Wednesday, August 5, 2009

கருத்துரிமைகள் பாதுகாப்புக் கழகம் முன்னெடுக்கும் 100 தமிழ் இனமான உணர்வாளர்கள் 100 நாட்கள் தமிழக பட்டி தொட்டியெங்கும் தொப்புள் கொடி உறவைக் காக்க பயணம்

தமிழ்ச் சொந்தங்களே! ஈழத்தில் இனப்படுகொலைக்கு ஆளான 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவும் -
இன்றும், மூன்றரை லட்சத்திற்கும் மேலான எண்ணிக்கையில் நமது ரத்தம், நமது சொந்தம், நமது தொப்புள் கொடி உறவுகள் மின்சாரம் பாய்ச்சிய முள்கம்பி வேலிக்குள்- தவித்த வாய்க்குத் தண்ணீரின்றி, பசித்த வயிற்றுக்குச் சோறின்றி, பட்ட காயத்திற்கு மருந்தின்றி, சிங்களனின் பாலியல் வன்கொடுமைக்கு நம் பெண்கள் பலியாக, அவனின் இனக் கொலைவெறிக்கு நம் இளைஞர்கள் பலியாக, வாரம் ஒன்றுக்கு நம் தொப்புள் கொடி உறவுகள் 1400 பேரை மரணம் வாரிக்கொண்டு போகும் கொடுமைச் சேதிகளையெல்லாம் ஊடகங்களின் இருட்டடிப்பினால் என்ன நடக்கிறது என்பதே அறியாமல் காடு கழனிகளில் உழலும் நம் தாயகச் சொந்தங்களுக்கு கொண்டு சேர்க்கவும்
தொப்புள் கொடி உறவு காக்கத் தொடர் பயணம் !

செயற்திட்டம்
இந்த தொடர் பயணம் ஆகஸ்து 1 முதல் தொடர்ந்து நூறு நாட்களுக்கு நடைபெறும்.
100 உணர்வாளர்களும் பத்து பத்துப் பேர் கொண்ட 10 அணிகளாகப் பிரிந்து பயணம் செய்தல்.
தமிழகத்தின் அணைத்து மாவட்டங்களும் கீழ்க்கண்டவாறு 10 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணிக்கும் ஒரு மண்டலம் ஒதுக்கப்பட்டு, அந்தெந்த மண்டலத்தில் உள்ள மாவட்டங்கள் முழுதும் 100 நாட்கள் பயணம் செய்து பரப்புரை செய்தல்.
நெல்லை மாவட்டம் நாகர்கோவில், தூத்துக்குடி,நெல்லை
மதுரை மாவட்டம் மதுரை, தேனி, திண்டுக்கல்
இராமநாதபுர மாவட்டம் இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை
தஞ்சை மாவட்டம் தஞ்சை, நாகை, புதுக்கோட்டை
கோவை மாவட்டம் கோவை, திருப்பூர்,ஈரோடு, நீலகிரி
திருச்சி மாவட்டம் திருச்சி, அரியலூர்,பெரம்பலூர்
சேலம் மாவட்டம் கரூர்,சேலம்,நாமக்கல்
வேலூர் மாவட்டம் வேலூர்,திருவண்ணாமலை, தருமபுரி,கிருஷ்ணகிரி
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம்,கடலூர்
காஞ்சி மாவட்டம் காஞ்சிபுரம், திருவள்ளூர்

தினந்தோறும் மாலையில் மேற்கண்ட மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாகச் செல்லுதல்.
ஈழத்து அவலங்களைச் சித்தரிக்கும் புகைப்படங்களைக் காட்சிக்கு வைத்தல்.

ஈழத்தில் மாண்டு போன நம் தொப்புள் கொடி உறவுகளுக்கும், இங்கே சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட 400 க்கு மேற்பட்ட மீனவர்களுக்கும், ஈழத்துச் சொந்தங்களைக் காக்கும் முயற்சியில் தங்கள் இன்னுயிர் ஈந்த முத்துக்குமார் உள்ளிட்ட 16 ஈகியருக்கும், அந்தக் கிராம மக்களோடு சேர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துதல்.

அதன் பிறகு ஈழ போரின் குறுந்தகடுகளை அந்த மக்களுக்குத் திரையிட்டுக் காட்டி, உண்மை நிலையனைத்தையும் அவர்கள் உணரும்படிச் செய்தல்.
பின் பொதுக்கூட்டம் போல் நடத்தாமல், அவர்களோடு அமர்ந்து, கலந்துரையாடி, இவ்வகையில் அவர்களிஇன் அணைத்து ஐயப்பாடுகளையும் நீக்குதல்.
நிறைவாக, முள்கம்பி வேலிக்குள் தவிக்கும் நம் மூன்றரை லட்சம் உறவுகளை விடுவிப்போம் என அந்தக் கிராம மக்களும் நாமும் சேர்ந்து உறுதிமொழி ஏற்றல்.
தினமும் மாலை தொடங்கி, இரவு 10 மணிக்குள்ளாக 2 கிராமங்களுக்காவது செல்லுதல்.
பகலில் கல்லூரி முடிந்த பிறகு, தினமும் மாணவர்களைச் சந்தித்து உணர்வுகளைக் கண்டறிந்து, அவர்கள் மூலம் உணர்வாளர்களைச் சேர்த்து, 100 நாட்களுக்குள்ளாக அந்தெந்த மண்டலத்தில் உள்ள அணைத்து கல்லூரிகளிலும் " இன உணர்வு " மேலோங்கி நிற்கச் செய்தல்.
சனி,ஞாயிறு நாட்களில் முற்பகலில் உள் அரங்கங்களில் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தமிழ் தேசிய உணர்வும், இன உணர்வும் மேலோங்கும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்துதல்.
100 நாள் பயணத் திட்டம் முடிவதற்குள்ளாக ஒரு மாவட்டத்தில் இளைஞர்களை மாணவர்களை உள்ளடக்கிய 1000 உணர்வாளர்களுக்குக் குறையாமல் இயக்கத்தில் இணைத்தல்.
பயணம் முடியப் போகும் கடைசி 10 நாட்களுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கண்ட 1000 உணர்வாளர்களையும் வரவழைத்து சிறந்த கருத்தரங்கமாக அதனை நடத்தி முடித்தல்.

இதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சருகணி என்ற கிராமத்தில் புகைப்பட கண்காட்சியையும், குறுந்தகடு திரையிடப்பட்டன. பொதுமக்கள் பெருந்திரளாக
பங்கெடுத்தனர்..இந்நிகழ்ச்சி ராமநாதபுர மாவட்ட செயலர் திரு.முகிலன்
அவர்களால் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கருத்துரிமைப் பாதுகாப்பு தலைவர் திரு, சீதைமைந்தன், தஞ்சை மாவட்ட செயலர், காஞ்சிபுர மாவட்ட செயலர் மற்றும் கருத்துரிமைப் பாதுகாப்பு கழக செய்தி தொடர்பாளர் விண்ணகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Thanks to: www.eeladhesam.com

No comments:

Post a Comment