Friday, July 31, 2009

நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்குவதில் ஒவ்வொரு தமிழருக்கும் பங்குண்டு - ருத்ரகுமாரன்

நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்குவதில் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் பங்கு உண்டு என்று நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற்திட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நியூஜேர்சி மாநிலத்தில் அமெரிக்க இலங்கை தமிழ் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'உயிர்த்தெழுவோம்' நிகழ்வில் உரையாற்றும் போது இவ்வாறு அவர் கூறினார்.

நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழு, அமெரிக்க இலங்கை தமிழ்ச் சங்கம், அமெரிக்க தமிழர் அரசியல் செயலவை, அமெரிக்க தமிழ் இளையோர் அமைப்பு ஆகிய நான்கு அமைப்புகள் கூட்டாக இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.

அப்போது ருத்ரகுமாரன் பேசுகையில், விடுதலைப் புலிகளின் ராணுவ பலத்தை வெவ்வேறு நாடுகள் தமது அரசியல், பூகோள நலன்களுக்காக அழித்துவிட்டன. விடுதலைப்புலிகளின் ராணுவ பலத்தை அழித்தன் காரணமாக தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கக்கூடிய மார்க்கத்தை அழித்து விட்டார்கள்.

விடுதலைப் புலிகளின் ராணுவ பலத்தை அழித்ததன் மூலம் இலங்கைத் தீவில் ஒரு சமரசப் பேச்சுவார்த்தைக்கு இன்றியமையாததான - அத்தியாவசியமான - அந்த அதிகார மையத்தையும் அனைத்துலக சமூகம் அழித்துவிட்டது.

இலங்கைத் தீவில் இன்று தமிழர் தரப்பில் ஒரு அதிகார வெறுமை - அதிகார வெற்றிடம் - அரசியல் வெற்றிடம் - காணப்படுகிறது. இலங்கை த்தீவில் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட முன்னரும் இந்த அதிகார வெற்றிடம் இருந்தது. அதன் காரணமாகத்தான் தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தை ஏந்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அந்த ஆயுதப் போராட்டத்தை நசுக்கியதன் மூலம் இலங்கைத் தீவில் இன்று அதிகார வெற்றிடம் தோன்றியுள்ளது.

இத்தகைய அதிகார வெற்றிடத்தை நாங்கள் எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பது பற்றியே நாங்கள் சிந்திக்க வேண்டும். இலங்கைத் தீவின் உள்ளேயே இருந்துகொண்டு இதனை நிவர்த்தி செய்யலாமா என்பதைப் பார்க்க வேண்டும்.

இலங்கைத்தீவில் இன்று 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். யாழ். குடாநாடு ஒரு திறந்த சிறைச்சாலையாக இருக்கின்றது. கிழக்கு மாகாணம் ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றது.

தெற்கில் வாழும் தமிழ் மக்கள் ராணுவத்தினராலோ அல்லது ராணுவக் கூலிப்படையாலோ எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம், எந்த நேரத்திலும் கொண்டு செல்லப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளனர்.

அதுமட்டுமன்றி சிறிலங்காவால் 1983 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 6 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமானது அங்கே தனிநாடு கேட்கும் பேச்சு சுதந்திரத்தைக் கூட தடை செய்து அதனை ஒரு குற்றமாக வைத்திருக்கிறது.

அதுமட்டுமன்றி தமிழ் இளைஞர்களை கைது செய்து தடுப்பு முகாமில் வைத்திருப்பதற்காக 1979 ஆம் ஆண்டு முதல் பயங்கரவாத தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம் கொண்டு வரப்பட்டு இன்றுவரை அவை நடைமுறையில் உள்ளன.

எனவே இந்த அடிப்படையில் மேற்படி அதிகார வெறுமையை இலங்கைத்தீவில் இருந்துகொண்டு நிவர்த்தி செய்ய முடியாது. மேற்படி அதிகார வெறுமையை புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள மக்கள்தான் நிவர்த்தி செய்யக்கூடிய நிலையில் உள்ளனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் நடத்திய போராட்டங்களால் அனைத்துலக சமூகத்தில் அவர்கள் ஒரு அரசியல் சக்தியாக இப்போது உருவாகி விட்டார்கள்.

தொடர்ச்சியாக நடைபெற்ற எழுச்சிப் போராட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் மூலம் நாங்கள் அனைத்துலக சமூகத்திடம் ஒன்றை தெளிவாகக் கூறியிருக்கிறோம்.

புலம்பெயர் தமிழர்களாகிய நாம் எமது நாடு கடந்த அரசில் பண்பை வெளிப்படுத்தியுள்ளோம் என்பது தான் அது. இது சமூகவியல் அடிப்படையிலோ அல்லது அரசியல் அடிப்படையிலோ ஒரு புது மாதிரியான நடவடிக்கை.

நாடு கடந்த அரசு என்று நாங்கள் கூறவருவது யாதெனில், அனைத்துலக ரீதியில் தமிழ்மக்களால் நடத்தப்பட்டு வருகின்ற அரசியல் போராட்டங்களை உள்வாங்கிக்கொண்டு செல்லும் ஒரு அமைப்பாகத்தான் இந்த நாடு கடந்த அரசு இருக்கும்.

நாடு கடந்த அரசை நாங்கள் எவ்வாறு அமைக்கவிருக்கிறோம்?

இப்போது அமைக்கப்பட்டிருப்பது ஒரு குழு. இந்த குழுவுக்கு இரண்டு வடிவங்கள் இருக்கின்றன. முதலாவது வடிவம் உடனடிப் பிரச்சினைகளைக் கையாள்வதற்காக செயற்படுகின்றது.

குறிப்பாக கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் நலன்களை பேணுவதற்கான நடவடிக்கை எடுக்கும் முக்கிய குழுவாக இதனை அமைத்திருக்கின்றோம்.

அடுத்து - அனைத்துலக ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒருதரப்பு அல்லது அமைப்பு ஊடாக புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களிடத்தில் ஒரு தேர்தலை நடத்தி அதன் மூலமாகத்தான் நாடு கடந்த அரசை நாங்கள் உருவாக்கவிருக்கின்றோம்.

இவ்வாறு உருவாக்கப்படுகின்ற அரசு ஜனநாயக அடிப்படையில்தான் உருவாக்கப்படுகின்றது. அதுமட்டுமன்றி ஜனநாயக அரசு ஒன்றுக்குரிய அத்தனை அம்சங்களைக் கொண்டதாகவும்தான் இந்த நாடு கடந்த அரசை உருவாக்கவிருக்கின்றோம். இந்த அரசு எந்தவொரு தனிப்பட்ட குழுவினருக்கான இடமானதாக இல்லை. தமிழ் மக்கள் எவரும் இதில் போட்டியிடலாம். போட்டியில் தெரிவு செய்யப்படுபவர்தான் இந்த சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வார்.

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்று பின்னணியில் இந்த நாடு கடந்த அரசை நாங்கள் பார்க்க வேண்டும். ஜி.ஜி.பொன்னம்பலம், செல்வநாயகம் அவர்களின் காலத்தில் நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க நாங்கள் போராடினோம்.

சத்தியாக்கிரகம், பணிப்புறக்கணிப்பு மூலம் நாங்கள் அன்று போராடினோம். ஆனால் எங்களுடைய நியாயமான போராட்டம் முறியடிக்கப்பட்டதனால்தான் தமிழ்த் தேசிய இனம் ஆயுதமேந்தி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

அந்த ஆயுதப்போராட்டம் அனைத்துலக சமூகத்தால் முறிக்கப்பட்ட சமயத்தில் நாடு கடந்த அரசு மூலம் அனைத்துலக சட்டங்களுக்கு - அனைத்துலக உறவுகளுக்கு - அனைத்துலக ஜனநாயக விழுமியங்களுக்கு - அமைவாக எமது போராட்டத்தைக் கொண்டுசெல்ல இருக்கிறோம்.

இந்தியப்படை 1987 ஆம் ஆண்டு வந்தபோது தலைவர் சுதுமலைக் கூட்டத்தில் கூறியதை நான் இங்கு உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். "போராட்ட வடிவங்கள் மாறினாலும் இலட்சியம் மாறாது, குறிக்கோள் மாறாது" என்றார் தலைவர். அந்த அடிப்படையில்தான் நாடு கடந்த அரசை முன்னெடுத்துச் செல்லவிருக்கின்றோம்.

இது ஒரு புறநிலை அரசு அல்ல. புறநிலை அரசு என்பது - நாட்டைவிட்டு வெளியே சென்று அங்கு ஒரு அரசை நடத்தி பின்னர் நாட்டு நிலைமை சுமூகமான பின்னர் திரும்பி வருவதையே குறிக்கும்.

லிதுவேனியா, எஸ்தோனியா போன்றவை சோவியத்தின் ஆக்கிரமிப்பின்போது அவ்வாறான ஒரு புறநிலை அரசை நிறுவின. அனைத்துலக நிலமை மாறியபின்னர் அவர்கள் மீண்டும் அந்த நாடுகளுக்கு சென்று அரசை அமைத்தார்கள். இந்தியாவின் ஆதரவுடன் தலாய்லாமா ஒரு புறநிலை அரசை இன்றும் நடத்தி வருகின்றார்.

ஆனால் நாங்கள் நடத்தவுள்ள நாடு கடந்த அரசுக்கு ஒரு நாடும் தேவையில்லை. எனவே எங்களுக்கு வெளிப்படையாக எந்தவொரு நாடும் அங்கீகாரம் தராவிட்டாலும் நாங்கள் நாடு கடந்த அரசை முன்னெடுத்துச் செல்லலாம்.

நாடு கடந்த அரசு அமைப்பது குறித்த எமது முயற்சியை வெளிப்படுத்திய போது, இப்படியான நாடு கடந்த அரசு அமைத்ததாக வரலாற்றில் இல்லை என்றும் இது உண்மையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான பங்களிப்பாக இருக்கும் என்று கூறினார்கள். நாங்கள் ஒரு தனித்துவமாக இருக்கின்றோம். தனித்துவமாகத்தான் எங்களுடைய போராட்டத்தை நாங்கள் நடத்திக்கொண்டு செல்லமுடியும்.

நாடு கடந்த அரசின் வெற்றியானது மாறிவரும் அனைத்துலக அரசுகளின் அரசியல் சூழ்நிலைகளில்தான் தங்கியுள்ளது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் இன்று அனைத்துலக ரீதியில் பின்னிப்பிணைந்துள்ளதை நாங்கள் பார்க்கவேண்டும்.

உதாரணமாக ஆபிரிக்க தேசிய காங்கிரசும் தென்னாபிரிக்காவும் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தேசிய விடுதலை இயக்கம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முதன்முறையாக "விடுதலைப் புலிகள் ஒரு தேசிய விடுதலை இயக்கம்" என்று கூறிய ஆபிரிக்க தேசிய காங்கிரசும் தென்னாபிரிக்காவும் சிறிலங்கா தொடர்பான வாக்களிப்பு வந்தபோது சிறிலங்காவுடன் சேர்ந்து வாக்களித்ததையும் நாங்கள் பார்க்கவேண்டும்.

தமிழ்த் தேசியப் போராட்டம் அனைத்துலக அரசியலுடன் இன்று இரண்டற கலந்துவிட்டது. எங்களுடைய போராட்டமானாலும், நாடு கடந்த அரசு என்றாலும் சரி அதனுடைய வெற்றி மாறிவரும் அனைத்துலக பூகோள அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் தங்கியுள்ளது.

நாடு கடந்த அரசு குறித்த அறிவிப்பை எதற்காக அவசரப்பட்டு செய்தார்கள், எதற்காக மற்றவர்களுடன் கலந்தாலோசிக்காமல் அறிவித்தார்கள் என்று சிலர் கூறினார்கள். இந்த நிலைப்பாடு என்பது விடுதலைப் புலிகளிடம் இருந்துதான் வந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்பது அனைத்துலக சமூகத்தாலும் தமிழ்மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட விஷயமாகும். அனைத்துலக நாடுகளில் நடந்த எந்தவொரு ஆர்ப்பாட்டமானாலும் எந்தவொரு எழுச்சி நிகழ்வானாலும் அவற்றில் தமிழ் மக்கள் தாயகக் கொடியுடன்தான் நிற்கின்றனர்.

தமிழர் தேசியம் - தமிழர் தாயகம் - தமிழர் தன்னாட்சி என்ற மூன்று நிலைப்பாடுகளையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பாகத்தான் இதனை நாங்கள் கொண்டுசெல்ல இருக்கிறோம். ஏற்கனவே நான் கூறியதுபோல இதனை ஒரு தேர்தலின் மூலம்தான் உருவாக்குவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

ஜனநாயக அடிப்படையில் உருவாக்குவதால் இந்த அமைப்புத்தான் தமிழர் சம்பந்தமான, தமிழர்களின் அபிலாசைகள் சம்பந்தமான ஒரு அதியுயர் கட்டமைப்பாக இருக்கும். ஜனநாயகத்தின் அடிப்படையில், ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் நாடு கடந்த அரசு உருவாக்கப்படுவதால் இதனையே தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளை வெளிப்படுத்தும் அதியுயர் அமைப்பாகக் கொண்டுசெல்ல இருக்கிறோம்.

நாடு கடந்த அரசு அதியுயர் அமைப்பாக இருப்பதால் ஏனைய அமைப்புக்களுக்கு எந்தவிதமான இடமும் இல்லை என்று கருதிவிட முடியாது. இங்கு ஒன்றுக்கொன்று போட்டியாக எதுவும் இடம்பெறவில்லை. உதாரணமாக அனைத்துலக மன்னிப்புச் சபை செய்கின்ற பணியை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் செய்கின்றது.

தமிழ் மக்களின் அரசியல் வேட்கை தொடர்பாக நாடு கடந்த அரசைத்தான் அதியுயர் அமைப்பாக நாங்கள் கொண்டு செல்ல இருக்கிறோம். இது தொடர்பாக பல்வேறு ராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், பல்வேறு அமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

முஸ்லிம் பேராசிரியர் ஒருவர் கடிதம் அனுப்பியிருந்தார். அதில் ''இது ஒரு வரலாற்று நிகழ்வு, தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை உருவாக்கவேண்டும். எனவே இந்த அமைப்பில் நானும் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்" என்று கூறியிருந்தார்.

இந்த அமைப்பில் நாங்கள் எவ்வாறு பங்களிப்புச் செய்வது என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். ஆஸ்திரேலியாவில் இருந்து சிவில் பொறியியலாளரான மாணவர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சலில் தானும் இதில் பங்களிக்க விரும்புகிறேன், என்ன மாதிரி பங்களிக்கலாம் என்று கேட்டிருக்கிறார்.

தற்போது நாடு கடந்த அரசுக்கான ஆலோசனைக் குழுவே உருவாக்கப்பட்டிருக்கிறது. அடுத்து நாடு கடந்த அரசு குழு உருவாக்கப்படும். இதில் மேற்படி மூன்று கோட்பாடுகளையும் ஏற்றுக்கொண்ட அனைத்து தரப்பையும் இயலுமான அளவிற்கு உள்ளடக்கி உருவாக்குவோம். அத்துடன் நாடுகள் சார்ந்த அளவிலும் உபகுழுக்களை உருவாக்கி அவற்றின் ஊடாகத்தான் இதனை நாங்கள் கொண்டுசெல்ல இருக்கிறோம்.

நீங்கள் உங்களது கருத்துகளை கூறவேண்டுமானால் நாங்கள் ஏற்கனவே வெளியிட்ட மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொண்டு உங்களது கருத்துக்களை கூறலாம். இந்த அமைப்பு எப்போது வரப்போகிறது, இந்த குழுக்கள் எப்போது உருவாக்கப்படப்போகின்றன என்பதை பார்த்துக் கொண்டிராமல் இந்த அமைப்பு எப்படி வரவேண்டும் என்பதை உருவாக்குவதில் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் பங்கு உண்டு.

எனவே நீங்கள் ஒவ்வொருவரும் எப்படி நாங்கள் இதனை கொண்டுசெல்ல வேண்டும் என்ற உங்களது கருத்துக்களை அனுப்பினால் அவற்றையும் நாங்கள் கருத்தில் எடுத்துக்கொண்டு - இறுதி வடிவத்தை தயாரிப்போம்.

இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வரைவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த பேராசிரியர் சொர்ணராஜா எமது ஆலோசனைக்குழுவில் இருக்கின்றார். அவர் ஒரு வரைவை கடந்த வாரம் தயாரித்திருக்கிறார். அதாவது நாடு கடந்த அரசை முதலில் நாம் கிழக்கு இந்தியக் கம்பனி வடிவத்தில் கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அதாவது, பொருளாதார ரீதியில் ஒரு பலம் மிக்க வடிவமாக கொண்டு வர வேண்டும் என்று அவர் கருதுகிறார்.

இங்கிலாந்து நாட்டவர் இலங்கைக்கு வருகை தந்து ஆதிக்கம் கொள்வதற்கு முன்பாக கிழக்கு இந்தியக் கம்பனி வடிவத்தில் அங்கு வந்து தமது ஆதிக்கத்தை செலுத்தினார்கள். எனவே நாங்களும் முதலில் பொருளாதார அடிப்படையில் நாடு கடந்த அரசை கொண்டுசென்று அதன் அடிப்படையில் நாங்கள் அரசியலுக்குள் பிரவேசிக்க வேண்டும் என்று அவர் கருதுகிறார்.

இப்படி பல்வேறு கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த கருத்துக்களை எல்லாம் ஒன்றாக இணைத்து எங்களுடைய சொந்த அமைப்பாக கருதி நாடு கடந்த அரசுக்கான உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள்.

நடந்து முடிந்த சம்பவத்திற்காக நாம் மனமுடைந்து விடக்கூடாது. நாங்கள் இங்கு இப்படியான கூட்டம் நடத்துவதே ராஜபக்ச அரசு எங்களை இன்னமும் அரசியல் ரீதியாக அடிமை கொள்ளவில்லை என்பதை வெளிக் காட்டும்.

எனவே நாடு கடந்த அரசு அந்த அடிப்படையில்தான் உருவாக்கப்படவிருக்கின்றது. தியாகம் விரயமானதாக வரலாறு இல்லை, நீதி தோற்றதாக சரித்திரம் இல்லை.

தர்மம் தனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்றார் ருத்ரகுமாரன்.

thanks to: www.thatstamil.com

ஒரு முதியவர் தெரிவித்த திடமான கருத்து

""பயத்தை மறைக்க நினைப்பவன் நடுராத்திரியில் காட்டுவழியில் பாட்டு பாடிக்கொண்டே செல்வதுபோலத்தான் இருக்கிறது ராஜபக்சே அரசின் நடவடிக்கைகள்'' என்கிறார் அந்த ஈழத்தமிழர்.

கொழும்பில் வாழ்ந்து ஈழத்தில் உள்ள அரசாங்க வதை முகாம்களுக்குச் சென்று, அங்கு தமிழர்கள் படும்பாட்டை சகிக்க முடியாமல் வெளியே வந்து, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தனது பயோ-டேட்டாவைத் தவிர்த்துவிட்டு நம்மிடம் விரிவாகப் பேசினார்.

""தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்த அளவுகூட முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு இலங்கையின் தற்போதைய நிலவரம் பற்றித் தெரியாது. அந்தளவுக்கு முடக்கப்பட்டிருக்கிறார்கள். நக்கீரனில் வெளியாகும் தகவல்களை உறவினர்கள் மூலமா போன் வழியா தெரிஞ்சுக்குறாங்க. அதுதான் இப்ப அவர்களுக்கு ஒரே ஆறுதலும் நம்பிக்கையுமாகும். கொழும்பிலிருந்து புறப்பட்டால் செட்டிகுளம் தொடங்கி, வவுனியா வரைக்கும் முகாம்கள்தான்.

இதில் செட்டிகுளம் கதிர்காமர் முகாம் மட்டும்தான் சுத்தமாகவும் வசதியாகவும் இருக்கு. அதைத்தான் ஐ.நா. அதிகாரிகளுக்கும் இந்தியப் பத்திரிகையாளர்களுக்கும் காட்டி ஏமாத்திக்கிட்டிருக்காங்க.

எப்படியாவது சொந்த இடத்துக்குப் போகணும்ங்கிறது தான் முகாம்களில் இருக்கிற மக்களோட விருப்பம். சாப்பாடு, தண்ணீர், துணிமணி எதுவும் கிடைக்கிறதில்லை. நீர்கொழும்பு பகுதியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் பகுதியிலிருந்து வந்த தமிழக மீனவர்கள் அதிகம். அவங்க நடத்தி வந்த 50 தமிழ்ப்பள்ளிக்கூடங்களை மூடியாச்சு. குடப்பாடுல உள்ள விஜயரத்னா பள்ளிக்கூடத்துல சிங்களம் படிக்க ஆரம்பிச்சிட்டாங்க. தமிழர்கள் பேசிக்கொள்ளும்போதும் சிங்களத்தில தான் பேச வேண்டிய நிலைமை. ராணுவத்துக்கிட்டேயிருந்து தப்பிக்கணுமே...

ஆமிக்காரங்களோ விசாரணைங்கிற பேரில் இளசுகளைப் பிடிச்சிட்டுப் போறாங்க. உறவினர்களைப் பார்க்க ணும்னு நான் முகாம்களுக்குப் போனப்பவும் இதே நிலைமைதான். இரண்டு நாள் கழிச்சி அந்த இளைஞர்கள் காட்டுப்பகுதியில் கை, கால் வெட்டப்பட்டு இறந்து கிடந்தாங்க. அதே நேரத்தில், வவுனியா காட்டுப் பகுதிக்குப் போயிட்டுத் திரும்பும் ஆமி வாகனத்தில் 10, 15 ஆமிக்காரன் பொணமா வருவதையும் பார்த்தேன். எல்லாம் பொடியன்களின் (புலிகள்) அட்டாக்தான்.

யூலை 13-ந் தேதி, காட்டுப் பகுதியில் பொடியன்கள் இருக்காங்களான்னு கண்காணிக்கும் ஆமிக் காரங்களுக்கு 3 லோரியில் உணவுப் பொருள் போனது. இதை தெரிஞ்சுக்கிட்ட புலிகள் 10 பேர் ஜெயபுரம்-முல்லைத்தீவுக்கு இடையில் உள்ள காட்டுப்பகுதியில் லோரிகளை வழிமறிச்சு, அதிலிருந்த ஆமிக்காரங்களை கொன்னுபோட்டு , உணவுப் பொருளோடு அந்த லாரிகளை காட்டுக்குள்ளே கொண்டு போயிட்டாங்க. இந்தக் கோபத்திலேதான் முகாமில் இருந்த 40 இளைஞர்களை இழுத்துக்கிட்டுப் போயி, காட்டிலே வெட்டிப் போட்டான்கள் ஆமிக்காரன்கள்.

காட்டுப் பகுதியில் புது விதமான பயிற்சிகளோடு ஆயத்தமாகிவிட்ட புலிகள், இலங்கையின் முக்கிய நகரங்களை குறி வச்சுத்தாக்கத் திட்டமிட்டிருக்காங்க. முக்கியமான அரசு அலுவலகங்களும் தாக்கப்படும். புலிகளின் தாக்குதல் தீவிரமானால் அப்பாவித் தமிழர்களை ராஜபக்சே அரசாங்கம் சித்திரவதை செய்யும். அதனால கொழும்பு, நீர்கொழும்பு பகுதியில் உள்ள தமிழர்கள் யாழ்ப்பாணம், திரிகோணமலை பகுதிக்கு கொஞ்சம் கொஞ்சமா இடம்பெயர ஆரம்பிச்சிட்டாங்க. இதுவும் இயக்கத்தோட மறைமுக உத்தரவுதான்.

புலிகள் ஒரு பாரிய அளவிலான தாக்குதலை நடத்தப்போறாங்கன்னு ராஜபக்சே அரசாங்கத்துக்கும் தெரிந்திருக்கு. அதனாலதான் ஆமிக்கு ஆள் சேர்க்கிறார். ராணுவப் பயிற்சிக்கு இந்தியாவின் உதவியைக் கேட்டிருக்கிறார். வன்னிப் பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றுவதுங்கிற பேரில் இந்திய ராணுவத்தை அழைத்து, காட்டில் புதிய வியூகத்தோடு செயல்படும் புலிகளை அழிப்பதுதான் ராஜபக்சேவின் திட்டம். அதோடு, சொந்த மண்ணுக்கு எப்போது போவோம்ங்கிற ஏக்கத்தோடு முகாமில் இருக்கும் தமிழர்களை கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபடுத்தவும் திட்டம் போடப்பட்டிருக்கு.

சொந்த மண்ணில் குடியிருக்கலாம்ங்கிற ஆசையோடு வரும் தமிழர்களை கண்ணிவெடிகளில் சிக்க வைத்து கொன்று குவிக்கும் கொடூரத் திட்டமும் போடப் பட்டிருக்கு.

முகாம்களில் மூன்றரை லட்சம் தமிழர்கள் இருக்கும் போது, 40 ஆயிரம் பேர்தான் இருக்காங்கன்னு ராஜபக்சே சொல்லி இருக்கிறார். மற்றவங்களை கண்ணி வெடியில் கொன்னுடலாம்ங்கிற கணக்கோடுதான் அவர் இப்படி சொல்கிறார். இதெல்லாம் உலக நாடுகளுக்கும் தெரிந்திருக்கு. ராஜபக்சேவின் கொடூரத் திட்டங்களை பிரபாகரன் நொறுக்கிவிடுவார்னும் தெரியும். அதனாலதான் தன் நாட்டு மக்கள் யாரும் இலங்கைக்கு செல்ல வேண்டாம்னு அமெரிக்கா எச்சரித்திருக்கு.

கண்ணி வெடி மூலமாகவும் முகாம்களில் உள்ள இளைஞர்களை கடத்திச் சென்றும் தமிழினத்தை அழிக்கும் அடுத்த திட்டத்தை ராஜபக்சே அரசாங்கம் தயார் பண்ணியிருக்கு. சிங்களன் இனி என்ன திட்டம் போட்டாலும் புலிகள் தரப் போகும் அடியைத் தாங்குவது கஷ்டம்தான். உலகத்தாரே... பார்க்கத்தான் போறீர்கள்'' என்றார் அந்த தமிழர்.

Thanks to: www.eeladhesam.com

தமிழகத்திலேயே தமிழனை அடிக்கும் சிங்களர்கள்!

'தமிழனுக்கு இதைவிட கேவலம் வேறென்ன வேணும்ங்க?! ஈழத்துல நம்மாளுங்களை அழிச்சப்பதான் தட்டிக்கேட்கத் திராணியில்லாம இருந்துட்டோம். ஆனா, தமிழ்நாட்டுக்குள்ளே வந்து சிங்களன் நம்மளை அடிக்கிறான்னா எவ்வளவு திமிரு இருக்கணும்!'' - கனல் வார்த்தை தெறிக்கிறது திருப்பூர் திசையிலிருந்து!


திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகிலுள்ள காளாம்பாளையத்தில் 'மெர்டியன் அப்பேரல்ஸ்' என்ற பனியன் நிறுவனம் இயங்கி வருகிறது. வினோத்குமார் என்ற வட இந்தியருக்கு சொந்தமான இந்த நிறுவனத்தில்,

சுமார் ஆயிரத்து ஐந்நூறு பணியாளர்கள் பணிபுரிகி றார்கள். இதில் மூன்றில் ஒரு பங்கினர் தமிழர்கள். மற்றவர்கள் ஒரிஸ்ஸா, உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், ஜூலை 17-ம் தேதி கம்பெனி கேன்டீ னுக்குள் ஒரு பெரிய மோதல் உருவாகி, தமிழர்கள் தர்ம அடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஒரிஸ்ஸா

மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடம் கடியும், அடியும் வாங்கிய செல்ல பாண்டியன் அதைப் பற்றிச் சொல்கிறார். ''மூணு மாசத் துக்கு முன்னாடி வரைக்கும் நல்லாதான் இருந்துச்சுங்க கம்பெனி. ஆனா, சமீந்தா பண்டாராங்கிற சிங்களன் என்னிக்கு இங்கே ஜெனரல் மேனேஜரா வந்து சேர்ந் தாரோ... அன்னிலேருந்து எங்களுக்கு ஆரம்பிச்சுதுங்க தலைவலி. அந்தாளுக்கு தமிழர்களைக் கண்டாலே பத்திக் கிட்டு எரியும். நாங்க எதைப் பண்ணினாலும் தப்புன்னு சொல்லித் திட்டுறது, மிரட்டுறதுன்னு டார்ச்சர் பண்ணிட்டே இருப்பாரு. எல்லாத்தையும் தாங்கிட்டு வேலை பார்த்துட்டு இருந்தோம். அதனால, மத்த மாநிலத் துக்காரங்களை வச்சு தமிழ் ஆளுங்களை வம்பு பண்ண ஆரம்பிச்சாரு. குறிப்பா, ஒரிஸ்ஸா ஆளுங்ககிட்ட, 'நீங்க தமிழனுங்ககூட பழக்கம் வச்சுக்கக்கூடாது'னு சொல்லி யிருக்காரு. அவங்க முதல்ல இதைக் கண்டுக்கல. ஆனா, 'வேலையை விட்டு தூக்கிடுவேன்'னு மிரட்டுனதால, அவங்க எங்ககிட்டே தேவையில்லாம முறைச்சுக்க ஆரம் பிச்சுட்டாங்க. லேசா ஆரம்பிச்ச உரசல், நாளாக நாளாக வளர ஆரம்பிச்சுடுச்சு.

அன்னிக்கு கேன்டீன்ல வச்சு எங்களுக்கும், ஒரிஸ்ஸாக் காரங்களுக்கும் சின்ன வாக்குவாதம் உருவாச்சு. ஆனா,

திடீர்னு அவங்க அடிதடியில இறங்கிட்டாங்க, கத்திரி மாதிரி இருக்கிற ட்ரிம்மரை எடுத்து கண்டபடி கீறிவிட் டாங்க. தமிழருங்களைப் பார்த்து பார்த்து அவங்க அடிச் சாங்க; கடிச்சாங்க. அவனுங்ககிட்ட கடிபட்டதுல எனக்கு ரத்தம் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு. உடனே,

இதைப் பற்றி நிர்வாகத்துகிட்ட சொன்னோம். ஆனா, கொஞ்சமும் கண்டுக்காம, தமிழர்களை அடிச்சவங்களை பாதுகாக்கறதுலேயே குறியா இருந்தாங்க. அப்புறம் நாங்க எல்லாம் அடிச்சுப் பிடிச்சு ஆஸ்பத்திரிக்கு ஓடினோம்!''

என்கிறார் வேதனையாக. இவரைப் போலவே ரவி என்பவ ரையும் ட்ரிம்மரால் நெஞ்சில் கீறிவிட்டிருக்கின் றனர். ஏஞ்சல் என்கிற பையனுக்கும் அடி விழுந்திருக்கிறது.

இதனைக் கண்டித்த தமிழர் தொழிலாளர்கள் தங்கள் கம்பெனிக்கு எதிரே பந்தல் போட்டு ஆக்ரோஷத்துடன் போராட்டத்தில் உட்கார்ந்து விட்டார்கள். அவர்களில் ஒருவரான கமலநாதன்,

''எங்க முதலாளி வினோத் நல்லவர்தானுங்க ஆனா, அவரோட பையன்கிட்டே... இந்த சமீந்தா பண்டாரா 'கம்பெனியை பக்காவா மாத்திக்காட்டுறேன்!'னு சொல்லி பவர் வாங்கிக்கிட்டு, இந்த ஆட்டம் ஆடுறாரு. இந்த கம்பெனியில ஒரு தமிழன்கூட வேலை பார்க்கக் கூடாதுங்கிறது அவரோட எண்ணம். கூடவே இலங் கையில இருந்து சிலரை கூட்டி வந்திருக்கிறாரு. அவங்களுக்கும் ஏதேதோ பொறுப்பு போட்டுக் கொடுத்திருக்காரு. அந்த இலங்கைக் காரனுங்க தமிழ் ஆளுங்களை கண்காணிச்சு, வம்புக்கிழுக்கிறதே முழுநேர தொழிலா வச்சுருக்கானுங்க. தமிழ் பொண்ணுங்க கிட்டேயும் தரக்குறைவா நடந்துக்கிறாங்க. சுடிதாரை பிடிச்சு இழுக்கிறது, பின்பக்கம் தட்டிட்டு போறதுன்னு மோசமா சிலுமிஷம் பண்றானுங்க. இதையெல்லாம் தட்டிக் கேட்டா, தகராறு வந்து அடி விழுது. இந்தப் போக்கு மாறணும்; சமீந்தாவை வேலையில இருந்து தூக்கணும்னு சொல்லித்தான் இந்தப் போராட்டத்துல உட்கார்ந்திருக்கோம்!'' என்றார்.

நிர்வாகத் தரப்பு மட்டும், ''இனவெறித் தாக்குதல் எல்லாம் இங்கே நடக்கல. தொழிலாளர்களுக்குள்ள நடந்த சின்ன மோதலை பெரிய விஷயமா சிலர் வேணும்னே ஊதிவிட்டிருக் காங்க. இந்த விவகாரம் போலீஸ் கேஸாயிருக்கு. போலீஸ்காரங்களும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்காங்க. நாங்களும் பேச்சுவார்த்தை நடத்து றோம். கூடிய விரைவில் இந்த விவகாரம் சரிசெய்யப்படும்!'' என்று சொல்கிறது.

இந்த கம்பெனியில் மட்டுமில்லை...

திருப்பூரில் பல கம்பெனிகளில் இப்படியரு நிலை இருப்பதாகச் சொல்லிச் சாடும் ம.தி.மு.க-வின் திருப்பூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரான வழக்கறிஞர் பன்னீர்செல்வம், ''திருப்பூர்ல இருக்கிற பல பிரபல பனியன் கம்பெனிகள்ல சிங்களளர்கள் முக்கியப் பொறுப்புல இருக்கிறாங்க. தமிழ் தொழிலாளர்களை நசுக்கிப் பிழியுறதுதான் இவங்களோட முக்கிய வேலையே. 'யூனியன் வைக்கக்கூடாது; சட்டம் பேசக் கூடாது; எதிலும் நியாயம் கேட்கக் கூடாது'ன்னு சொல்லி தமிழ் தொழிலாளர்களோட கழுத்தை நெரிக்கிறாங்க. தமிழ் பெண்கள் கிட்டேயும் பாலியல் அத்துமீறல் நடக்குது. எவ்வளவு கொடுமையான நிலை பாருங்க... இதைவிட பெரிய கேவலம் தமிழனுக்கு வேறென்ன இருந்திடப் போகுது?

இந்த சிங்களர்களுக்கு பெரிய பொறுப்பும், கைநிறைய சம்பளமும், காரும் பங்களாவும் கொடுத்து ஆடவிட்டிருக்கிற பனியன் கம்பெனி முதலாளிகளுக்கு 'தமிழுணர்வு அற்றுப் போயிடுச்சு'ன்னுதானே அர்த்தம்? மெர்டியன் அப்பேரல்ஸ்ல நடந்தது அப்பட் டமான இனவெறித் தாக்குதல்தான். இதை அப்படியே மூடிமறைக்க முயலாம, அந்த சிங்களர்களை உடனடியா வேலையில இருந்து தூக்கி எறியணும். இங்கே இருக்கிற எல்லா கம்பெனிகளுமே எந்த சிங்களர்க ளுக்கும் கூலி வேலை கூட கொடுக்கக்கூடாது. கூடிய சீக்கிரத்தில் அத்தனை கம்பெனி தமிழ் தொழிலாளர்களையும் ஒன்று சேர்த்து மிகப்பெரிய போராட்டங்கள்ல இறங்குவோம்!'' என்றார் ஆக்ரோஷமாக.

Thanks to: www.eeladhesam.com

Thursday, July 30, 2009

குற்றமற்ற ஈழத்தமிழனுக்கு தமிழ்நாட்டிலும் சிறை கருணாநிதியின் அன்பளிப்பு

செங்கல்பட்டில் ஈழத்தமிழனுக்கு சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறைச்சாலை இயங்கி வருவது ஈழத்தமிழருக்கு தெரிந்த‌ விடயம் ஆனால் தமிழ்நாட்டு தமிழ் மக்களை பொறுத்தவை அது சிறப்பு முகாம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது தமிழ்நாட்டு தமிழ் மக்களை பொறுத்தவை அது சிறையா அல்லது சிறப்பு முகாமா என்பது தெரியாது காரணம் அரசியல்வாதிகள் மக்களை மந்தைகளாக்கி சுய நிணைவற்றவர்களாக வைத்துள்ளர். அதனால் மக்களுக்கு ஈழத்தமிழனுக்கு உதவிசெய்யும் முகமாக கேள்விப்பட்டுள்ளார்கள் ஆனால் உண்மையில் இந்த முகாமை நடத்துவது இந்திய மத்தியரசும்
மற்றும் சிறிலங்கா அரசும் தான் வெளிப்பார்வைக்கு தமிழ்நாட்டு அரசால் நடத்தப்படும் முகாம் போல் தெரியும் இங்கு உள்ள ஈழத்தமிழர்கள் எதுவித குற்றமற்ரவராக சந்தேகத்தின் அடிப்படையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். வவுனியாவில் இருக்கும் முட்கம்பி வேலி சித்திரவதை முகாமிற்கு நிகராக இம்முகாம் நடத்தப்படுகின்றது இவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணைகள் முடிந்து நீதிமன்றத்தால் குற்றமற்ரவர்கள் என்று தீர்ப்பு கூறிய‌ பின் ஈழத்தமிழன் என்ற ஒ ரே காரணத்துக்காக சிங்கள பேரினவாத அரசு போல்.தமிழ்நாட்டு அரசு.. இந்திய மத்தியரசுக்கும் மற்றும் சிறிலங்கா அரசுக்கும் கைப்பொம்மையாக தமிழ்நாட்டு அரசு செயல்பட்டு இந்திய சட்டதிட்டத்தையும் மீறி நிரபராதிகளான இவர்களை தமிழ்நாட்டு அரசு சிறைவைத்துள்ளது..செங்கல்பட்டு (சிறப்பு முகாம் )
சிறையில் மக்களை சுதந்திரமாக நடமாடவே அல்லது உறவினரை பார்க்கவே அனுமதிக்காமல் பல ஆண்டு காலமாக‌ சிறை வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் தங்களை விடுதலை செய்யக்கோரியும் உறவினரை பார்க்க அனுமதிக்குமாறும் கோரி 29.07.09 இன்று ஏழாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கின்றனர் இதில் இருவரின் நிலை படுமோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் செங்கல்பட்டு அரசினர் வைத்தியசாலையில் நேற்றயதினம் 28.07.09 அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காந்திய தேசம்உண்ணாவிரதத்திற்கு மதிப்புக்கொடுக்கும் தேசம் என்று வாய்கிளிய கத்துபவர்கள் இன்றும் சரி என்று சரி உண்ணாவிரதத்திற்கு மதிப்புக்கொடுப்பவர்கள் அல்ல அன்று ஐந்து அம்ச கோரிக்கைகளை வைத்து திலீபன்உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தான்.

தேவதாசி குலத்தில் தெலுங்கருக்கு பிள்ளையாய் பிறந்த தட்சணாமூர்த்தியாகிய கருணாநிதிக்கு தமிழை படித்தால் மட்டும் தமிழ்பற்றே இனப்பற்றே வந்துவிடாது பிறப்பிலேயே தமிழனாக பிறந்தவனுக்கு தான் இனப்பற்றும் மொழிப்பற்றும் இருக்கும் இதுக்கு உதாரணம் கருணாநிதி...???

source: www.eeladesham.com

Tuesday, July 28, 2009

ஈழத்தமிழ் மக்களுக்கு இழைத்துவந்த துரோகத்தை இந்தியா தொடரப்போகின்றதா?

போர் நிறைவு பெற்றுவிட்டால் அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு தொடர்பாகவே அதிக அக்கறைகள் காண்பிக்கப்படுவதுண்டு. ஆனால் சிறீலங்காவில் நடைபெறுபவை மறுதலையானவை.

இறுதிக்கட்ட கடும் சமரில் 25,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும், 20,000 இற்கு மேற்பட்ட மக்கள் ஊனமடைந்தும், 50,000 இற்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்தும் உள்ளதுடன், ஏறத்தாள மூன்று இலட்சம் மக்கள் முட்கம்பிகளால் சூழப்பட்ட தடை முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.

உலகின் ஜனநாயகம் தொடர்பாக கூச்சலிடும் எந்த ஒரு சக்தியும் இந்த மக்கள் தொடர்பாக காத்திரமான ஒரு நடவடிக்கையை இதுவரையில் மேற்கொள்ளவில்லை. வன்னியின் 15,000 சதுர கி.மீ பரப்பளவில் வாழ்ந்த மக்கள் இன்று முற்று முழுதாக அவர்களின் வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் தாயகப்பகுதி முற்று முழுதான இராணுவ வலையமாக மாற்றப்பட்டும் வருகின்றது.
விடுதலைப்புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என வறட்டு கொள்கைகளை முன்வைத்து வந்த இந்திய மத்திய அரசு, தற்போது விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ள நிலையிலும் தமிழ் மக்கள் மீதான எந்தவொரு மனிதாபிமான நடவடிக்கையையும் மேற்கொள்ள முன்வரவில்லை.

மாறாக தமிழ் மக்களின் உரிமைப்போருக்கான அடையாளங்களை முற்றாக துடைத்தழிக்கும் கைங்காரியங்களில் அது ஈடுபட்டுவருகின்றது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை முன்நிறுத்தி அதனை காப்பதற்கு என தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்துவிட அது மறைமுகமாக பல காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றது.

அதன் முதற்கட்டமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலமையை மாற்றுவதற்கு இந்தியா முற்பட்டுள்ளது. சில நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்புகொண்ட இந்திய புலனாய்வு அமைப்பான “றோ” அது தொடர்பில் பல மிரட்டல்களை விடுத்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமது கருத்துக்களுக்கு இணங்காது விட்டால் பாரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ் தேசியத்தின் கோட்பாடுகளை சிதைக்கும் மாற்றுக்குழுக்களை உருவாக்கும் முயற்சியிலும் இந்தியா மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றது.

அதற்கு தேவையான உறுப்பினர்களை தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் மக்களின் முகாம்களில் இருந்து பலவந்தமாக திரட்டியும் வருகின்றது. விடுதலைப்புலிகள் முற்றாக முறியடிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்து வருகின்ற போதும், விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் எவையும் கடந்த இரு மாதங்களாக இடம்பெறாத போதும் இந்தியாவை பொறுத்தவரையில் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் அரசியல் உறவுகளை வளர்த்துக்கொள்ள விரும்பவில்லை என்றே தெரிகின்றது.

அந்த அரசியல் உறவுகளின் ஊடாக அது தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை பெற்றுத்தரப்போவதுமில்லை. அதாவது காலம் காலமாக ஈழத்தமிழ் மக்களுக்கு இழைத்துவந்த துரோகத்தை இந்தியா தொடரப்போகின்றது என்பது மட்டும் தெளிவானது.

எனவே அதனை எதிர்கொண்டு இந்திய – சிறீலங்கா அரசுகளின் பிடியில் இருந்து ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றெடுக்கும் சக்தியாக மீண்டும் தமிழினம் போராடவேண்டும் என்பது தான் தற்போது எமக்கு விடப்பட்டுள்ள ஓரே வழி.
போராட்டத்தின் பாதை என்ன? என்பது அல்ல இங்கு உள்ள பிரச்சனை நாம் எவ்வாறு ஒன்றிணைந்து போராடப்போகின்றோம் என்பதே தற்போது எமக்கு முன் உள்ள சவால்கள்.

கால ஓட்டத்தில் எமது மக்களின் வலிகளும் வேதனைகளும் கலைந்து போகும் முன்னர் எமது இனத்தின் விடுதலைக்காக நாம் களத்திலும், புலத்திலும் உள்ள எமது போராட்ட சக்திகளை பலப்படுத்தவேண்டும்.

source: www.nerudal.com