களமியம் நவீன மனித சமுதாய கோட்பாடுகளை கொண்டதல்ல. அது கி.மு.10,000 மோ, 20,000 மோ ஆண்டுகளுக்க முந்தையது. ஓர் இனக்குழு, பிறிதொரு, இனக்குழுவை தாக்கி, உயிர்களை அழித்து அல்லது அங்கிருந்து விரட்டி அதன் நலன்களை தாமே அனுபவித்துக்கொள்ளும் ஆதிகால இனக்குழு கோட்பாடே சிங்களமியம் ஆகும். எனவே இத்தனை நவீன சமூக தத்துவங்களும், அவர்கள் ஏற்றுக்கொண்ட பௌத்தமும் கூட சிங்களமியத்திடம் தோற்றுப்போனதில் ஆச்சர்யத்திற்கு ஒன்றுமில்லை.

ஈழமும், ஆயுதப்போராட்டமும்

ஈழவிடுதலைக்கு ஆயுதப்போராட்டம் தொடர்ந்து அவசியமா? இல்லையா? சாத்தியமா? இல்லையா? என்பது இன்றைய முக்கிய கேள்வி. அவசியமா, இல்லையா? என்ற கேள்வியைப் பொறுத்தவரை ஈழ விடுதலைப்போராட்டத்திற்கான பங்களிப்பில் இதுவரை அரசியல் போராட்டதின் பங்கை விட ஆயுதப்போராட்டத்தின் பங்கு அதிகமாக இருந்து வந்துள்ளது. இன்றைய நிலை ஆயுதப்போராட்டத்தின் பங்கை விட அரசியல் போராட்டத்தின் பங்கையே கூடுதலாக்கி இருக்கிறது. ஏனெனில் 80களில் ஈழப்போர் துவங்கிய போது உலகம் அதை எதிர்க்கவில்லை. இந்தியா உள்நோக்கோடுதான் என்றாலும் ஆதரித்தது. இப்போர் முடிவுக்கு வந்தபோது முழு உலகமும் அந்த ஆயுதப்போராட்டத்தை எதிர்த்து நின்றது. இந்தியா மறைமுக தலைமையளித்தது.

சர்வதேச அரசியல் போராட்டங்களின் தேவை மிகுந்தும், ஆயுதப்போராட்டத்தின் தேவை குறைந்தும் வருவதான நிலையை, ஆயுதப்போராட்டத்தின் அவசியம் முடிவுக்கு வந்துவிட்டதாக கருதலாமா என்றால் கருதமுடியாது தான். ஏனெனில் சிங்கள அரசிற்கு அரசியல் போராட்டமெல்லாம் எருமை மாட்டில் மழை பெய்தமாதிரி. ஆயுதப்போராட்டம் ஒன்று நடந்தால்தான் இலேசாகவாவது அசைந்து கொடுக்கும். இல்லையென்றால் எல்லாம் முடிந்துவிட்டது என்று உலகையே நம்பவைத்துவிடும். மேலும் ஆயுதப்போராட்டாம் இல்லாத நிலையில், ஈழப்போராட்டம் உயிர்ப்பான சர்வதேச பிரச்சனைகளிலிருந்து நீங்கிவிடும் வாய்ப்பும் உண்டு. எனவே இத்தகைய அவசியங்களுக்கான ஆயுதப்போராட்டத்திற்கு கடந்தகாலங்களைப் போல் தமிழ்பகுதியை கைப்பற்ற வேண்டும் என்பதில்லை. மாறாக சர்வதேச பிரச்சாரமே நோக்கமானது.

அடுத்ததாக ஆயதப்போராட்டம் சாத்தியமா? இல்லையா? என்பதைப் பொறுத்தவரை தமிழீழ மக்களின் உணர்வுநிலை குறித்த எதார்த்த மதிப்பீடு இதற்கு மிக முக்கியமானதாகும். தளங்களைக் கைப்பற்றுவது அவசியமில்லை என்பதால் அதற்கு தேவையான பெரும்படையை கட்டுவதற்கான மக்களின் தயார்நிலை குறித்து கவலைப்படத் தேவையில்லை. சிறு ஆயுதத் குழுக்களைக் கட்டுவதற்கான இளைஞர்களின் பங்களிப்பே அவசியமாய் உள்ளது. இது இளைஞர்கள் கோபமூட்டப்படும் செயல்களைச் சார்ந்தது. இதுவரை சிங்கள அரசு இனக்கொடுமைகளால் இளைஞர்களை யுத்தத்திற்கான தயார் நிலைக்கு தள்ளியது. இனியும் அதுவே அந்நிலைக்கு தள்ளும், ஒருவேளை ஆயுதப்போராட்டத்தை கட்ட முடியாவிட்டாலும் கூட அது ஈழத்தின் தோல்வியை நிர்ணயிக்கப்போவதில்லை. ஏனெனில் இம்முறை வெற்றி கருநிலையில் இருப்பது சர்வதேச ஈழ அரசியல் போராட்டங்களிலேயே. ஆயுதப்போராட்டங்களால் அடைய முடியாமல் போகும் சர்வதேச வீச்சை அரசியல் போராட்டங்களால் ஈடுசெய்ய வேண்டிவரும்.

ஆயுதக்குழுக்கள் கட்ட சாத்தியமிருப்பின் அது முற்றிலும் புதிய அமைப்பாகவே செயல்பட வேண்டும். புலிகளின் கடந்தகால தனிநபர் அழிப்பு செயல்பாடுகளை தாம் பின்பற்ற போவதில்லை என்று அது பகிரங்க அறிவிப்பு செய்ய வேண்டும். ஆயுதப்போராட்டத்திற்கான சமூகக்கரு இருக்கும்வரை அதை விடுதலைவரை காப்பாற்றி வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் நாளை உலகத்தமிழர் போராட்டங்களினால், சர்வதேச தலையீடு ஏற்படுவதற்கு ஈழத்தில் சில ஆயுதக்கிளர்ச்சிகள் அவசியமாயின், அப்போது எதுவும் செய்ய முடியாமல் போய்விடும். மேலும், தலையீடு அவசியமில்லை, இலங்கையில் அமைதியே உள்ளது என்று சர்வதேச அரங்குகளில் மறுத்துப்பேச இலங்கைக்கு அது வசதியாகிவிடும்.

ஈழமும், தேசிய சுயநிர்ணய உரிமையும்

தனது சுய நிர்ணய உரிமையை ஒரு தேசிய இனம் 3 வழிகளில் நடைமுறைப்படுத்தலாம்.
1. பிரிவு அவசியமற்ற நிலையில் சம்பந்தப்பட்ட தேசிய இனம் அல்லது இனங்களுடன் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தொடர்ந்து சேர்ந்து வாழ்வது.
2. பிரிவு அவசியமானநிலையில் பிரிந்து தனித்து அரசமைத்து வாழ்வது
3. அவசியமான நிலைமைகளில், உலகின் எந்தஒரு 3வது தேசிய இனத்துடனும் கூட சுயநிர்ணய உரிமை அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் இணைந்து கொள்வது அதிலிருந்து எப்போது வேண்டுமானாலும் பிரிந்துகொள்வது.

இதுவே லெனின் வகுத்த சுயநிர்ணய உரிமை கோட்பாட்டின் சாரம். இம்மூன்று வழிகளில் எதை தேர்வு செய்வது என்பது சூழல் சார்ந்தது. முதல் வழியைப் பொறுத்தவரை சிங்களர்கள் ஈழத்தமிழரை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கவில்லை என்பதால் சுயநிர்ணய உரிமையுடன் அவர்களோடு சேர்ந்து வாழ்வது என்ற சிந்தனைக்கே அவர்கள் இடம் கொடுக்கவில்லை. எனவே இது சாத்தியப்படும் சூழல் இல்லை. 2வது வழியான விடுதலைக்காக, ஈழத்தில் 30 ஆண்டுகால ஆயுதப்போராட்டம் ஒரு சுற்று நடத்தி கடும் பின்னடைவில் முடித்து வைக்கப்பட்டிக்கிறது. இதன் மூலம் 2வது வழியும் சாத்தியம் இல்லை என்று சிங்கள அரசு அறிவித்துக்கொண்டிருக்கிறது. ஈழத்தமிழரை உரிமைகளற்ற ஒரு சிங்கள வழியை நோக்கி அது விரட்டி அடித்துக்கொண்டிருக்கிறது. புலம் பெயர்ந்த தமிழர் போராட்டங்களும், தமிழகத்தின் ஈழ ஆதரவு இயக்கங்களின் போராட்டங்களும் சிங்கள வழியை நோக்கிய விரைவு படுத்தலை தடுப்பதற்கே போதிய பலமின்றி இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் வணங்கா மண் பொருட்களை மக்களிடம் சேர்க்கும் போராட்ட பலம் கூட இல்லை. இதற்கு கூட ஆதரவாக சர்வதேசிய சூழல் இல்லை. எனவே இப்போது நம்மிடம் விடுதலைப்போராட்டத்திற்கான பலம் இல்லை என்பது உண்மை. இதை எப்படி பெறப்போகிறோம் என்ற கேள்வியில் இந்த இரண்டாவது வழி நின்று கொண்டிருக்கிறது.
3வது வழியான எந்த ஒரு தேசிய இனத்தோடும் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் இணைவது என்ற வழிமுறை, எதிர்கால உலகின் தேசிய இனங்களின் ஐக்கியத்திற்கான சனநாயக வழிமுறையாகும். ஈழநிலைமைகளுக்கு இவ்வழிமுறை மிக அவசியமானதாகவே எதிர்காலத்தில் இருக்கும். ஈழத்தின் சிறிய மக்கள் தொகை, நீண்ட சிங்கள-தமிழ் எல்லை, இன்னும் பல பத்தாண்டுகளுக்கு சனநாயகப்பட முடியாத கொடிய இனவாத அரசு, சர்வதேச நீதியைக்கூட தடுக்கும் மேலாதிக்க அண்டை அரசு, இவை போன்றவை 3வது வழியை தேர்வு செய்வதற்கான நிலைமைகளைக் கொண்டிருக்கின்றன. இதன்படி ஈழம் தனக்கு பொருத்தமான பிறிதொரு நாட்டுடன் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இணைந்து கொண்டு ஒரே நாடாகும். இது சுயநிர்ணய உரிமைக்கு பின் தீர்மானிக்கப்படும்.

இவ்வழிமுறையை இப்போதே அறிவிப்பதானது, உலகின் முன்னனி நாடுகள், தமக்கு ஒரு நாடு கிடைக்கும் வாய்ப்பை கருத்தில் கொண்டு தமிழ் இன விடுவிப்பை ஆதரிக்கத்தொடங்கலாம். இம்முனை ஈழவிடுதலைக்கான சர்வதேச அங்கீகாரத்தை தொடங்கி வைக்கலாம். எனவே இது குறித்து தமிழீழ அரசியல் வல்லுநர்கள் சர்வதேச அரசியல் அமைப்புச் சட்ட வல்லுனர்கள் ஒரு மேலான கலந்தாய்வை மேற்கொள்ள வேண்டும்.

ஈழமும், இந்தியாவும்

ஆரம்பம் முதலே இந்திய அணுகுமுறை என்பது ஒரு பிராந்திய வல்லாண்மை அணுகுமுறை என்பதற்கு மேல் ஒன்றுமில்லை. தனது பிராந்திய நாடுகளின் அமைதியின்மையை அவர்களை பணிய வைக்க பயன்படுத்தி கொள்வது அவ்வளவுதான். எனவே இலங்கையில் அமைதியின்மை எப்போதுமே தொடரவேண்டும், இன ஒடுக்குமுறைதொடர வேண்டும் என்பது இலங்கை மீதான இந்திய தலையீட்டை அதிகப்படுத்திக்கொண்டே செல்ல அவசியமானது. இதனால் தான்படையெடுத்து சென்று போட்டு வந்த ராஜீவ்-செயவர்த்தனா ஒப்பந்தத்தில் உள்ள வடக்கு-கிழக்கு இணைப்பைக்கூட 22 ஆண்டுகளாக இந்தியா செய்யவில்லை. வன்னிமக்களை மீளமைப்பது குறித்து இந்தியா பேசுவது அதன் உதடுகளோடு சம்பந்தப்பட்ட விசயம்தான். அது வணங்காமண் பொருட்களைக் கூட மக்களை சென்றடையச் செய்ய வைக்கவில்லை. சிங்கள அரசின் கொடுமைகள் தொடர்ந்தால்தான் அதன்மீதான தலையீட்டிற்கு அது வசதியாக இருக்கும் என்பது இந்தியாவிற்கு தெரியும்.

இந்நிலையில் இந்திய ஆதரவுடன் ஈழம் என்பது அரசியலற்ற அணுமுறை, ஈழநலனும், இந்திய நலனும் சந்திப்பதான ஒரு புள்ளி இப்போதைக்கு தெரிகிறதா? அப்படி ஒரு புள்ளி வரலாம், வராமலும் போகலாம், இப்படியே சில, பல பத்தாண்டுகள் செல்லலாம். ஆருடத்தை நம்பி எந்த விடுதலையும் இருக்க முடியாது. எனவே இப்படியொரு புள்ளியை சாத்தியப்படுத்தி கொண்டு வருவதுதான் நமது வேலையாக இருக்கமுடியுமே தவிர, அதற்கான காத்திருப்பு அல்ல, அதே நேரம் இந்தியாவின் ஏற்பு இல்லாமல் ஈழத்தை அடைய முடியாது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்தியாவைப் பொறுத்தவரை ஈழ ஏற்பு என்பது 2 நிலைமைகளில் ஏற்படலாம்.

1. அதற்கான உள்நாட்டு, வெளிநாட்டு நெருக்குதல்களிலிருந்து வரவேண்டும்.
2. வேறு அரங்குகளில் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கிலிருந்து வரவேண்டும்.

இந்தியா குறித்த விசயத்தில் மேற்சொன்னவற்றை எப்படிச் செய்வது என்பது குறித்தே நாம் சிந்திக்க வேண்டும். இந்தியாவை எதிர்பார்த்து ஈழம் என்பது, இந்தியா ஈழ இயக்கங்களை பயன்படுத்திக் கொள்வதாக இருக்க முடியுமே தவிர இந்தியாவைப் பயன்படுத்திக்கொள்வதாக இருக்காது. இது கடந்தகால அனுபவமும் கூட.

ஈழமும் தமிழகமும்

தமிழகத்தில் 80களில் பெரும் எழுச்சியாக இருந்த ஈழ ஆதரவு தற்போது தேக்க நிலையிலேயே இருக்கிறது. ஈழ ஆதரவாளர்கள் மட்டுமே பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு, கருத்தரங்கு, தீக்குளிப்புகள் வரை நடத்தினர். இச்செயல்பாடுகளுக்கும் தமிழக மக்களுக்கும் எவ்வித இணைப்பும் ஏற்படவில்லை. தலைமுறை இடைவெளியால் தமிழக இளைஞர்களிடம் ஏற்பட்டிருக்கும் ஈழம் பற்றிய அறியாமையை இது நீக்கிவிடவில்லை. தமிழக அரசியல்களத்தில் ஈழம் முதன்மை இடத்தை பெற்றிருந்த போதிலும், பெரும்பான்மை மக்களிடம் அது முதன்மை இடத்தில் இல்லை. இங்கு செய்திகளை சேர்ப்பதில் தொலைக்காட்சி ஊடகமே பிரதானமாகிக் கொண்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் எந்த தொலைக்காட்சியுமே படுகொலைகளையும், தீக்குளிப்புகளையும் பிரதானப்படுத்தி செய்தி வெளியிடவில்லை. ஓரளவு செய்த மக்கள் தொலைக்காட்சி அனைத்து மக்களையும் சென்றடையும் நிலையில் இல்லை. முத்துக்குமார் மரணத்தை ஒட்டி அனைத்துக்கட்சிகளுக்கு எதிராக எழுந்த மாணவர் தன்னெழுச்சியை முதல்வர் தலைமையில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து தந்திரமாக அணைத்துவிட்டனர்.

இந்தியா அசைந்து கொடுக்காமல் அல்லது அதை அசைத்துப்பார்காமல் ஈழவிடுதலை சாத்தியமில்லை. அதை உள்ளிருந்து அசைத்துப்பார்க்கும் ஆற்றல் தமிழகத்திற்கு மட்டுமே உண்டு. கடந்த நாட்களில் இருந்த அருமையான வாய்ப்புகளையெல்லாம் பதவி சுகத்திற்காக, தேர்தலுக்காக அரசியல் வாதிகள் பாழ்படுத்தினார்கள். இவர்களுக்கு வெளியே உள்ள ஈழ ஆதரவு ஆற்றல்கள் தமிழகத்தின் ஒரு சதவீத மக்களைத்திரட்டினாலே போதும், அதன் தொடர் சங்கிலி விளைவால் இந்தியா அசைக்கப்படமுடியும். அதற்கு இவ்வாற்றல்கள் முழுமையாக ஒன்றிணைவதும் மக்களை நோக்கிய வேலைத்திட்டங்களை அமைப்பதும் இல்லாமல் சாத்தியமில்லை.

ஈழமும், நாடுகடந்த தமிழீழ அரசும்

நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு அமைப்பு வடிவம். இதன் குரலை ஈழமக்களின் ஒருமித்த குரலாக உலகம் ஏற்கமுடியும். எனினும் ஈழமக்களின் ஒருமித்த குரலாக இந்த அரசு என்ன செய்யப்போகிறது? என்பதைப்பொறுத்தே இது எத்தகைய அரசாக இருக்கும் என்பதை தீர்மானிக்க முடியும். நாடு கடந்த தமிழீழ அரசு என்ற வடிவத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட அதிகமான முக்கியத்துவத்தை விடுதலைக்கான அரசியல் பாதை என்ற உள்ளடக்கத்திற்கு நாம் கொடுக்க வேண்டும். இந்த உள்ளடக்கம் இல்லை எனில் இது ஈழ விடுதலைக்கான அரசாக இல்லாமல் விண்ணப்பத்திற்கான அரசாக நீர்த்துப்போய்விடும். இதற்கான அபாயம் உண்டு என்பதை ஏற்க நாம் தயங்கக்கூடாது.

விடுதலைப் போராட்டத்தலைமை என்பது இயக்கத்தின் தலைமையாகவே எப்போதும் இருக்க வேண்டும். இவ்வரசு இயக்க தலைமைக்கு கட்டுப்பட்டே இயங்க வேண்டும். இயக்கதின் கீழ் பன்னாட்டு அரசு உறவுகளுக்கான, உலகமக்களிடையேயான உறவுகளுக்கான ஒரு பிரிவாகவே இது செயல்பட வேண்டும். இதன் செயல்பாடுகளுக்கு அரசியல் ஆயுதப்போராட்டங்களுக்கான தேவையை இடையூறாகக் கருதக்கூடாது. இத்தகைய ஒருஅரசு இல்லாமல்கூட விடுதலையை அடைய முடியும். ஆனால் விடுதலைக்கான இயக்கம் இல்லாமல் ஒரு விடுதலையை அடைய முடியாது. இவ்வரசு விடுதலைப்புலிகளின் இடத்திற்கான தொடர்ச்சியாய் இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. இது பன்னாட்டு அரசுகளின் பணியவைப்புக்கு தொடர்ந்து உட்படுத்தப்படும் வாய்ப்புகளைக்கொண்டது. இதன் சட்ட வரம்புக்குட்பட்ட செயல்பாடுகளுக்கும், அரசியல் போராட்டங்களின் வளர்ச்சிக்கும் இடையிலான உறவு முரண்பட்டுப்போகும் வாய்ப்பும் உண்டு. இயக்கமும் தலைமையும், பலவீனப்பட்டு இருக்கும் நிலையில், அரசியல் பாதை ஒன்றை உறுதிபடுத்தாத நிலையில், தனிஈழத்திற்கான உலக ஆதரவு இல்லாத நிலையில், இவ்வரசு வடிவத்தை முதன்மைப் படுத்துவதன் மூலம் பெரும் வெற்றிகரமான நகர்வுகளை ஏற்படுத்த முடியாது. நாடுகடந்த தமிழீழ அரசு என்ற வடிவத்தை பயன்படுத்திக்கொள்ள அதன் முழுபரிமாணங்களையும் நாம் கணக்கில் கொண்டாக வேண்டும்.

தீர்வுக்கான அணுகுமுறைகள்

இதுவரை பார்த்த தலைப்புகளில் தொகுப்பாக தீர்வுக்கான அணுகுமுறைகளை நாம் வரையறுக்கலாம்.
1. ஆயுதப்போராட்ட பின்னடைவின் இன்னொரு எதிர்நிலையாக உலக அரசுகளின் மனமாற்றத்தை எதிர்பார்க்கும் காந்திய அணுகுமுறை வெற்றியளிக்காது.
2. ஈழவிடுதலையை இந்தியா உள்ளிட்ட உலக அரசுகள் ஏற்கும் சூழலை எதிர்பார்ப்பது என்பது அந்த சூழலுக்கான சாத்திய மின்மையும் உண்டு என்ற எதார்த்தத்தை பார்க்க மறுப்பதாகும். எனவே அத்தகைய ஒரு சூழலை உருவாக்குவதற்கான திட்டமிடலே விடுதலைக்கான அணுகுமுறையாக இருக்கமுடியும்.
3. தேசிய சுயநிர்ணய உரிமையின் 3வது வழிமுறையான பிரச்சனைக்குரிய தேசிய இனம் அல்லாத பிற தேசிய இனத்துடன் சேர்வது குறித்த அணுகுமுறை, ஈழ நிலைமைகளுக்கு பொருந்துவது குறித்து விரிவான ஆய்வை உடன் மேற்கொள்ளவேண்டும்.
4. முதலாளித்துவ இயக்குவிசை கோட்பாட்டிற்கு இணைவாக 3வது வழி முறையை ஒரு கருவியாக பயன்படுத்த இயலும் வாய்ப்பை கண்டறிய வேண்டும்.
5. நாடுகடந்த தமிழீழ அரசு என்பது தீர்வு அல்ல. தீர்விற்கான பாதையும் அல்ல. அது விடுதலை இயக்கத் தலைமையின் கீழ் செயல்பட வேண்டிய ஓர் அமைப்பு. இதன் பங்கு பாத்திரம் குறித்த மிகைப்படுத்தலும், எதிர்பார்ப்பும் கூடாது. இதன் மூலமான இராஜதந்திர நகர்வுகள் என்பதெல்லாம் உலகம் முழுவதுமான தமிழர்களின் அரசியல் போராட்ட வீச்சை சார்ந்த விசயம் தான். எனவே நாடு கடந்த தமிழீழ அரசின் முக்கியத்துவம் என்பது அமைப்பு – தலைமை- அரசியல் பாதை- அரசியல் போராட்ட வீச்சு – இவற்றிற்கெல்லாம் அடுத்த படியானதாகவே இருக்கு முடியும்.
6. ஈழத்தில் ஆயுதப்போராட்டம் பழைய பொருளில் தொடரமுடியாது. சர்வதேச அரசியல் போராட்டங்களுக்கு துணை செய்யும் பொருளிலேயே அது தொடர முடியும். ஆயுதப்போராட்டத்திற்கான சமூககருவை முடிந்தவரை காப்பாற்றி, எப்போது அவசியப்படுகிறதோ அப்போது பயன்படுத்திக்கொள்ளும் அணுகுமுறைகளைக் கையாளவேண்டும்.

ஒரு விடுதலைப்பாதை

இத்தகைய அணுகுமுறைகளிலிருந்து ஒரு பாதையை வரையலாம். ஒரு பாதையை வரைய நாம் இருக்குமிடத்திலிருந்து இலக்கை நோக்கியும் செல்லலாம். நமது இலக்கிலிருந்து இருக்குமிடம் நோக்கி பின்னோக்கியும் வரலாம். இந்த இரண்டில் 2வது அணுகுமுறையே எளிதானதும், விரைவானதும், தெளிவானதுமான அணுகுமுறை, எப்படி எனில் குழந்தைகள் புத்தகங்களில் ஒரு விளையாட்டு இருக்கும். ஒருபக்கம் ஆடு இன்னொரு பக்கம் புல்கட்டு, ஆடு, புல்கட்டை அடையும் வழியை கண்டுபிடி பார்போம் என போட்டிருப்பார்கள். ஆடு புல்கட்டை அடைய அநேக வழிகளை வைத்து ஒன்றைத் தவிர மற்றவற்றையெல்லாம் அடைத்துப்போட்டிருப்பார்கள். இவ்வழியை எளிதாகவும் விரைவாகவும் கண்டறிவதற்கான முறை ஆட்டிலிருந்து புல்லைநோக்கி செல்வதை விட புல்லிலிருந்து ஆட்டை நோக்கி வருவதே. இதில் தேவையற்ற தவறான பாதை தெரிவுகள் தவிர்க்கப்பட்டுவிடும். இதைப்போல ஈழவிடுதலைக்கான பாதையை இலக்கிலிருந்து நமது நிலையை நோக்கி வரைவதே எளிதானதும், தெளிவானதுமாக இருக்கும்.

இலக்கை(ஈழத்தை) அடையும் உச்சக்கட்ட நிகழ்வு சிங்களத்தை வீழ்த்தியோ அதன் விட்டுக்கொடுத்தலிலோ ஏற்படுவது அல்ல. சர்வதேச தலையீட்டின் மூலமே அந்த உச்சகட்ட நிகழ்வு ஏற்பட முடியும். சரி அந்த சர்வதேச தலையீடு எப்படி இருக்க முடியும் ? நேரடியாக ஈழத்தை அங்கீகரிப்பதாக இருக்கலாம் அல்லது இன்றைய உலகப்போக்கான ஐ.நா.சரத்துகளின் படியான பொதுவாக்கெடுப்பை நடத்துவதாகவும் இருக்கலாம். இவை இரண்டுமே கோரிக்கை வைத்து போராடி உலகை ஏற்க வைக்காமல் நடைபெறாது. இவ்விரண்டில் ஈழத்தை அங்கீகரிக்க கோரி வெற்றியடைவதைவிட பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரி வெற்றியடைவது ஒப்பீட்டளவில் எளிதானது. மேலும் நாம் ஏற்கனவே ஈழத்தை சர்வதேசம் அங்கீகரிக்க கோரி போராடி வருகிறோம். தென்ஆப்ரிக்காவை தவிர்த்து ஒரு உலக நாட்டைக்கூட கொள்கையளவில் கூட ஈழத்தை ஏற்க வைக்க முடியவில்லை. ஏற்பதில் நாடுகளுக்கிடையேயும் பல்வேறு இராஜதந்திர சிரமங்கள் உள்ளது. இத்தகைய சிரமங்கள் பொதுவாக்கெடுப்பை ஏற்பதில் மிக்குறைவு.

ஆக இலக்கை அடைய பொதுவாக்கெடுப்பிற்கான சர்வதேச தலையீட்டை கோருவதே சாத்தியமான தேர்வாக உள்ளது. உலகதமிழர்களும் உலக சனநாயக ஆற்றல்களும் ஒரே குரலில் உரத்துக்கோராமல் சர்வதேசம் இதை ஏற்க முன்வராது. எனவே இதற்கு பொதுவாக்கெடுப்பிற்கான உலகளாவிய கோரிக்கை இயக்கம் ஒன்று அவசியமாகிறது. இவ்வுலகளாவிய இயக்கத்திற்கு, உலகத்தமிழர் அமைப்புகள், சனநாயக அமைப்புகள் இவற்றை அங்கத்தினர்களாக ஒருங்கிணைக்கும் ஒரு அரசியல் முன்னனி அவசியமாகிறது. இதற்கு, விடுதலைப்புலிகளின் உறுதியான இராணுவத்தலைமை போன்ற, அரசியல் தலைமை அவசியமானது. இத்தகைய தலைமை உருவாக இப்பணிகளுக்கான உறுதியான முன்னெடுப்பு அவசியமாகிறது. இதுவே இலக்கிலிருந்து நமது நிலையை நோக்கி பின்னோக்கி வரையும் பாதை.

அடுத்து இந்தியாவைப் பொறுத்தவரை பொதுவாக்கெடுப்பை எதிர்க்குமேயானால், உலகிலும், தமிழக மக்களிடத்திலும் அது சனநாயகத்தின் எதிரியாக அம்பலப்பட்டு போகும். இந்தியாவின் இவ்வெதிர்ப்பை உலக அரங்கில் அதன் வீட்டோபவர் முயற்சியை பாதிக்கும்படி செய்துவிட்டால், அது பொதுவாக்கெடுப்பு எதிர்ப்பை கைவிடும்படி செய்யமுடியும். ஏனெனில் இந்தியாவிற்கு வீட்டோ பவர்கனவை விட பொதுவாக்கெடுப்பை மறுப்பது விட்டுக்கொடுக்கமுடியாத நலன் அல்ல.

மேலும் தேசிய சுயநிர்ணய உரிமையின் 3வது வழிமுறையை அறிவித்தல் செய்து முன்னனி நாடு ஒன்று அல்லது சிவற்றின் மூலம் சர்வதேச ஆதரவை பெற முடியுமானால், அதை பொதுவாக்கெடுப்பிற்கான ஆதரவாக பெருக்குவோமேயானால், விடுதலை மிக நெருக்கத்தில் இருக்கும்.

இறுதியாக
இதுவரை இக்கட்டுரையில் சொல்லப்படாத ஓர் முக்கிய கோட்பாடு ஒன்று உள்ளது. அதையும் சொல்லி விடுவதே இக்கட்டுரையின் பொருளை முழுமைப்படுத்துவதாக அமையும். வலியது வெல்லும் என்பதே அக்கோட்பாடு, வலியது வெல்லும் என்பது மனிதர்களுக்கிடையிலான உறவுகளில் இருக்க கூடாது. இது மனிதரல்லாத உயிர்களுக்கிடையேயும், சடப்பொருள்களுக்கிடையேயும் இருந்து வருவது. விலங்குகளில் எதுவலியதோ அதுவே வெல்லும். சடப்பொருள்களில் எது வலியதோ அதுவே ஆதிக்கம் செய்யும். சூரிய மண்டலத்திற்குள் சூரியனே ஆதிக்க சக்தி, காட்டுக்குள் வலிய விலங்குகளே ஆதிக்க சக்தி. ஒரு புறம் மனித நேயம், மனித உரிமை, மனித சமத்துவம் இவையெல்லாம் பேசப்பட்டாலும் நடைமுறையில் வலியது வெல்லும் என்பதே மனித உறவுகளிலும் வியாபித்து இருக்கிறது.

இலங்கையில் சிங்களர்கள் வலியது வெல்லும் கோட்பாட்டையே ஆரம்பம் முதல் கையிலெடுத்துள்ளனர். தமிழர்கள் மனித உரிமைக் கோட்பாடுகளையே ஆரம்பம் முதல் கையிலெடுத்து போராடுகின்றனர். இருவருமே மனித உரிமைக் கோட்பாடுகளை கையிலெடுத்திருந்தால் பரஸ்பர புரிதலிலேயே ஏதோ ஒரு தீர்வு எட்டபட்டு அது அரைநூற்றாண்டு கடத்திருக்கும். இருவருமே வலியது வெல்லும் வெல்லும் கோட்பாட்டை கையில் எடுத்திருந்தால் சிங்களப் பகுதியிலும் 2 இலட்சம் பிணம் விழுந்து ஈழத்திற்கான சர்வதேச தலையீடு நடந்திருக்கலாம். அந்த 2 இலட்ச சிங்கள உயிர்களை காப்பாற்றியிருப்பது தமிழர்களின் மனித உரிமைக்கோட்பாடுதான். சிங்களத்தை விட சிறிய ஈழம் பதிலுக்கு சிங்களப் பகுதியிலும் தமக்கு ஏற்பட்டதைப்போன்ற இழப்பை ஏற்படுத்த முடியுமா எனில் முடியும்தான். ஒரு தேசிய இனத்தை அழிக்க அதைவிட பெரிய தேசிய இனமாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை, மனித நேயமிக்க கோட்பாடுகளை துறந்துவிட்டால். ஹிரோஷிமா, நாகசாகியில் சுமார் 2 இலட்சம் மக்கள் கூட்டத்தை சொற்ப நிமிடங்களில் கொன்றொழிக்க அமெரிக்காவிற்கு தேவைப்பட்டது 4.5 நபர்களும், 2 விமானங்களும் தான். எனவே இதுவரை சிங்களப்பேரழிவு ஒன்று இல்லாதிருப்பது சிங்களத்தின் வலிமையால் இல்லை. தமிழர்கள் கடைபிடிக்கும் மனித நேயமிக்க கோட்பாடுகளால்தான் என்பதை சிங்கள மக்கள் உணரவேண்டும். தமிழ் இனம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகம் பார்த்துவிட்ட இனம். எனவே மிருகங்களின் கோட்பாட்டை அவர்கள் தமது கோட்பாடாக ஏற்கமாட்டார்கள். இறுதிவரை மனித உரிமை கோட்பாடுகளாலேயே
-சிங்களத்தை வீழ்த்துவது அல்ல- அதிலிருந்து விடுதலை பெற விரும்புகிறார்கள்.

Thanks to: www.nerudal.com

தமிழ் நாட்டின் தமிழர்களே!

எமது அன்பு சகோதரங்களே! தமிழ் நாட்டின் தமிழர்களே! உங்கள் தொப்பிள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களின் மரண ஓலம் கேட்க வில்லையோ ?

நாங்கள் இலங்கைத்தீவில் தமிழர்களாக பிறந்த ஒரே காரணத்தால் இலங்கையில் பெரும்பாண்மை இனமான சிங்களவர்களினால் அடக்கி அடிமைகளாக்கபட்டு எமது பெண்களும், எமதருமைக்குழந்தைகளும், ஈன இரக்கமின்றி சிங்களத்தின் கொடூர பற்களினால் குதறி எறியபடுகின்றனர். ஈழத்தமிழர்களாகிய எமக்கு உயிர் உத்தரவாதம் ஏதுமின்றி சொல்லொன்னா துயரங்களுக்கும், சித்திரவதைகளுக்கும் உள்ளாக்க படுகின்றோம்.

எங்களின் இதய தேசமான எமது தாயக மண்ணில் இருந்து விரட்டப்பட்டு
எமது நிலங்களும், சொத்துக்களும், சிங்களவர்களினால் சூரையாட படுகின்றன.

இலங்கைத்தீவின் தன்மானத்தமிழர்களாகிய நாம், எமக்காக பூட்டப்பட்ட அடிமை விலங்கை உடைத்து எறிய, முப்பத்தைந்து ஆண்டு காலத்துக்கு மேலாக யாருடைய உதவியும் இன்றி, தமிழ் இனத்தின் உரிமை காக்க, வீரம் நிறைந்த எமது தமிழ் வீர மறவர்களோடும், நீதி தவறாத, சாணக்கியமும், வீரமும் நிறைந்த மகத்தான தமிழன், எமது பெருமதிப்பிற்குரிய தேசியத்தலைவரோடும், தமிழீழ மக்களின் ஈடு செய்திட முடியாத அர்ப்பனிப்போடு இரத்தத்தால் எழுதிய வீர விடுதலை வரலாறு படைத்தோம், இவ் உலகத்தில் தமிழர்களாகிய நாம் தலை நிமிர்ந்து நின்றோம்.

எம் தாய்த் தமிழ்நாடே, எமது ஆறு கோடி தமிழ் உறவே, பூ கோளம் எங்களை பிரித்தாலும், தமிழால், கலை-கலாச்சாரத்தினால், பண்பாடுகளினால் இன உணர்வால் நாம் ஒன்றுபட்டவர்கள். உங்களுக்காகவே பாரத தேசத்தை, எம் அன்னை தேசமாக பார்தோம். ஆனால் பாரத தேசம் உட்பட இருபதுக்கு மேற்பட்ட மனிதநேயம் அற்ற நாடுகள், இலங்கைத் தீவீல் பெருபாண்மை இனமான சிங்களவர்களுடன் இனணந்து, தமிழ் இனத்தின் பாரிய வளர்ச்சிகளை கண்டு அஞ்சி, பொறாமை கொண்டு எமது நீதியான நியாயபூர்வமான போராட்டத்தை சிதைத்ததுடன், அதை கொச்சைப்படுத்தி லட்சக்கணக்கான எம் தமிழ் உறவுகளை சாட்சியங்கள் ஏதும் இன்றி இனப்படுகொலை செய்ததுடன்,மிகப்பெரியதோர் மனித அவலத்தை உருவாக்கி தமிழர்களாகிய எமக்கு அநீதி அளித்தனர்.

இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் எமக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய எமது தொப்பிள் கொடி உறவுகளான உங்களையே, பாரத மத்திய அரசின் சதியாலும், சூழ்ச்சியாலும், பல கோடி ரூபாய்களுக்கு ஆசைப்பட்டு தமிழ் இனமானத்தை விற்ற தமிழ் நாட்டின் ஆட்சிப்பீடத்தில் இருக்கும் திமுகவின் துரோகத்தனத்தாலும். எம் தாய் தமிழக உறவுகளான உங்களையே பகடைக்காய்களாக பயண்படுத்தி தமிழர்களாகிய எமது தலைவிதியை தலை கீழாக மாற்றி, தலைகுனிய வைத்ததுதான். சுருக்கமாக சொல்வதென்றால், எமது விரல்களைக்கொண்டே எமது கண்களை குத்தியதுதான்.

தமிழ் நாட்டின், தமிழ் இன உணர்வு அற்ற செயற்பாட்டினால்,

• தமிழ் இனத்தின் மானம் காக்கும் மறத்தமிழனுக்கு தமிழ்நாட்டில் தடை.

• பரிதவித்து வரும் பாவப்பட்ட தமிழருக்கு, அகதிமுகாம் என்ற பெயரில் திறந்த வெளிச்சிறைச்சாலைகள்.

• தமிழ் இனத்திற்காக உயிர்கொடுத்துப் போராடும் தமிழகத்தின் எமது தொப்பிள் கொடி உறவுகள் மீது, தமிழ௧க்காவல்த்துறையின் மனிதாபிமானமற்ற அடக்குமுறைகள்.

• பணம் சம்பாதிப்பதை மட்டுமே இலக்காக் கொண்டு, சிங்ளவன் கொடுக்கின்ற தகவல்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, தமிழர்கள் படும் துயரங்கள், அநர்த்தங்கள் ,அவர்களுடை நியாய பூர்வமான போராட்டத்தை, எழுதவோ எடுத்துக்காட்டவோ தவறிய தமிழ்நாட்டின் தமிழ்த் தொலைகாட்சிகள் தமிழ்ப் பத்திரிக்கைகள், சஞ்சிகைகள்.

• தனி ஈழம் அமைந்துவிடும், தனித் தமிழ்நாடு பிரிந்துவிடும் என்று ௭ண்ணி, தமிழ் இனத்தை அழிக்க, அமைதிகாக்கும் படையென்ற போர்வையில் பல ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களை குடித்து, பாரிய ராணுவ நடவடிக்கைகளையும், பாரிய ராணுவ உதவிகளையும், சிங்கள அரசுக்கு வழங்கி, தமிழர்களை அடிமைகளாக்கிய பாரத நாட்டின் காங்கிரஸ் கட்டமைப்புக்கு, வாக்களித்து ஆட்சி பீடத்துக்கு அனுப்பிய, தமிழ் இனத்திற்கு துரோகம் விலைவித்த ஈனம் அற்ற தமிழர்கள்.

• லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடிமைகளாக அடைக்கப்பட்டிருப்பதை பார்த்தும் அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்க மறுக்கும் இரக்கமற்ற தமிழகத்தின் தமிழ் மக்கள்.

தமிழகமே, தாய் நிலமே, எம் சனமே, எம் இனமே, நாம் உறைந்த சாக்கடை போல் அசைவற்று இருந்தோமேயானால் தமிழ் இனம் நாறும், தமிழர் மானம் போகும், பொங்கி எழுங்கள் புத்துயிர் பெறுங்கள்,தமிழர்களாகிய நாம் ஒன்றுபடுவோம். சீக்கியனும், சிங்களவனும், ஆள்வதற்கா, தமிழர்களாய் நாம் பிற்ந்தோம் ?

தமிழர்கள் வாழ்வை இருள் ஆக்கி, தனக்காகவும் தன் குடும்பத்துக்காகும் அரசியல் நடத்தும் சுயநலவாதி கருணா(நாய்)நிதி, தமிழ் இனத்துக்கு கிடைத்த சாபகேடு. பச்சிளம் குழந்தைகள் பரிதவித்து சாவதைப் பார்த்தும், மனம் இரங்காத கொடும் அரக்கன்
நயவஞ்சகன், தமிழ் இனத்தின் மாபெரும் துரோகியை தமிழர் ஆட்சி பீடத்தில் இருந்து தூக்கி எறியுங்கள்.

தமிழ் மறவர்களே, உங்கள் திரு உடலையும் உயிரையும் தமிழுக்காய், தமிழர்க்காய், தீயியோடு சங்கமிப்பதை விட்டு விட்டு, எவனெல்லாம், தமிழினத்துக்கு எதிராக குரல் கொடுக்கிறானோ, தமிழர்களுக்கெதிராக தலை தூக்குகிறானோ அவன் தலையை துண்டியுங்கள். அதுவே தமிழ் அன்னைக்கு தமிழர்களாகிய நாம் செய்யும் பால் அபிஷேகம்.

தமிழகமே, பெருமதிப்பிற்குரிய புரட்சி தலைவர் எம்.ஜி ராமச்சந்திரன் அவர்களின் ஆட்சி காலத்துக்கு பிறகு வந்த ஆட்சியாளர் யாவரும் மாபெரும் சுயநலவாதிகளும் , தமிழ் இனபற்று அற்றவர்களே.

• தமிழர்களே, பொதுநலம் கொண்ட பச்சைத் தமிழன், எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று வாழும் தமிழன், தமிழர்களை உயிருக்கும் மேலாக நேசிக்கும் தமிழன், தமிழர்களின் வாழ்வை, வாழ்விடங்களை, கட்டியெழுப்பத் துடிக்கும் தமிழன், உலகத் தமிழனை அன்போடு ஆதரிக்கும் பண்புள்ள தமிழனை, தமீழகத்தில் இனம் கண்டு ஆட்சிப் பீடத்துக்கு அனுப்புங்கள்.

பாரத தேசம், உலக தமிழ் இனத்துக்கு, மனிதாபிமானம் அற்ற முறையில் செய்த துரோகத்திற்கு தமிழ் நாட்டின் தமிழர்கள் தனிதமிழ் நாடு அமைவதற்கான வாக்கெடுப்பொன்றை மேற்கொண்டு பிரிவினை போரை ஆரம்பித்தல் வேண்டும்.

உலகத்தமிழரின் அடிமை விலங்கை உடைத்து, இந்தப் பூமிப்பந்தில் தமிழர்களுக்கான புதிய வரலாறுடன் தமிழர் தேசங்கள் அமைப்போம்.

இந்த தமிழர் புரட்சியை தமிழர்களாகிய நாம் செய்யத் தவறும் பட்சத்தில், ஆயிரம் ஆயிரம் பிரபாகரன்கள் தமிழ் இனத்தின் மானம் காக்க பிறந்தாலும், ஆயிரம் ஆயிரம்
முத்துகுமார்கள் தமிழர்களின் நல் வாழ்வுக்காய் மடிந்தாலும் தமிழர்களாகிய நாம் இவ் உலத்தில் நிரந்தர அடிமைகளே ! தன் பெயரில் நாடு உள்ளதென்று பெருமிதம் அடையும் அடிமைகள் நாடே தமிழ்நாடு.

பரிதவிக்கும் தமிழர்கள்.

Monday, August 31, 2009

சிங்களவர்களால் சிதைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள்: மீண்டும் அதிர்ச்சியூட்டும் படங்கள்





இலங்கையில் உள்ள இராணுவ வதை முகாமில் தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று நிர்வாணமாக்கி, தலையில் சுடும் காட்சிகளை லண்டனில் உள்ள சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டது.

இந்நிலையில் இலங்கை இராணுவம் ஈழத்தமிழர்களை கொன்று பெண்களையும் இளைஞர்களையும் முழுநிர்வாணமாக்கி புகைப்படங்களை எடுத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. விமான ஓடுபாதையில் இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.

இது அனுராதபுரம் வான் தாக்குதலாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இறந்த போராளியின் மீது தனது பூட்ஸ் காலை வைத்து இலங்கை இராணுவம் புகைப்படம் எடுத்துள்ளது.

இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தவேண்டாம். ஒரு குழிக்குள்ளாவது போட்டு புதைத்திருக்கலாம். அப்படி செய்யாமல் காக்கா,குருவி கொத்தித்தின்ன அப்படியே போட்டு வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இறந்த உடலத்தை நிர்வாணமாக்கிப் பார்க்கும் சாக்கடைப் புத்தி உலகிலேயே சிங்கள இனத்திற்கு மட்டும் தான் இருக்கும் என்று ஈழ ஆதரவாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.

Thursday, August 27, 2009

காலத்தை தவறவிட்டால் வரலாறு எம்மை மன்னிக்காது

தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் தொடர்ச்சியான இன அழிப்பின் கோரத்தாண்டவம் ஒன்றை பிரித்தானியாவின் சனல் போஃர் தொலைக்காட்சி நிறுவனம் துணிச்சலாக வெளிக்கொண்டு வந்துள்ளது.

சிறீலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பே இந்த காணொளியை வெளியிட்டிருந்தது. அதனை பிரித்தானியா தொலைக்காட்சி துணிச்சலாக உலகின் கண்களின் முன் கொண்டுவந்துள்ளது. இந்த நவீன உலகில் காண்பவர்கள் கண்கலங்கி போகும் அளவிற்கு நிர்வாணமாக இழுத்து வரப்படும் இளைஞர்கள் ரீ-56 ரக துப்பாக்கிகள் மூலம் மிக அருகில் வைத்து தலையில் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் மனித மனங்களை உலுக்கியுள்ளது.

இந்த படுகொலையானது இந்த வருடத்தின் ஜனவரி மாதமளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழப்பகுதிகளில் இருந்து இராணுவத்தினரால் வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள், கைதுசெய்யப்பட்டவர்களே பெருமளவில் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்பது தெளிவானது.

தொழில்நுட்ப வசதிகள் குறைந்த முன்னைய காலங்களில் உலகில் நடைபெற்ற படுகொலைகளுக்கான ஆதாரங்களை சேகரிப்பது கடினமானது. ஆனாலும் கூட ஆதாரங்களை தேடி கண்டறிந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை தண்டித்த இந்த ஜனநாயக உலகம் மிருகங்களை போல வெட்ட வெளிகளுக்குள் இழுத்து வரப்பட்டு தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான பல ஆதராங்கள் கிடைத்துள்ள நிலையில் என்ன நடவடிக்கையை எடுக்கப்போகின்றது?

சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர் குற்றங்கள் பலவற்றிற்கான ஆதாரங்களை மேற்குலக ஊடகங்கள் துணிச்சலாக வெளியிட்டு வரும் நிலையில் ஐ.நாவையும், மனித உரிமைகள் மீது சிறிதளவேனும் நம்பிக்கை கொண்டுள்ள மேற்குலக நாடுகளையும், அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களையும் நோக்கி நாம் மிகப்பெரும் அழுத்தங்களை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

சிங்கள இனவெறியர்களின் இந்த கோரத்தாண்டவத்தையும், ஆதரவற்ற நிலையில் அனாதரவாக செத்துவிழும் தமிழ் மக்களின் தலைவிதியையும் வெளிக்கொண்டுவந்துள்ள இந்த காணொளி படத்தை உலகில் உள்ள ஒவ்வொரு தமிழ் மகனும் பார்க்க வேண்டும்.

அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இதனை பார்க்கவேண்டும். முடிந்தால் உலகத்தின் அத்தனை மனித குலங்களும் இதனை பார்க்கவேண்டும் அதற்கான வழியை நாம் ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் எத்தனையோ பல ஊடகங்கள் உள்ள நிலையில் அவை தமிழ் இனத்தின் பேரவலம் தொடர்பாக தனித்துவமாக செய்திகளை சேகரித்து போட முடியாத நிலையில் மேற்குலக ஊடகங்கள் தமிழ் மக்களின் பேரவலங்களை துணிச்சலுடன் வெளிக்கொண்டுவருவது மிகவும் போற்றத்தக்கது.

தமிழக தொலைக்காட்சிகள் களிப்பூட்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பில் எம்மை ஒரு மயைக்குள் தள்ளிவருகையில் மேற்குலகம் எமக்காக குரல்கொடுப்பது எமக்குள் ஒரு சிறிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி வருகின்றது.

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலகில் பரந்து வாழும் அத்தனை தமிழ் மக்களும் ஒன்று திரண்டு போராடுவதற்கு தேவையான ஆதாரங்களை மேற்குலக ஊடகங்கள் மெல்ல மெல்ல வலுப்படுத்தி வருகின்றன. ஆனால் அதற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டிய கடமை எம்மிடம் தான் உண்டு.

தமிழ் இன அழிப்பில் ஈடுபட்ட படை அதிகாரிகளை வெளிநாடுகளில் தூதுவர்களாக நியமிப்பதன் மூலமும், அவர்களை ஐ.நா சபைக்கு அழைத்து செல்வதன் மூலமும் அவர்களின் மீதுள்ள குருதிக்கறைகளை சிறீலங்கா அரசு கழுவ முற்படுகின்றது. ஆனால் அதனை தடுத்து நிறுத்தி அனைத்துலக நீதிமன்றத்தில் சிறீலங்கா அரசினை நிறுத்த வேண்டிய கடமையும், அதற்கான பலமும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு உண்டு. அதற்கான காலம் இன்னும் கடந்துவிடவில்லை.

ஆனால் காலத்தை நாம் தவறவிட்டால் வரலாறும் எம்மை ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை.

Thanks to: www.sankathi.com

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்தே இன்னும் பல தமிழர்களை கொல்வோம்!

அறிக்கையும், விளக்கமும் பெற்றுக் கொள்வோம் ...!
நேற்று காலையில் இணையத்தை பயன்படுத்தும் தமிழர்கள் அனைவருக்கும் அந்த காணொளியை காணும் வாய்ப்பு கண்டிப்பாக கிடைத்து இருக்கும். நிர்வாணமான நிலையில் கரங்கள் கட்டப்பட்டு கும்பல் கும்பலாக தமிழர்களை சிங்கள சிப்பாய்கள் சுட்டு வீழ்த்தி பிணக்காடாக மாற்றி வைத்திருக்கும் கொடுமையை சேனல் 4 என்னும் இங்கிலாந்து ஊடகம் அம்பலப்படுத்தி இருப்பதை. உண்மையிலேயே தமிழ் தாய்க்கு பிறந்த எவனுக்கும் கண்களில் கண்ணீர் துளிர்த்து இருக்கும், தமிழன் என்றாலே ஆடைகளை அவிழ்த்து பார்ப்பது சிங்களன் வழக்கம் போல. சில மாதங்களுக்கு முன்னே போரில் செத்து விழுந்த தமிழ் போராளி பெண்களை நிர்வாணப்படுத்தி இணையதளங்களில் உலவ விட்டான் சிங்கள காடையன் என்ன செய்ய முடிந்தது நம்மால்?

முத்துகுமார் போன்ற உணர்வாளர்கள் தீ குளித்து உயிர்விட்டதுதான் மிச்சம். அடைக்கலம் கேட்ட தமிழ் மக்களை நிர்வாணப்படுத்தி நடக்க வைத்தான் சிங்களன் என்ற பொழுதும் நம்மால் வாய்திறக்க முடியவில்லையே?. கொத்து கொத்தாக தமிழர்கள் மீது குண்டுவிழுந்த பொழுது நாம்மில் பலர் “யுத்தத்தை நிறுத்துங்கள் என்று இலங்கையை நிர்பந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம். இறையாண்மை மிகுந்த இலங்கையில் இந்தியா தலையிடாது என்று பதில் வந்ததே தவிர தமிழனுக்காக இந்திய அரசாங்கம் குரல் எதுவும் கொடுத்ததா?
தவிர்க்கவே முடியாமல் இந்தக் காணொளி தமிழக அணைத்து ஊடகங்களிலும் நேற்று முதல் வெளியாகிக் கொண்டிருக்கின்றன...

இதை அறிந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா " இந்த சம்பவங்கள் குறித்து இலங்கைக்கான தூதரிடம் அறிக்கை கேட்டுள்ளோம் என்று, அல்லது விளக்கம் கேட்டுள்ளோம் என்று ...

நமக்குத் தான் தெரியுமே...! இவர்களின் விளக்கம், அறிக்கை குறித்து...நாம் அன்றாடம் இவர்கள் சொல்ல கேட்டுள்ளோம்.... பாகிஸ்தானுக்கு இவர்கள் கொடுக்கும் அறிக்கையும், விளக்கமும்...இதை அப்படியே பாகிஸ்தான் இவர்களுக்கு திருப்பிக் கொடுப்பதையும்...அதுபோல் இனிமேல் சிங்கள அரசிடம் இருந்தும் இனி அறிக்கை மற்றும் விளக்கம் வரும் ....!
இந்தியனாய் இருப்போம்...! தமிழர்களைக் கொள்வோம்..!

Thanks to: www.eeladhesam.com

தமிழீழ மக்களுக்கான அவசர வேண்டுகோள்: கொலைகார சிறிலங்காவுக்கு தண்டனை வழங்க உதவுங்கள்

இலங்கை இனவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆஸ்திரேலியா அரசாங்கத்தை கோரும் இந்த மனுவுக்கு உங்கள் அனைவரினதும் கையெழுத்து மிகவும் அவசியம்.

அனைவரையும் இதில் பங்களிக்குமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம். உங்களுக்கு தெரிந்த அனைவரையும் இதில் கையெழுத்து இடுமாறும் கேளுங்கள், அவர்கள் வேற்று இனத்தவர் என்றால் இந்த காணொளி இணைப்பை அவர்களுக்கு காண்பியுங்கள்.

இந்த இணைப்பை அழுத்தி உங்கள் பங்களிப்பை செய்யுங்கள்
http://www.voiceagainstgenocide.org/vag/node/116


ராஜபக்சேவை சர்வதேச போர்குற்றவாளியாக உலக நாடுகள் அறிவிக்க வேண்டும் - வைகோ


தமிழர்களைக் கொன்று குவிப்பதில் இலங்கை அரசு நடத்திய ரத்த வெறியாட்டங்கள் அம்பலத்துக்கு வந்தே தீரும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொட‌ர்பாக அவர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், இலங்கையின் சிங்கள கொலைபாதக அரசு, தமிழ் இனத்தை கரு அறுக்கும் திட்டத்தோடு, கோரப் படுகொலைகளை நடத்தி வருகிறது என்று தொடர்ந்து நாம் கூறிவந்த குற்றச்சா‌ற்றுகள், நூற்றுக்கு நூறு உண்மை என்பதற்கு மறுக்க முடியாத சாட்சியம் கிடைத்துள்ளது.

உலகில் இருட்டடிப்பு செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களையும், அவலங்களையும் லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. அதே தொலைக்காட்சி, நேற்றைய தினம் வெளியிட்டு உள்ள தமிழர் படுகொலை காட்சிகள், இருதயத்தை பிளக்கின்றன.

கடந்த ஜனவரி மாதத்தில் தமிழ் இளைஞர்கள் இலங்கை ராணுவத்தால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகளை அந்தத் தொலைக்காட்சி கடந்த திங்கள்கிழமை ஒளிபரப்பியுள்ளது.

அந்த இளைஞர்களை முழு நிர்வாணமாக்கி, கைகளை பின்புறமாகக் கட்டி விலங்கிட்டு, தரையில் உட்கார வைக்கப்பட்டு அவர்களின் தலையிலும், பிடரியிலும், முதுகிலும் இலங்கை ராணுவத்தினர் சுட்டுக் கொல்லும் காட்சிகள் அத் தொலைக்காட்சி ஒளிபரப்பில் இடம்பெற்றுள்ளன.

அந்தத் தமிழ் இளைஞர்கள் உயிர் பிழைக்க முயன்று, குண்டுகள் சீறி வரும்போது தலையை அங்குமிங்கும் அசைப்பதும், அதையும் மீறி அவர்கள் உடலில் குண்டுகள் பாய்ந்து அவர்கள் துடிதுடிக்க இறப்பதையும் பார்க்கும்போது, நம் உள்ளம் வேதனை அடைகிறது.

சிங்கள ராணுவம் செய்து இருக்கின்ற படுகொலைகளுக்கு அனைத்து நாடுகளின் அரசுகளும் கண்டனம் தெரிவிப்பதோடு, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் சிங்கள ராஜபக்சே அரசையும், ராணுவ தளபதிகளையும், கொடுஞ் செயலில் ஈடுபட்ட ராணுவத்தினரையும் குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டிக்க முன்வர வேண்டும்.

முல்லைத் தீவு மாவட்டத்தில், வன்னிப் பிரதேசத்தில், இப்படி நிர்வாணமாக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டு சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட இக்கொடுஞ் செயலுக்கும், தமிழர்கள் சிந்திய ரத்தத்துக்கும், சிங்கள அரசு மட்டும் அல்ல, இந்திய அரசும் பொறுப்பாளி ஆகும். தமிழர்களின் அழிவுக்கு காரணமான ஆயுதங்களையும், அனைத்து ராணுவ உதவிகளையும் அளித்த இந்திய அரசுக்கு தமிழர் வரலாற்றில் எந்நாளும் மன்னிப்பு கிடையாது எ‌ன்று வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

Wednesday, August 26, 2009

இலங்கை தமிழினப் படுகொலையின் கொடுரம்

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டு விட்டோம் என்று சிறீலங்கா அரசாங்கம் அறிவித்து மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், வெளிவந்துள்ள காணொளியானது சிறீலங்காப் படையினரிடம் அகப்பட்டுள்ள தமிழர்களை சிறீலங்கா அரசாங்கம் படுகொலை செய்கின்றது என்பதை உறுதி செய்துள்ளது.

தமிழ் இளைஞர்கள் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதைக்குள் உள்ளாக்கப்பட்டு, ஆடைகள் களையப்பட்டு, கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் தரைவெளி ஒன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பின்னர் சிறீலங்காப் படையினர் குறிந்த இளைஞர்களைக் கேலி செய்து சிரிப்பதோடு, மூடுகாலணிகளால் உதைந்து அவர்களைக் சுட்டுச் கொன்றுள்ளனர்.

காணொளியில் ஒன்பது இளைஞர்களை சிறீலங்காப் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இப்படுகொலைக் காணொளியானது சிறீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இக்காணொளியானது கடந்த சனவரிமாதம் பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் மற்றும் மனதளவில் தையிரியம் இல்லாதவர்கள் தயவு செய்து இதைப் பார்க்க வேண்டாம்

Friday, August 21, 2009

உலகத் தமிழர் பிரகடனம் - முழு சாராம்சம்




தெளிவாக படிக்க image மீது click செய்யவும்.

உலகத் தமிழர் பிரகடனம் : சென்னையில் வெளியிடப்பட்டது



இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனம் ; சென்னையில் வெளியிடப்பட்டது.

உலகத்
தமிழர் பிரகடனத்தை மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலர் வைகோ படித்து வெளியிட்டார்.

பிரகடனம் படித்து முடிக்கப்பட்ட பிறகு ஈழத் தமிழர்களுக்கு உதவ சர்வபறி தியாகத்திற்கும் தயார் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஏராளமான கருஞ்சட்டை தரித்த இளைஞர்கள் தீப்பந்தம் ஏந்தி அந்த உறுதிமொழியை ஏற்றனர். அவர்கள் அனைவருடைய சட்டையிலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் படம் அச்சிடப்பட்டிருந்தது. பின்புறத்தில் தமிழீழத்தின் வரைபடம் அச்சிடப்பட்டிருந்தது.

உலகத் தமிழர் பிரகடனம் வருமாறு :


1
ஈழத் தமிழ் மக்களின் மரபு வழி தாயகத்தில் அவர்களுக்கு முழுமையான மனித, ஜனநாயக உரிமைகள் வழங்கிடவும், அதற்கேற்ற அரசியல் அமைப்பிற்கு உத்தரவாதம் தரக்கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக உலக மக்களின், அரசுகளின் ஆதரவைத் திரட்டிடவும், ஈழத் தமிழ் மக்கள் ஒப்புக்கொள்ளக் கூடியத் தீர்வு ஒன்றை அவர்களின் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரே வழி என்பதிலும் நாங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

2. தங்கள் தாயகத்திலும், உலக நாடுகளிலும் புலம் பெயர்ந்திருக்கக்கூடிய ஈழத் தமிழர்கள் அனைவரும் அவரவர்களின் ஊர்களிலும், வீடுகளிலும் மீண்டும் குடியேறவும், அமைதியான, இயல்பான, சுதந்திரமான வாழ்க்கையை நடத்தவும் துணை நிற்க நாங்கள் உறுதி பூணு‌கிறோ‌ம்.

3.
தமிழர் தாயக மண்ணில் அத்துமீறி உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களையும், சிங்கள ராணுவ முகாம்களையும் மற்றும் ராணுவ ரீதியான அமைப்புகளையும் வெளியேற்ற வேண்டும் என ஐ.நா.வை வற்புறுத்த நாங்கள் உறுதி பூணுகிறோம்.

4.
இலங்கையில் மனித நேய உணர்வை மீறித் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளையும், கொலைகளையும் செய்த சிங்கள ராணுவ அதிகாரிகளும், அவர்களை ஏவிவிட்ட சிங்கள அரசியல் வாதிகளும் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள நாங்கள் உறுதி பூணுகிறோம்.

5.
உலகில் உள்ள மற்ற தேசிய இன மக்களைப் போல முழுமையான, இறைமை உள்ள மக்களாக வாழும் உரிமையில் தங்களின் எதிர்காலத்தை தாங்களே முடிவு செய்துகொள்ளும் உரிமையும் ஈழத் தமிழர்களுக்கு இயற்கையாக உண்டு என்பதையும் அந்த வாழ்வுரிமையை அவர்கள் நிலைநிறுத்திக்கொள்ள அவர்களுக்கு தோள் கொடுத்து துணை நிற்க உலகத் தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.

6.
அளப்ப‌ரிய தியாங்களைச் செய்த ஈழத் தமிழ் மக்களும், அவர்களுக்காக இறுதிவரை போராடிய போராளிகளும், வீறுகொண்டு நடத்திய விடுதலைப் போராட்டம் பல நாடுகளின் கூட்டுச் சதியின் விளைவாக பின்னடைவைச் சந்திக்க நேர்ந்திருப்பது தற்காலிகமானது. மீண்டும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அந்த மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு உருவாவதற்கும் நாங்கள் முழுமையாக உதவுவோம். அதற்காக எங்களை முற்றிலுமாக ஒப்படைத்துக்கொண்டு எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருப்போம் என உலகளாவிய தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.

Tuesday, August 18, 2009

நாடு கடந்த தமிழீழ அரசு - உதவ முன்வருமாறு உலகத் தமிழ் அமைப்புகளுக்கு ருத்திரகுமாரன் வேண்டுகோள்


ஈழத்து தமிழ் பேசும் மக்களின் அதிஉயர் அரசியல்பீடமாக - உலகத் தமிழர்களின் நேரடி வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து - நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்தினை திடமாகவும் விரைவாகவும் முன்னெடுப்பதற்கு முன்வருமாறு அந்தத் திட்டத்தின் உருவாக்கச் செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் உலகத் தமிழ் அமைப்புகளுக்கு வேண்கோள் விடுத்துள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் திட்டச் செயற்குழுவின் சார்பாக அவர் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

"உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழர் அமைப்புக்கள் இந்தத் திட்டத்துக்கு தமது அதிகாரபூர்வ ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்கி வருவது இந்தத் திட்டத்துக்கு வலுச்சேர்த்து வருகிறது.

ஏற்கெனவே - பிரித்தானிய தமிழர் பேரவை, கனடியத் தமிழர் பேரவை, அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கம், சுவிஸ் தமிழர் பேரவை, பிரான்ஸ் தமிழீழ மக்கள் அவை, தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம், தமிழ் நாடு திராவிடர் பேரவை உட்பட பல அமைப்புக்கள் இந்தத் திட்டத்தின் வெற்றிக்காக தமது அதிகாரபூர்வ ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த அமைப்புக்களுக்கு எமது நன்றியினைத் தெரிவிக்கும் அதேவேளை, உலகளாவிய ரீதியில் இயங்கும் ஏனைய தமிழர் அமைப்புக்கள் எல்லோரிடமும் இந்தத் திட்டத்துக்கு ஆதரவினை வழங்குமாறும் எம்முடன் சேர்ந்தியங்க முன்வருமாறும் உரிமையுடன் வேண்டிக் கொள்கிறோம்." என்று தெரிவிக்கும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையை நசுக்கி விடுவதற்கு சிறிலங்கா அரசு பகீரத முயற்சி செய்து வருவதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம். தாயகத்தில் நமது தேசத்தின் மீது தான் நிலைநிறுத்தியுள்ள இராணுவ மேலாதிக்க நிலையின் மூலம் தமிழர் தேசத்தை அடிமைப்படுத்திவிடலாம் என்ற இறுமாப்புடன் செயற்பட்டுவரும் சிங்கள அரசு, தற்போது தனது இராணுவக் கொடும் கரங்களை சிறிலங்காவின் எல்லை தாண்டியும் விரித்துள்ளது. இதன் மூலம் புலத்தில் தமிழர் உரிமைப் போராட்டச் செயற்பாடுகளை நசுக்கிவிடலாம் என சிங்கள அரசு எண்ணுகிறது.

சிறிலங்கா அரசின் இராணுவ மேலாதிக்க நிலையுடனான அடக்குமுறைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் தாயகத்திலோ புலத்திலோ ஈழத்தமிழர் தேசம் அடிபணியப் போவதில்லை. தாயகத்தில் நமது மக்கள் தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புக்களாலும் இதனை வெளிப்படுத்த முனைகின்றனர். அண்மையில் நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மூலமும் மக்கள் இதனைத் தம்மால் இயன்றவரை வெளிப்படுத்தியுள்ளனர்.

புலத்தில் மக்களின் நேரடி வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து, ஈழத் தமிழர் தேசத்தின் அதிஉயர் அரசியல்பீடமாக அமையும் வண்ணம் நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்துக்கான செயற்பாடுகளை நாம் மிகவும் திடமாகவும் விரைவாகவும் முன்னெடுக்க உறுதிபூண்டுள்ளோம். நாம் வாழும் நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்ட வகையில், தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக போராடும் நமது ஜனநாயக உரிமையில் எவரும் தலையீடு செய்ய நாம் அனுமதிக்க முடியாது.

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டம் தொடர்பான விளக்கக் கோவை ஒன்றினை நாம் இம்மாத இறுதிக்குள் வெளியிடவுள்ளோம். இத்திட்டம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும் உரிய விளக்கங்களை இக்கோவை கொண்டிருக்கும்.

ஒவ்வாரு நாட்டிலும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக நாடு தழுவிய ரீதியில் அமைக்கப்படும் செயற்குழு விபரங்களையும் நாம் விரைவில் வெளிப்படுத்தவுள்ளோம்.

இக்குழுக்கள் தமிழ் மக்கள் மத்தியிலும் அனைத்துலக சமூகத்தின் மத்தியிலும் நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்துக்கு ஆதரவு திரட்டி திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக உழைக்கும்.

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்தின் வெற்றிக்கு நம் ஒவ்வொருவரினதும் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானதாகும்.

இத்திட்டத்துடன் இணைந்து செயற்பட ஆர்வமுள்ளவர்களை எம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கிறோம்.

எம்முடனான தொடர்புகளுக்குரிய மின்னஞ்சல் முகவரி: info@govtamileelam.org

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

தடம்புரண்ட திருமாவளவன்

திருமாவளவன்., ஈழம் எனும் உலகத்தமிழர்களின் கனவுக்கு உணர்ச்சிப் பங்காற்ற இன்னுமொருவர் கிடைத்துவிட்டார் என்ற மகிழ்ச்சியை சில காலம் முன்பு நமக்கு ஏற்படுத்திய மாவீரன்...

ஆனால் அதன் பின்பு, காலமும் ஓடியது, நாடளுமன்றத்துக்கு தேர்தலும் வந்தது.. அவர் கொண்ட கோலமும் மாறியது..

தன் குடும்பத்துக்காக ஒட்டுமொத்த தமிழினத்தையும் குழிதோண்டி புதைத்த கருணாநிதியிடம் பதவிக்காக மண்டியிட்டார்.

அதற்கு
முதல் நாள் வரை ஈழத்தமிழனத்தின் அழிவுக்கு முதற்க்காரணம் காங்கிரசும், அதன் தலைவி சோனியாவும் தான் என்று முழங்கிவந்த திருமாவளவன், தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அன்னை சோனியா ஒருவரால் மட்டுமே ஈழத்தமிழர்களுக்கான உரிமையை மீட்டுத்தமுடியும் என்று மகுடி ஊதினார்.

இப்போழுது மீண்டும் தன் பிறந்தனாள் பொதுக்கூட்டத்தை 'எழும் தமிழ் ஏழம்' என்ற பெயரில் கூட்டத்தைக்கூட்டி கொண்டாடியிருக்கிறார்.அதன் விளைவு மீண்டும் தேசியத்தலைவர் பற்றியும், விடுதலைப்போராட்டத்தைப் பற்றியும் பேசக்கூடாது என தடை.

எடுத்தற்கெள்ளாம் மத்திய அரசை பற்றி மட்டும் குற்றம் சாட்டும் திருமாவளவன், காங்கிரசுக்கு ஒத்து ஊதும் ஜால்ரா தமிழக முதல்வர் கருணாநிதியை பற்றி மட்டும் வாய் திறக்காதது ஏனோ கைது பயமா?..
இல்லை வாயைத்திறக்க முடியாத அளவிற்க்கு கட்டு கட்டாக எதையும் வைத்து வாயை அடைத்து விட்டார்களா?..

இவரை இப்போது பார்க்கும் போதெல்லாம், தன் குடும்பத்தினர்களுக்கு விருப்பபட்ட துறைகளை அமைச்சர் பதவிகளாக வாங்க டெல்லியில் முகாமிட்டு வாங்கிவந்த கருணாநிதியின் பின்னால் இவர் பம்முவதை பார்க்கும் போதெல்லாம், குள்ள நரியின் பின்னால் அதன் எச்சிலை பொறுக்கி திங்க திரியும் பூனையை போல் தன் இப்போது தெரிகிறார்.

வாழ்க திருமா.. வாழ்க திருமாவின் தமிழ்ப்பற்று...

Wednesday, August 5, 2009

கருத்துரிமைகள் பாதுகாப்புக் கழகம் முன்னெடுக்கும் 100 தமிழ் இனமான உணர்வாளர்கள் 100 நாட்கள் தமிழக பட்டி தொட்டியெங்கும் தொப்புள் கொடி உறவைக் காக்க பயணம்

தமிழ்ச் சொந்தங்களே! ஈழத்தில் இனப்படுகொலைக்கு ஆளான 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவும் -
இன்றும், மூன்றரை லட்சத்திற்கும் மேலான எண்ணிக்கையில் நமது ரத்தம், நமது சொந்தம், நமது தொப்புள் கொடி உறவுகள் மின்சாரம் பாய்ச்சிய முள்கம்பி வேலிக்குள்- தவித்த வாய்க்குத் தண்ணீரின்றி, பசித்த வயிற்றுக்குச் சோறின்றி, பட்ட காயத்திற்கு மருந்தின்றி, சிங்களனின் பாலியல் வன்கொடுமைக்கு நம் பெண்கள் பலியாக, அவனின் இனக் கொலைவெறிக்கு நம் இளைஞர்கள் பலியாக, வாரம் ஒன்றுக்கு நம் தொப்புள் கொடி உறவுகள் 1400 பேரை மரணம் வாரிக்கொண்டு போகும் கொடுமைச் சேதிகளையெல்லாம் ஊடகங்களின் இருட்டடிப்பினால் என்ன நடக்கிறது என்பதே அறியாமல் காடு கழனிகளில் உழலும் நம் தாயகச் சொந்தங்களுக்கு கொண்டு சேர்க்கவும்
தொப்புள் கொடி உறவு காக்கத் தொடர் பயணம் !

செயற்திட்டம்
இந்த தொடர் பயணம் ஆகஸ்து 1 முதல் தொடர்ந்து நூறு நாட்களுக்கு நடைபெறும்.
100 உணர்வாளர்களும் பத்து பத்துப் பேர் கொண்ட 10 அணிகளாகப் பிரிந்து பயணம் செய்தல்.
தமிழகத்தின் அணைத்து மாவட்டங்களும் கீழ்க்கண்டவாறு 10 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணிக்கும் ஒரு மண்டலம் ஒதுக்கப்பட்டு, அந்தெந்த மண்டலத்தில் உள்ள மாவட்டங்கள் முழுதும் 100 நாட்கள் பயணம் செய்து பரப்புரை செய்தல்.
நெல்லை மாவட்டம் நாகர்கோவில், தூத்துக்குடி,நெல்லை
மதுரை மாவட்டம் மதுரை, தேனி, திண்டுக்கல்
இராமநாதபுர மாவட்டம் இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை
தஞ்சை மாவட்டம் தஞ்சை, நாகை, புதுக்கோட்டை
கோவை மாவட்டம் கோவை, திருப்பூர்,ஈரோடு, நீலகிரி
திருச்சி மாவட்டம் திருச்சி, அரியலூர்,பெரம்பலூர்
சேலம் மாவட்டம் கரூர்,சேலம்,நாமக்கல்
வேலூர் மாவட்டம் வேலூர்,திருவண்ணாமலை, தருமபுரி,கிருஷ்ணகிரி
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம்,கடலூர்
காஞ்சி மாவட்டம் காஞ்சிபுரம், திருவள்ளூர்

தினந்தோறும் மாலையில் மேற்கண்ட மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாகச் செல்லுதல்.
ஈழத்து அவலங்களைச் சித்தரிக்கும் புகைப்படங்களைக் காட்சிக்கு வைத்தல்.

ஈழத்தில் மாண்டு போன நம் தொப்புள் கொடி உறவுகளுக்கும், இங்கே சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட 400 க்கு மேற்பட்ட மீனவர்களுக்கும், ஈழத்துச் சொந்தங்களைக் காக்கும் முயற்சியில் தங்கள் இன்னுயிர் ஈந்த முத்துக்குமார் உள்ளிட்ட 16 ஈகியருக்கும், அந்தக் கிராம மக்களோடு சேர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துதல்.

அதன் பிறகு ஈழ போரின் குறுந்தகடுகளை அந்த மக்களுக்குத் திரையிட்டுக் காட்டி, உண்மை நிலையனைத்தையும் அவர்கள் உணரும்படிச் செய்தல்.
பின் பொதுக்கூட்டம் போல் நடத்தாமல், அவர்களோடு அமர்ந்து, கலந்துரையாடி, இவ்வகையில் அவர்களிஇன் அணைத்து ஐயப்பாடுகளையும் நீக்குதல்.
நிறைவாக, முள்கம்பி வேலிக்குள் தவிக்கும் நம் மூன்றரை லட்சம் உறவுகளை விடுவிப்போம் என அந்தக் கிராம மக்களும் நாமும் சேர்ந்து உறுதிமொழி ஏற்றல்.
தினமும் மாலை தொடங்கி, இரவு 10 மணிக்குள்ளாக 2 கிராமங்களுக்காவது செல்லுதல்.
பகலில் கல்லூரி முடிந்த பிறகு, தினமும் மாணவர்களைச் சந்தித்து உணர்வுகளைக் கண்டறிந்து, அவர்கள் மூலம் உணர்வாளர்களைச் சேர்த்து, 100 நாட்களுக்குள்ளாக அந்தெந்த மண்டலத்தில் உள்ள அணைத்து கல்லூரிகளிலும் " இன உணர்வு " மேலோங்கி நிற்கச் செய்தல்.
சனி,ஞாயிறு நாட்களில் முற்பகலில் உள் அரங்கங்களில் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தமிழ் தேசிய உணர்வும், இன உணர்வும் மேலோங்கும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்துதல்.
100 நாள் பயணத் திட்டம் முடிவதற்குள்ளாக ஒரு மாவட்டத்தில் இளைஞர்களை மாணவர்களை உள்ளடக்கிய 1000 உணர்வாளர்களுக்குக் குறையாமல் இயக்கத்தில் இணைத்தல்.
பயணம் முடியப் போகும் கடைசி 10 நாட்களுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கண்ட 1000 உணர்வாளர்களையும் வரவழைத்து சிறந்த கருத்தரங்கமாக அதனை நடத்தி முடித்தல்.

இதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சருகணி என்ற கிராமத்தில் புகைப்பட கண்காட்சியையும், குறுந்தகடு திரையிடப்பட்டன. பொதுமக்கள் பெருந்திரளாக
பங்கெடுத்தனர்..இந்நிகழ்ச்சி ராமநாதபுர மாவட்ட செயலர் திரு.முகிலன்
அவர்களால் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கருத்துரிமைப் பாதுகாப்பு தலைவர் திரு, சீதைமைந்தன், தஞ்சை மாவட்ட செயலர், காஞ்சிபுர மாவட்ட செயலர் மற்றும் கருத்துரிமைப் பாதுகாப்பு கழக செய்தி தொடர்பாளர் விண்ணகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Thanks to: www.eeladhesam.com

Tuesday, August 4, 2009

சிறிலங்கா ஆடைகளைப் புறக்கணிக்குமாறு அமெரிக்காவில் தமிழர்கள் போராட்டம்


சிறிலங்காவில் தயாரிக்கப்படும் தைக்கப்பட்ட ஆடைகளைப் புறக்கணிக்குமாறு கோரி நேற்று முன்நாள் அமெரிக்காவில் நடத்தப்பட்ட முதற்கட்டப் போராட்டத்துக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளதாகவும், இந்தப் போராட்டத்தை அமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப் போவதாகவும் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திவரும் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் பெரும் சந்தை வாய்ப்பைப் பெற்றிருக்கும் சிறிலங்கா ஆடைகளை அமெரிக்க மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனக் கோரும் போராட்டம் நேற்று முன்நாள் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

இதில் பெரும் தொகையானவர்கள் கலந்துகொண்டதுடன், விற்பனையாளர்கள், கொள்வனவு செய்ய வந்தவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரதும் ஆதரவு கிடைத்ததால் இது பெரும் வெற்றி பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Thanks to: www.nerudal.com


என் இனத்திற்காக போராடுவேன் என்று வந்த உண்மையான தலைவன் பிரபாகரன்:சீமான்

புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகம் சார்பில், வழக்கு நிதியளிப்பு கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் இயக்குநர் சீமான் பங்கேற்று பேசினார்.
’புதுச்சேரியில் நான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக என்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

நான் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினேன். பிரபாகரன் என் அண்ணன் என்று கூறினேன். என்னை கைது செய்யும் போது புதுச்சேரியில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் கிடையாது. அதன் பின்னர்தான் அதைக் கொண்டு வந்தனர்.

புதுச்சேரியில் நான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக என்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தமிழின உணர்வாளர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவியதாக, கூட்டத்தில் தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளுக்காக, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் ரூ. 1.50 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

எல்லோரும் பிறர் தங்களை தலைவர் என்று அழைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். தந்தை பெரியார்தான் உண்மையான தலைவர்.

Monday, August 3, 2009

ஒரு கோப்பை சோற்றுக்காக தலை குனிந்து நிற்கும் ஈழத்தமிழர் அவலம்

தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தர இந்தியா இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென ஐ. தே. கட்சியின் ஊவா மாகாண சபை வேட்பாளர் கே. வேலாயுதம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் மேலும், உயிருக்குயிராய் நேசிக்கும் இந்தியா இன்று வரையிலும் எமது மக்களைப் பற்றி சிந்திப்பதாக தெரியவில்லை. சிறந்த எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் மலையக மக்களுக்காக எதையுமே செய்யாத இந்தியா தேவையற்ற எத்தனையோ விசயங்களில் இலங்கையில் தலையீடு செய்து வருகின்றது.

மலையக மக்களின் பிரஜாவுரிமையை 1947 ஆம் ஆண்டு பறித்தபோது இதனை தடுத்து நிறுத்தும் பொறுப்பில் இந்தியா இருந்தபோதும் அதை செய்யாததால் இன்று மலையகம் இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கின்றது.

எத்தனையோ ஏமாற்றங்கள் வந்தபோதிலும் இந்தியாவை மீண்டும் நம்பிய தமிழ் மக்களை எட்டி உதைக்கும் பாணியிலே நடந்துகொள்கிறது இந்தியா. இதில் வேதனை என்னவெனில் இந்திய மண்ணில் எத்தனையோ பேர் அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று தீக்குளித்த போதும் கூட இது குறித்து ஓரக்கண்ணாலாவது இந்திய மத்திய அரசு பார்க்கவில்லை.

இவர்களில் உணர்வுகளையும் நியாயமான ஆவேசங்களையும் தடுத்து நிறுத்தவே முழு ஆவலோடு செயற்பட்டது. காட்டுமிராண்டித் தனத்திற்கு கைகொடுத்த இந்தியா இனியாவது இந்தத் துன்பியல் சம்பவங்களை மறந்துவிட்டு எமக்காக எமது நிம்மதிக்காக செயற்பட வேண்டும்.

எமது மக்கள் ஒன்றும் பாவப்பட்ட ஜென்மங்கள் அல்ல. மலையக மக்கள் எந்தவொரு நிம்மதியுமின்றி வாழ்க்கையென்றால் என்னவென்று கூட அறியாது வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மறுபுறம் வடக்கில் அந்த மண்ணில் கௌரவமாகவும் தலை நிமிர்ந்தும் வாழ்ந்த தமிழர்கள் ஒரு கோப்பை சோற்றுக்காக வரிசையில் தலை குனிந்து நிற்கின்றனர். என்ன கொடூரம் இது? இதனையெல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு வெறும் வைத்திய வசதிகளையும் அற்ப சலுகைகளையும் வழங்கி எம்மை ஏமாற்றிவிடப் பார்க்கிறது இந்தியா.

கடந்த கால சம்பவங்களை குடைந்து குடைந்து பார்க்கையில் முன்னரைவிட இந்தியாவுக்கு எமது மக்களின் விடுதலையில் அதிகம் அக்கறை செலுத்த வேண்டிய, இதற்காக செயற்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

எனவே எங்களுக்கோர் நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தர இந்தியா முழுமையாக செயற்பட வேண்டும். இந்தத் தீர்வில் மலையக மக்களது பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு அனைத்து இன மக்களும் நிம்மதியாக வாழ இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து அதற்குத் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு மாற்றத்திற்கு முழு பங்களிப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Friday, July 31, 2009

நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்குவதில் ஒவ்வொரு தமிழருக்கும் பங்குண்டு - ருத்ரகுமாரன்

நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்குவதில் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் பங்கு உண்டு என்று நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற்திட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நியூஜேர்சி மாநிலத்தில் அமெரிக்க இலங்கை தமிழ் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'உயிர்த்தெழுவோம்' நிகழ்வில் உரையாற்றும் போது இவ்வாறு அவர் கூறினார்.

நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழு, அமெரிக்க இலங்கை தமிழ்ச் சங்கம், அமெரிக்க தமிழர் அரசியல் செயலவை, அமெரிக்க தமிழ் இளையோர் அமைப்பு ஆகிய நான்கு அமைப்புகள் கூட்டாக இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.

அப்போது ருத்ரகுமாரன் பேசுகையில், விடுதலைப் புலிகளின் ராணுவ பலத்தை வெவ்வேறு நாடுகள் தமது அரசியல், பூகோள நலன்களுக்காக அழித்துவிட்டன. விடுதலைப்புலிகளின் ராணுவ பலத்தை அழித்தன் காரணமாக தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கக்கூடிய மார்க்கத்தை அழித்து விட்டார்கள்.

விடுதலைப் புலிகளின் ராணுவ பலத்தை அழித்ததன் மூலம் இலங்கைத் தீவில் ஒரு சமரசப் பேச்சுவார்த்தைக்கு இன்றியமையாததான - அத்தியாவசியமான - அந்த அதிகார மையத்தையும் அனைத்துலக சமூகம் அழித்துவிட்டது.

இலங்கைத் தீவில் இன்று தமிழர் தரப்பில் ஒரு அதிகார வெறுமை - அதிகார வெற்றிடம் - அரசியல் வெற்றிடம் - காணப்படுகிறது. இலங்கை த்தீவில் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட முன்னரும் இந்த அதிகார வெற்றிடம் இருந்தது. அதன் காரணமாகத்தான் தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தை ஏந்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அந்த ஆயுதப் போராட்டத்தை நசுக்கியதன் மூலம் இலங்கைத் தீவில் இன்று அதிகார வெற்றிடம் தோன்றியுள்ளது.

இத்தகைய அதிகார வெற்றிடத்தை நாங்கள் எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பது பற்றியே நாங்கள் சிந்திக்க வேண்டும். இலங்கைத் தீவின் உள்ளேயே இருந்துகொண்டு இதனை நிவர்த்தி செய்யலாமா என்பதைப் பார்க்க வேண்டும்.

இலங்கைத்தீவில் இன்று 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். யாழ். குடாநாடு ஒரு திறந்த சிறைச்சாலையாக இருக்கின்றது. கிழக்கு மாகாணம் ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றது.

தெற்கில் வாழும் தமிழ் மக்கள் ராணுவத்தினராலோ அல்லது ராணுவக் கூலிப்படையாலோ எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம், எந்த நேரத்திலும் கொண்டு செல்லப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளனர்.

அதுமட்டுமன்றி சிறிலங்காவால் 1983 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 6 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமானது அங்கே தனிநாடு கேட்கும் பேச்சு சுதந்திரத்தைக் கூட தடை செய்து அதனை ஒரு குற்றமாக வைத்திருக்கிறது.

அதுமட்டுமன்றி தமிழ் இளைஞர்களை கைது செய்து தடுப்பு முகாமில் வைத்திருப்பதற்காக 1979 ஆம் ஆண்டு முதல் பயங்கரவாத தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம் கொண்டு வரப்பட்டு இன்றுவரை அவை நடைமுறையில் உள்ளன.

எனவே இந்த அடிப்படையில் மேற்படி அதிகார வெறுமையை இலங்கைத்தீவில் இருந்துகொண்டு நிவர்த்தி செய்ய முடியாது. மேற்படி அதிகார வெறுமையை புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள மக்கள்தான் நிவர்த்தி செய்யக்கூடிய நிலையில் உள்ளனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் நடத்திய போராட்டங்களால் அனைத்துலக சமூகத்தில் அவர்கள் ஒரு அரசியல் சக்தியாக இப்போது உருவாகி விட்டார்கள்.

தொடர்ச்சியாக நடைபெற்ற எழுச்சிப் போராட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் மூலம் நாங்கள் அனைத்துலக சமூகத்திடம் ஒன்றை தெளிவாகக் கூறியிருக்கிறோம்.

புலம்பெயர் தமிழர்களாகிய நாம் எமது நாடு கடந்த அரசில் பண்பை வெளிப்படுத்தியுள்ளோம் என்பது தான் அது. இது சமூகவியல் அடிப்படையிலோ அல்லது அரசியல் அடிப்படையிலோ ஒரு புது மாதிரியான நடவடிக்கை.

நாடு கடந்த அரசு என்று நாங்கள் கூறவருவது யாதெனில், அனைத்துலக ரீதியில் தமிழ்மக்களால் நடத்தப்பட்டு வருகின்ற அரசியல் போராட்டங்களை உள்வாங்கிக்கொண்டு செல்லும் ஒரு அமைப்பாகத்தான் இந்த நாடு கடந்த அரசு இருக்கும்.

நாடு கடந்த அரசை நாங்கள் எவ்வாறு அமைக்கவிருக்கிறோம்?

இப்போது அமைக்கப்பட்டிருப்பது ஒரு குழு. இந்த குழுவுக்கு இரண்டு வடிவங்கள் இருக்கின்றன. முதலாவது வடிவம் உடனடிப் பிரச்சினைகளைக் கையாள்வதற்காக செயற்படுகின்றது.

குறிப்பாக கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் நலன்களை பேணுவதற்கான நடவடிக்கை எடுக்கும் முக்கிய குழுவாக இதனை அமைத்திருக்கின்றோம்.

அடுத்து - அனைத்துலக ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒருதரப்பு அல்லது அமைப்பு ஊடாக புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களிடத்தில் ஒரு தேர்தலை நடத்தி அதன் மூலமாகத்தான் நாடு கடந்த அரசை நாங்கள் உருவாக்கவிருக்கின்றோம்.

இவ்வாறு உருவாக்கப்படுகின்ற அரசு ஜனநாயக அடிப்படையில்தான் உருவாக்கப்படுகின்றது. அதுமட்டுமன்றி ஜனநாயக அரசு ஒன்றுக்குரிய அத்தனை அம்சங்களைக் கொண்டதாகவும்தான் இந்த நாடு கடந்த அரசை உருவாக்கவிருக்கின்றோம். இந்த அரசு எந்தவொரு தனிப்பட்ட குழுவினருக்கான இடமானதாக இல்லை. தமிழ் மக்கள் எவரும் இதில் போட்டியிடலாம். போட்டியில் தெரிவு செய்யப்படுபவர்தான் இந்த சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வார்.

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்று பின்னணியில் இந்த நாடு கடந்த அரசை நாங்கள் பார்க்க வேண்டும். ஜி.ஜி.பொன்னம்பலம், செல்வநாயகம் அவர்களின் காலத்தில் நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க நாங்கள் போராடினோம்.

சத்தியாக்கிரகம், பணிப்புறக்கணிப்பு மூலம் நாங்கள் அன்று போராடினோம். ஆனால் எங்களுடைய நியாயமான போராட்டம் முறியடிக்கப்பட்டதனால்தான் தமிழ்த் தேசிய இனம் ஆயுதமேந்தி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

அந்த ஆயுதப்போராட்டம் அனைத்துலக சமூகத்தால் முறிக்கப்பட்ட சமயத்தில் நாடு கடந்த அரசு மூலம் அனைத்துலக சட்டங்களுக்கு - அனைத்துலக உறவுகளுக்கு - அனைத்துலக ஜனநாயக விழுமியங்களுக்கு - அமைவாக எமது போராட்டத்தைக் கொண்டுசெல்ல இருக்கிறோம்.

இந்தியப்படை 1987 ஆம் ஆண்டு வந்தபோது தலைவர் சுதுமலைக் கூட்டத்தில் கூறியதை நான் இங்கு உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். "போராட்ட வடிவங்கள் மாறினாலும் இலட்சியம் மாறாது, குறிக்கோள் மாறாது" என்றார் தலைவர். அந்த அடிப்படையில்தான் நாடு கடந்த அரசை முன்னெடுத்துச் செல்லவிருக்கின்றோம்.

இது ஒரு புறநிலை அரசு அல்ல. புறநிலை அரசு என்பது - நாட்டைவிட்டு வெளியே சென்று அங்கு ஒரு அரசை நடத்தி பின்னர் நாட்டு நிலைமை சுமூகமான பின்னர் திரும்பி வருவதையே குறிக்கும்.

லிதுவேனியா, எஸ்தோனியா போன்றவை சோவியத்தின் ஆக்கிரமிப்பின்போது அவ்வாறான ஒரு புறநிலை அரசை நிறுவின. அனைத்துலக நிலமை மாறியபின்னர் அவர்கள் மீண்டும் அந்த நாடுகளுக்கு சென்று அரசை அமைத்தார்கள். இந்தியாவின் ஆதரவுடன் தலாய்லாமா ஒரு புறநிலை அரசை இன்றும் நடத்தி வருகின்றார்.

ஆனால் நாங்கள் நடத்தவுள்ள நாடு கடந்த அரசுக்கு ஒரு நாடும் தேவையில்லை. எனவே எங்களுக்கு வெளிப்படையாக எந்தவொரு நாடும் அங்கீகாரம் தராவிட்டாலும் நாங்கள் நாடு கடந்த அரசை முன்னெடுத்துச் செல்லலாம்.

நாடு கடந்த அரசு அமைப்பது குறித்த எமது முயற்சியை வெளிப்படுத்திய போது, இப்படியான நாடு கடந்த அரசு அமைத்ததாக வரலாற்றில் இல்லை என்றும் இது உண்மையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான பங்களிப்பாக இருக்கும் என்று கூறினார்கள். நாங்கள் ஒரு தனித்துவமாக இருக்கின்றோம். தனித்துவமாகத்தான் எங்களுடைய போராட்டத்தை நாங்கள் நடத்திக்கொண்டு செல்லமுடியும்.

நாடு கடந்த அரசின் வெற்றியானது மாறிவரும் அனைத்துலக அரசுகளின் அரசியல் சூழ்நிலைகளில்தான் தங்கியுள்ளது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் இன்று அனைத்துலக ரீதியில் பின்னிப்பிணைந்துள்ளதை நாங்கள் பார்க்கவேண்டும்.

உதாரணமாக ஆபிரிக்க தேசிய காங்கிரசும் தென்னாபிரிக்காவும் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தேசிய விடுதலை இயக்கம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முதன்முறையாக "விடுதலைப் புலிகள் ஒரு தேசிய விடுதலை இயக்கம்" என்று கூறிய ஆபிரிக்க தேசிய காங்கிரசும் தென்னாபிரிக்காவும் சிறிலங்கா தொடர்பான வாக்களிப்பு வந்தபோது சிறிலங்காவுடன் சேர்ந்து வாக்களித்ததையும் நாங்கள் பார்க்கவேண்டும்.

தமிழ்த் தேசியப் போராட்டம் அனைத்துலக அரசியலுடன் இன்று இரண்டற கலந்துவிட்டது. எங்களுடைய போராட்டமானாலும், நாடு கடந்த அரசு என்றாலும் சரி அதனுடைய வெற்றி மாறிவரும் அனைத்துலக பூகோள அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் தங்கியுள்ளது.

நாடு கடந்த அரசு குறித்த அறிவிப்பை எதற்காக அவசரப்பட்டு செய்தார்கள், எதற்காக மற்றவர்களுடன் கலந்தாலோசிக்காமல் அறிவித்தார்கள் என்று சிலர் கூறினார்கள். இந்த நிலைப்பாடு என்பது விடுதலைப் புலிகளிடம் இருந்துதான் வந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்பது அனைத்துலக சமூகத்தாலும் தமிழ்மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட விஷயமாகும். அனைத்துலக நாடுகளில் நடந்த எந்தவொரு ஆர்ப்பாட்டமானாலும் எந்தவொரு எழுச்சி நிகழ்வானாலும் அவற்றில் தமிழ் மக்கள் தாயகக் கொடியுடன்தான் நிற்கின்றனர்.

தமிழர் தேசியம் - தமிழர் தாயகம் - தமிழர் தன்னாட்சி என்ற மூன்று நிலைப்பாடுகளையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பாகத்தான் இதனை நாங்கள் கொண்டுசெல்ல இருக்கிறோம். ஏற்கனவே நான் கூறியதுபோல இதனை ஒரு தேர்தலின் மூலம்தான் உருவாக்குவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

ஜனநாயக அடிப்படையில் உருவாக்குவதால் இந்த அமைப்புத்தான் தமிழர் சம்பந்தமான, தமிழர்களின் அபிலாசைகள் சம்பந்தமான ஒரு அதியுயர் கட்டமைப்பாக இருக்கும். ஜனநாயகத்தின் அடிப்படையில், ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் நாடு கடந்த அரசு உருவாக்கப்படுவதால் இதனையே தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளை வெளிப்படுத்தும் அதியுயர் அமைப்பாகக் கொண்டுசெல்ல இருக்கிறோம்.

நாடு கடந்த அரசு அதியுயர் அமைப்பாக இருப்பதால் ஏனைய அமைப்புக்களுக்கு எந்தவிதமான இடமும் இல்லை என்று கருதிவிட முடியாது. இங்கு ஒன்றுக்கொன்று போட்டியாக எதுவும் இடம்பெறவில்லை. உதாரணமாக அனைத்துலக மன்னிப்புச் சபை செய்கின்ற பணியை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் செய்கின்றது.

தமிழ் மக்களின் அரசியல் வேட்கை தொடர்பாக நாடு கடந்த அரசைத்தான் அதியுயர் அமைப்பாக நாங்கள் கொண்டு செல்ல இருக்கிறோம். இது தொடர்பாக பல்வேறு ராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், பல்வேறு அமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

முஸ்லிம் பேராசிரியர் ஒருவர் கடிதம் அனுப்பியிருந்தார். அதில் ''இது ஒரு வரலாற்று நிகழ்வு, தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை உருவாக்கவேண்டும். எனவே இந்த அமைப்பில் நானும் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்" என்று கூறியிருந்தார்.

இந்த அமைப்பில் நாங்கள் எவ்வாறு பங்களிப்புச் செய்வது என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். ஆஸ்திரேலியாவில் இருந்து சிவில் பொறியியலாளரான மாணவர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சலில் தானும் இதில் பங்களிக்க விரும்புகிறேன், என்ன மாதிரி பங்களிக்கலாம் என்று கேட்டிருக்கிறார்.

தற்போது நாடு கடந்த அரசுக்கான ஆலோசனைக் குழுவே உருவாக்கப்பட்டிருக்கிறது. அடுத்து நாடு கடந்த அரசு குழு உருவாக்கப்படும். இதில் மேற்படி மூன்று கோட்பாடுகளையும் ஏற்றுக்கொண்ட அனைத்து தரப்பையும் இயலுமான அளவிற்கு உள்ளடக்கி உருவாக்குவோம். அத்துடன் நாடுகள் சார்ந்த அளவிலும் உபகுழுக்களை உருவாக்கி அவற்றின் ஊடாகத்தான் இதனை நாங்கள் கொண்டுசெல்ல இருக்கிறோம்.

நீங்கள் உங்களது கருத்துகளை கூறவேண்டுமானால் நாங்கள் ஏற்கனவே வெளியிட்ட மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொண்டு உங்களது கருத்துக்களை கூறலாம். இந்த அமைப்பு எப்போது வரப்போகிறது, இந்த குழுக்கள் எப்போது உருவாக்கப்படப்போகின்றன என்பதை பார்த்துக் கொண்டிராமல் இந்த அமைப்பு எப்படி வரவேண்டும் என்பதை உருவாக்குவதில் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் பங்கு உண்டு.

எனவே நீங்கள் ஒவ்வொருவரும் எப்படி நாங்கள் இதனை கொண்டுசெல்ல வேண்டும் என்ற உங்களது கருத்துக்களை அனுப்பினால் அவற்றையும் நாங்கள் கருத்தில் எடுத்துக்கொண்டு - இறுதி வடிவத்தை தயாரிப்போம்.

இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வரைவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த பேராசிரியர் சொர்ணராஜா எமது ஆலோசனைக்குழுவில் இருக்கின்றார். அவர் ஒரு வரைவை கடந்த வாரம் தயாரித்திருக்கிறார். அதாவது நாடு கடந்த அரசை முதலில் நாம் கிழக்கு இந்தியக் கம்பனி வடிவத்தில் கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அதாவது, பொருளாதார ரீதியில் ஒரு பலம் மிக்க வடிவமாக கொண்டு வர வேண்டும் என்று அவர் கருதுகிறார்.

இங்கிலாந்து நாட்டவர் இலங்கைக்கு வருகை தந்து ஆதிக்கம் கொள்வதற்கு முன்பாக கிழக்கு இந்தியக் கம்பனி வடிவத்தில் அங்கு வந்து தமது ஆதிக்கத்தை செலுத்தினார்கள். எனவே நாங்களும் முதலில் பொருளாதார அடிப்படையில் நாடு கடந்த அரசை கொண்டுசென்று அதன் அடிப்படையில் நாங்கள் அரசியலுக்குள் பிரவேசிக்க வேண்டும் என்று அவர் கருதுகிறார்.

இப்படி பல்வேறு கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த கருத்துக்களை எல்லாம் ஒன்றாக இணைத்து எங்களுடைய சொந்த அமைப்பாக கருதி நாடு கடந்த அரசுக்கான உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள்.

நடந்து முடிந்த சம்பவத்திற்காக நாம் மனமுடைந்து விடக்கூடாது. நாங்கள் இங்கு இப்படியான கூட்டம் நடத்துவதே ராஜபக்ச அரசு எங்களை இன்னமும் அரசியல் ரீதியாக அடிமை கொள்ளவில்லை என்பதை வெளிக் காட்டும்.

எனவே நாடு கடந்த அரசு அந்த அடிப்படையில்தான் உருவாக்கப்படவிருக்கின்றது. தியாகம் விரயமானதாக வரலாறு இல்லை, நீதி தோற்றதாக சரித்திரம் இல்லை.

தர்மம் தனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்றார் ருத்ரகுமாரன்.

thanks to: www.thatstamil.com

ஒரு முதியவர் தெரிவித்த திடமான கருத்து

""பயத்தை மறைக்க நினைப்பவன் நடுராத்திரியில் காட்டுவழியில் பாட்டு பாடிக்கொண்டே செல்வதுபோலத்தான் இருக்கிறது ராஜபக்சே அரசின் நடவடிக்கைகள்'' என்கிறார் அந்த ஈழத்தமிழர்.

கொழும்பில் வாழ்ந்து ஈழத்தில் உள்ள அரசாங்க வதை முகாம்களுக்குச் சென்று, அங்கு தமிழர்கள் படும்பாட்டை சகிக்க முடியாமல் வெளியே வந்து, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தனது பயோ-டேட்டாவைத் தவிர்த்துவிட்டு நம்மிடம் விரிவாகப் பேசினார்.

""தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்த அளவுகூட முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு இலங்கையின் தற்போதைய நிலவரம் பற்றித் தெரியாது. அந்தளவுக்கு முடக்கப்பட்டிருக்கிறார்கள். நக்கீரனில் வெளியாகும் தகவல்களை உறவினர்கள் மூலமா போன் வழியா தெரிஞ்சுக்குறாங்க. அதுதான் இப்ப அவர்களுக்கு ஒரே ஆறுதலும் நம்பிக்கையுமாகும். கொழும்பிலிருந்து புறப்பட்டால் செட்டிகுளம் தொடங்கி, வவுனியா வரைக்கும் முகாம்கள்தான்.

இதில் செட்டிகுளம் கதிர்காமர் முகாம் மட்டும்தான் சுத்தமாகவும் வசதியாகவும் இருக்கு. அதைத்தான் ஐ.நா. அதிகாரிகளுக்கும் இந்தியப் பத்திரிகையாளர்களுக்கும் காட்டி ஏமாத்திக்கிட்டிருக்காங்க.

எப்படியாவது சொந்த இடத்துக்குப் போகணும்ங்கிறது தான் முகாம்களில் இருக்கிற மக்களோட விருப்பம். சாப்பாடு, தண்ணீர், துணிமணி எதுவும் கிடைக்கிறதில்லை. நீர்கொழும்பு பகுதியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் பகுதியிலிருந்து வந்த தமிழக மீனவர்கள் அதிகம். அவங்க நடத்தி வந்த 50 தமிழ்ப்பள்ளிக்கூடங்களை மூடியாச்சு. குடப்பாடுல உள்ள விஜயரத்னா பள்ளிக்கூடத்துல சிங்களம் படிக்க ஆரம்பிச்சிட்டாங்க. தமிழர்கள் பேசிக்கொள்ளும்போதும் சிங்களத்தில தான் பேச வேண்டிய நிலைமை. ராணுவத்துக்கிட்டேயிருந்து தப்பிக்கணுமே...

ஆமிக்காரங்களோ விசாரணைங்கிற பேரில் இளசுகளைப் பிடிச்சிட்டுப் போறாங்க. உறவினர்களைப் பார்க்க ணும்னு நான் முகாம்களுக்குப் போனப்பவும் இதே நிலைமைதான். இரண்டு நாள் கழிச்சி அந்த இளைஞர்கள் காட்டுப்பகுதியில் கை, கால் வெட்டப்பட்டு இறந்து கிடந்தாங்க. அதே நேரத்தில், வவுனியா காட்டுப் பகுதிக்குப் போயிட்டுத் திரும்பும் ஆமி வாகனத்தில் 10, 15 ஆமிக்காரன் பொணமா வருவதையும் பார்த்தேன். எல்லாம் பொடியன்களின் (புலிகள்) அட்டாக்தான்.

யூலை 13-ந் தேதி, காட்டுப் பகுதியில் பொடியன்கள் இருக்காங்களான்னு கண்காணிக்கும் ஆமிக் காரங்களுக்கு 3 லோரியில் உணவுப் பொருள் போனது. இதை தெரிஞ்சுக்கிட்ட புலிகள் 10 பேர் ஜெயபுரம்-முல்லைத்தீவுக்கு இடையில் உள்ள காட்டுப்பகுதியில் லோரிகளை வழிமறிச்சு, அதிலிருந்த ஆமிக்காரங்களை கொன்னுபோட்டு , உணவுப் பொருளோடு அந்த லாரிகளை காட்டுக்குள்ளே கொண்டு போயிட்டாங்க. இந்தக் கோபத்திலேதான் முகாமில் இருந்த 40 இளைஞர்களை இழுத்துக்கிட்டுப் போயி, காட்டிலே வெட்டிப் போட்டான்கள் ஆமிக்காரன்கள்.

காட்டுப் பகுதியில் புது விதமான பயிற்சிகளோடு ஆயத்தமாகிவிட்ட புலிகள், இலங்கையின் முக்கிய நகரங்களை குறி வச்சுத்தாக்கத் திட்டமிட்டிருக்காங்க. முக்கியமான அரசு அலுவலகங்களும் தாக்கப்படும். புலிகளின் தாக்குதல் தீவிரமானால் அப்பாவித் தமிழர்களை ராஜபக்சே அரசாங்கம் சித்திரவதை செய்யும். அதனால கொழும்பு, நீர்கொழும்பு பகுதியில் உள்ள தமிழர்கள் யாழ்ப்பாணம், திரிகோணமலை பகுதிக்கு கொஞ்சம் கொஞ்சமா இடம்பெயர ஆரம்பிச்சிட்டாங்க. இதுவும் இயக்கத்தோட மறைமுக உத்தரவுதான்.

புலிகள் ஒரு பாரிய அளவிலான தாக்குதலை நடத்தப்போறாங்கன்னு ராஜபக்சே அரசாங்கத்துக்கும் தெரிந்திருக்கு. அதனாலதான் ஆமிக்கு ஆள் சேர்க்கிறார். ராணுவப் பயிற்சிக்கு இந்தியாவின் உதவியைக் கேட்டிருக்கிறார். வன்னிப் பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றுவதுங்கிற பேரில் இந்திய ராணுவத்தை அழைத்து, காட்டில் புதிய வியூகத்தோடு செயல்படும் புலிகளை அழிப்பதுதான் ராஜபக்சேவின் திட்டம். அதோடு, சொந்த மண்ணுக்கு எப்போது போவோம்ங்கிற ஏக்கத்தோடு முகாமில் இருக்கும் தமிழர்களை கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபடுத்தவும் திட்டம் போடப்பட்டிருக்கு.

சொந்த மண்ணில் குடியிருக்கலாம்ங்கிற ஆசையோடு வரும் தமிழர்களை கண்ணிவெடிகளில் சிக்க வைத்து கொன்று குவிக்கும் கொடூரத் திட்டமும் போடப் பட்டிருக்கு.

முகாம்களில் மூன்றரை லட்சம் தமிழர்கள் இருக்கும் போது, 40 ஆயிரம் பேர்தான் இருக்காங்கன்னு ராஜபக்சே சொல்லி இருக்கிறார். மற்றவங்களை கண்ணி வெடியில் கொன்னுடலாம்ங்கிற கணக்கோடுதான் அவர் இப்படி சொல்கிறார். இதெல்லாம் உலக நாடுகளுக்கும் தெரிந்திருக்கு. ராஜபக்சேவின் கொடூரத் திட்டங்களை பிரபாகரன் நொறுக்கிவிடுவார்னும் தெரியும். அதனாலதான் தன் நாட்டு மக்கள் யாரும் இலங்கைக்கு செல்ல வேண்டாம்னு அமெரிக்கா எச்சரித்திருக்கு.

கண்ணி வெடி மூலமாகவும் முகாம்களில் உள்ள இளைஞர்களை கடத்திச் சென்றும் தமிழினத்தை அழிக்கும் அடுத்த திட்டத்தை ராஜபக்சே அரசாங்கம் தயார் பண்ணியிருக்கு. சிங்களன் இனி என்ன திட்டம் போட்டாலும் புலிகள் தரப் போகும் அடியைத் தாங்குவது கஷ்டம்தான். உலகத்தாரே... பார்க்கத்தான் போறீர்கள்'' என்றார் அந்த தமிழர்.

Thanks to: www.eeladhesam.com

தமிழகத்திலேயே தமிழனை அடிக்கும் சிங்களர்கள்!

'தமிழனுக்கு இதைவிட கேவலம் வேறென்ன வேணும்ங்க?! ஈழத்துல நம்மாளுங்களை அழிச்சப்பதான் தட்டிக்கேட்கத் திராணியில்லாம இருந்துட்டோம். ஆனா, தமிழ்நாட்டுக்குள்ளே வந்து சிங்களன் நம்மளை அடிக்கிறான்னா எவ்வளவு திமிரு இருக்கணும்!'' - கனல் வார்த்தை தெறிக்கிறது திருப்பூர் திசையிலிருந்து!


திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகிலுள்ள காளாம்பாளையத்தில் 'மெர்டியன் அப்பேரல்ஸ்' என்ற பனியன் நிறுவனம் இயங்கி வருகிறது. வினோத்குமார் என்ற வட இந்தியருக்கு சொந்தமான இந்த நிறுவனத்தில்,

சுமார் ஆயிரத்து ஐந்நூறு பணியாளர்கள் பணிபுரிகி றார்கள். இதில் மூன்றில் ஒரு பங்கினர் தமிழர்கள். மற்றவர்கள் ஒரிஸ்ஸா, உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், ஜூலை 17-ம் தேதி கம்பெனி கேன்டீ னுக்குள் ஒரு பெரிய மோதல் உருவாகி, தமிழர்கள் தர்ம அடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஒரிஸ்ஸா

மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடம் கடியும், அடியும் வாங்கிய செல்ல பாண்டியன் அதைப் பற்றிச் சொல்கிறார். ''மூணு மாசத் துக்கு முன்னாடி வரைக்கும் நல்லாதான் இருந்துச்சுங்க கம்பெனி. ஆனா, சமீந்தா பண்டாராங்கிற சிங்களன் என்னிக்கு இங்கே ஜெனரல் மேனேஜரா வந்து சேர்ந் தாரோ... அன்னிலேருந்து எங்களுக்கு ஆரம்பிச்சுதுங்க தலைவலி. அந்தாளுக்கு தமிழர்களைக் கண்டாலே பத்திக் கிட்டு எரியும். நாங்க எதைப் பண்ணினாலும் தப்புன்னு சொல்லித் திட்டுறது, மிரட்டுறதுன்னு டார்ச்சர் பண்ணிட்டே இருப்பாரு. எல்லாத்தையும் தாங்கிட்டு வேலை பார்த்துட்டு இருந்தோம். அதனால, மத்த மாநிலத் துக்காரங்களை வச்சு தமிழ் ஆளுங்களை வம்பு பண்ண ஆரம்பிச்சாரு. குறிப்பா, ஒரிஸ்ஸா ஆளுங்ககிட்ட, 'நீங்க தமிழனுங்ககூட பழக்கம் வச்சுக்கக்கூடாது'னு சொல்லி யிருக்காரு. அவங்க முதல்ல இதைக் கண்டுக்கல. ஆனா, 'வேலையை விட்டு தூக்கிடுவேன்'னு மிரட்டுனதால, அவங்க எங்ககிட்டே தேவையில்லாம முறைச்சுக்க ஆரம் பிச்சுட்டாங்க. லேசா ஆரம்பிச்ச உரசல், நாளாக நாளாக வளர ஆரம்பிச்சுடுச்சு.

அன்னிக்கு கேன்டீன்ல வச்சு எங்களுக்கும், ஒரிஸ்ஸாக் காரங்களுக்கும் சின்ன வாக்குவாதம் உருவாச்சு. ஆனா,

திடீர்னு அவங்க அடிதடியில இறங்கிட்டாங்க, கத்திரி மாதிரி இருக்கிற ட்ரிம்மரை எடுத்து கண்டபடி கீறிவிட் டாங்க. தமிழருங்களைப் பார்த்து பார்த்து அவங்க அடிச் சாங்க; கடிச்சாங்க. அவனுங்ககிட்ட கடிபட்டதுல எனக்கு ரத்தம் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு. உடனே,

இதைப் பற்றி நிர்வாகத்துகிட்ட சொன்னோம். ஆனா, கொஞ்சமும் கண்டுக்காம, தமிழர்களை அடிச்சவங்களை பாதுகாக்கறதுலேயே குறியா இருந்தாங்க. அப்புறம் நாங்க எல்லாம் அடிச்சுப் பிடிச்சு ஆஸ்பத்திரிக்கு ஓடினோம்!''

என்கிறார் வேதனையாக. இவரைப் போலவே ரவி என்பவ ரையும் ட்ரிம்மரால் நெஞ்சில் கீறிவிட்டிருக்கின் றனர். ஏஞ்சல் என்கிற பையனுக்கும் அடி விழுந்திருக்கிறது.

இதனைக் கண்டித்த தமிழர் தொழிலாளர்கள் தங்கள் கம்பெனிக்கு எதிரே பந்தல் போட்டு ஆக்ரோஷத்துடன் போராட்டத்தில் உட்கார்ந்து விட்டார்கள். அவர்களில் ஒருவரான கமலநாதன்,

''எங்க முதலாளி வினோத் நல்லவர்தானுங்க ஆனா, அவரோட பையன்கிட்டே... இந்த சமீந்தா பண்டாரா 'கம்பெனியை பக்காவா மாத்திக்காட்டுறேன்!'னு சொல்லி பவர் வாங்கிக்கிட்டு, இந்த ஆட்டம் ஆடுறாரு. இந்த கம்பெனியில ஒரு தமிழன்கூட வேலை பார்க்கக் கூடாதுங்கிறது அவரோட எண்ணம். கூடவே இலங் கையில இருந்து சிலரை கூட்டி வந்திருக்கிறாரு. அவங்களுக்கும் ஏதேதோ பொறுப்பு போட்டுக் கொடுத்திருக்காரு. அந்த இலங்கைக் காரனுங்க தமிழ் ஆளுங்களை கண்காணிச்சு, வம்புக்கிழுக்கிறதே முழுநேர தொழிலா வச்சுருக்கானுங்க. தமிழ் பொண்ணுங்க கிட்டேயும் தரக்குறைவா நடந்துக்கிறாங்க. சுடிதாரை பிடிச்சு இழுக்கிறது, பின்பக்கம் தட்டிட்டு போறதுன்னு மோசமா சிலுமிஷம் பண்றானுங்க. இதையெல்லாம் தட்டிக் கேட்டா, தகராறு வந்து அடி விழுது. இந்தப் போக்கு மாறணும்; சமீந்தாவை வேலையில இருந்து தூக்கணும்னு சொல்லித்தான் இந்தப் போராட்டத்துல உட்கார்ந்திருக்கோம்!'' என்றார்.

நிர்வாகத் தரப்பு மட்டும், ''இனவெறித் தாக்குதல் எல்லாம் இங்கே நடக்கல. தொழிலாளர்களுக்குள்ள நடந்த சின்ன மோதலை பெரிய விஷயமா சிலர் வேணும்னே ஊதிவிட்டிருக் காங்க. இந்த விவகாரம் போலீஸ் கேஸாயிருக்கு. போலீஸ்காரங்களும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்காங்க. நாங்களும் பேச்சுவார்த்தை நடத்து றோம். கூடிய விரைவில் இந்த விவகாரம் சரிசெய்யப்படும்!'' என்று சொல்கிறது.

இந்த கம்பெனியில் மட்டுமில்லை...

திருப்பூரில் பல கம்பெனிகளில் இப்படியரு நிலை இருப்பதாகச் சொல்லிச் சாடும் ம.தி.மு.க-வின் திருப்பூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரான வழக்கறிஞர் பன்னீர்செல்வம், ''திருப்பூர்ல இருக்கிற பல பிரபல பனியன் கம்பெனிகள்ல சிங்களளர்கள் முக்கியப் பொறுப்புல இருக்கிறாங்க. தமிழ் தொழிலாளர்களை நசுக்கிப் பிழியுறதுதான் இவங்களோட முக்கிய வேலையே. 'யூனியன் வைக்கக்கூடாது; சட்டம் பேசக் கூடாது; எதிலும் நியாயம் கேட்கக் கூடாது'ன்னு சொல்லி தமிழ் தொழிலாளர்களோட கழுத்தை நெரிக்கிறாங்க. தமிழ் பெண்கள் கிட்டேயும் பாலியல் அத்துமீறல் நடக்குது. எவ்வளவு கொடுமையான நிலை பாருங்க... இதைவிட பெரிய கேவலம் தமிழனுக்கு வேறென்ன இருந்திடப் போகுது?

இந்த சிங்களர்களுக்கு பெரிய பொறுப்பும், கைநிறைய சம்பளமும், காரும் பங்களாவும் கொடுத்து ஆடவிட்டிருக்கிற பனியன் கம்பெனி முதலாளிகளுக்கு 'தமிழுணர்வு அற்றுப் போயிடுச்சு'ன்னுதானே அர்த்தம்? மெர்டியன் அப்பேரல்ஸ்ல நடந்தது அப்பட் டமான இனவெறித் தாக்குதல்தான். இதை அப்படியே மூடிமறைக்க முயலாம, அந்த சிங்களர்களை உடனடியா வேலையில இருந்து தூக்கி எறியணும். இங்கே இருக்கிற எல்லா கம்பெனிகளுமே எந்த சிங்களர்க ளுக்கும் கூலி வேலை கூட கொடுக்கக்கூடாது. கூடிய சீக்கிரத்தில் அத்தனை கம்பெனி தமிழ் தொழிலாளர்களையும் ஒன்று சேர்த்து மிகப்பெரிய போராட்டங்கள்ல இறங்குவோம்!'' என்றார் ஆக்ரோஷமாக.

Thanks to: www.eeladhesam.com

Thursday, July 30, 2009

குற்றமற்ற ஈழத்தமிழனுக்கு தமிழ்நாட்டிலும் சிறை கருணாநிதியின் அன்பளிப்பு

செங்கல்பட்டில் ஈழத்தமிழனுக்கு சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறைச்சாலை இயங்கி வருவது ஈழத்தமிழருக்கு தெரிந்த‌ விடயம் ஆனால் தமிழ்நாட்டு தமிழ் மக்களை பொறுத்தவை அது சிறப்பு முகாம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது தமிழ்நாட்டு தமிழ் மக்களை பொறுத்தவை அது சிறையா அல்லது சிறப்பு முகாமா என்பது தெரியாது காரணம் அரசியல்வாதிகள் மக்களை மந்தைகளாக்கி சுய நிணைவற்றவர்களாக வைத்துள்ளர். அதனால் மக்களுக்கு ஈழத்தமிழனுக்கு உதவிசெய்யும் முகமாக கேள்விப்பட்டுள்ளார்கள் ஆனால் உண்மையில் இந்த முகாமை நடத்துவது இந்திய மத்தியரசும்
மற்றும் சிறிலங்கா அரசும் தான் வெளிப்பார்வைக்கு தமிழ்நாட்டு அரசால் நடத்தப்படும் முகாம் போல் தெரியும் இங்கு உள்ள ஈழத்தமிழர்கள் எதுவித குற்றமற்ரவராக சந்தேகத்தின் அடிப்படையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். வவுனியாவில் இருக்கும் முட்கம்பி வேலி சித்திரவதை முகாமிற்கு நிகராக இம்முகாம் நடத்தப்படுகின்றது இவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணைகள் முடிந்து நீதிமன்றத்தால் குற்றமற்ரவர்கள் என்று தீர்ப்பு கூறிய‌ பின் ஈழத்தமிழன் என்ற ஒ ரே காரணத்துக்காக சிங்கள பேரினவாத அரசு போல்.தமிழ்நாட்டு அரசு.. இந்திய மத்தியரசுக்கும் மற்றும் சிறிலங்கா அரசுக்கும் கைப்பொம்மையாக தமிழ்நாட்டு அரசு செயல்பட்டு இந்திய சட்டதிட்டத்தையும் மீறி நிரபராதிகளான இவர்களை தமிழ்நாட்டு அரசு சிறைவைத்துள்ளது..செங்கல்பட்டு (சிறப்பு முகாம் )
சிறையில் மக்களை சுதந்திரமாக நடமாடவே அல்லது உறவினரை பார்க்கவே அனுமதிக்காமல் பல ஆண்டு காலமாக‌ சிறை வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் தங்களை விடுதலை செய்யக்கோரியும் உறவினரை பார்க்க அனுமதிக்குமாறும் கோரி 29.07.09 இன்று ஏழாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கின்றனர் இதில் இருவரின் நிலை படுமோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் செங்கல்பட்டு அரசினர் வைத்தியசாலையில் நேற்றயதினம் 28.07.09 அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காந்திய தேசம்உண்ணாவிரதத்திற்கு மதிப்புக்கொடுக்கும் தேசம் என்று வாய்கிளிய கத்துபவர்கள் இன்றும் சரி என்று சரி உண்ணாவிரதத்திற்கு மதிப்புக்கொடுப்பவர்கள் அல்ல அன்று ஐந்து அம்ச கோரிக்கைகளை வைத்து திலீபன்உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தான்.

தேவதாசி குலத்தில் தெலுங்கருக்கு பிள்ளையாய் பிறந்த தட்சணாமூர்த்தியாகிய கருணாநிதிக்கு தமிழை படித்தால் மட்டும் தமிழ்பற்றே இனப்பற்றே வந்துவிடாது பிறப்பிலேயே தமிழனாக பிறந்தவனுக்கு தான் இனப்பற்றும் மொழிப்பற்றும் இருக்கும் இதுக்கு உதாரணம் கருணாநிதி...???

source: www.eeladesham.com

Tuesday, July 28, 2009

ஈழத்தமிழ் மக்களுக்கு இழைத்துவந்த துரோகத்தை இந்தியா தொடரப்போகின்றதா?

போர் நிறைவு பெற்றுவிட்டால் அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு தொடர்பாகவே அதிக அக்கறைகள் காண்பிக்கப்படுவதுண்டு. ஆனால் சிறீலங்காவில் நடைபெறுபவை மறுதலையானவை.

இறுதிக்கட்ட கடும் சமரில் 25,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும், 20,000 இற்கு மேற்பட்ட மக்கள் ஊனமடைந்தும், 50,000 இற்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்தும் உள்ளதுடன், ஏறத்தாள மூன்று இலட்சம் மக்கள் முட்கம்பிகளால் சூழப்பட்ட தடை முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.

உலகின் ஜனநாயகம் தொடர்பாக கூச்சலிடும் எந்த ஒரு சக்தியும் இந்த மக்கள் தொடர்பாக காத்திரமான ஒரு நடவடிக்கையை இதுவரையில் மேற்கொள்ளவில்லை. வன்னியின் 15,000 சதுர கி.மீ பரப்பளவில் வாழ்ந்த மக்கள் இன்று முற்று முழுதாக அவர்களின் வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் தாயகப்பகுதி முற்று முழுதான இராணுவ வலையமாக மாற்றப்பட்டும் வருகின்றது.
விடுதலைப்புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என வறட்டு கொள்கைகளை முன்வைத்து வந்த இந்திய மத்திய அரசு, தற்போது விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ள நிலையிலும் தமிழ் மக்கள் மீதான எந்தவொரு மனிதாபிமான நடவடிக்கையையும் மேற்கொள்ள முன்வரவில்லை.

மாறாக தமிழ் மக்களின் உரிமைப்போருக்கான அடையாளங்களை முற்றாக துடைத்தழிக்கும் கைங்காரியங்களில் அது ஈடுபட்டுவருகின்றது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை முன்நிறுத்தி அதனை காப்பதற்கு என தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்துவிட அது மறைமுகமாக பல காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றது.

அதன் முதற்கட்டமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலமையை மாற்றுவதற்கு இந்தியா முற்பட்டுள்ளது. சில நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்புகொண்ட இந்திய புலனாய்வு அமைப்பான “றோ” அது தொடர்பில் பல மிரட்டல்களை விடுத்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமது கருத்துக்களுக்கு இணங்காது விட்டால் பாரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ் தேசியத்தின் கோட்பாடுகளை சிதைக்கும் மாற்றுக்குழுக்களை உருவாக்கும் முயற்சியிலும் இந்தியா மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றது.

அதற்கு தேவையான உறுப்பினர்களை தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் மக்களின் முகாம்களில் இருந்து பலவந்தமாக திரட்டியும் வருகின்றது. விடுதலைப்புலிகள் முற்றாக முறியடிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்து வருகின்ற போதும், விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் எவையும் கடந்த இரு மாதங்களாக இடம்பெறாத போதும் இந்தியாவை பொறுத்தவரையில் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் அரசியல் உறவுகளை வளர்த்துக்கொள்ள விரும்பவில்லை என்றே தெரிகின்றது.

அந்த அரசியல் உறவுகளின் ஊடாக அது தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை பெற்றுத்தரப்போவதுமில்லை. அதாவது காலம் காலமாக ஈழத்தமிழ் மக்களுக்கு இழைத்துவந்த துரோகத்தை இந்தியா தொடரப்போகின்றது என்பது மட்டும் தெளிவானது.

எனவே அதனை எதிர்கொண்டு இந்திய – சிறீலங்கா அரசுகளின் பிடியில் இருந்து ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றெடுக்கும் சக்தியாக மீண்டும் தமிழினம் போராடவேண்டும் என்பது தான் தற்போது எமக்கு விடப்பட்டுள்ள ஓரே வழி.
போராட்டத்தின் பாதை என்ன? என்பது அல்ல இங்கு உள்ள பிரச்சனை நாம் எவ்வாறு ஒன்றிணைந்து போராடப்போகின்றோம் என்பதே தற்போது எமக்கு முன் உள்ள சவால்கள்.

கால ஓட்டத்தில் எமது மக்களின் வலிகளும் வேதனைகளும் கலைந்து போகும் முன்னர் எமது இனத்தின் விடுதலைக்காக நாம் களத்திலும், புலத்திலும் உள்ள எமது போராட்ட சக்திகளை பலப்படுத்தவேண்டும்.

source: www.nerudal.com