Monday, August 31, 2009

சிங்களவர்களால் சிதைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள்: மீண்டும் அதிர்ச்சியூட்டும் படங்கள்





இலங்கையில் உள்ள இராணுவ வதை முகாமில் தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று நிர்வாணமாக்கி, தலையில் சுடும் காட்சிகளை லண்டனில் உள்ள சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டது.

இந்நிலையில் இலங்கை இராணுவம் ஈழத்தமிழர்களை கொன்று பெண்களையும் இளைஞர்களையும் முழுநிர்வாணமாக்கி புகைப்படங்களை எடுத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. விமான ஓடுபாதையில் இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.

இது அனுராதபுரம் வான் தாக்குதலாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இறந்த போராளியின் மீது தனது பூட்ஸ் காலை வைத்து இலங்கை இராணுவம் புகைப்படம் எடுத்துள்ளது.

இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தவேண்டாம். ஒரு குழிக்குள்ளாவது போட்டு புதைத்திருக்கலாம். அப்படி செய்யாமல் காக்கா,குருவி கொத்தித்தின்ன அப்படியே போட்டு வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இறந்த உடலத்தை நிர்வாணமாக்கிப் பார்க்கும் சாக்கடைப் புத்தி உலகிலேயே சிங்கள இனத்திற்கு மட்டும் தான் இருக்கும் என்று ஈழ ஆதரவாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.

Thursday, August 27, 2009

காலத்தை தவறவிட்டால் வரலாறு எம்மை மன்னிக்காது

தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் தொடர்ச்சியான இன அழிப்பின் கோரத்தாண்டவம் ஒன்றை பிரித்தானியாவின் சனல் போஃர் தொலைக்காட்சி நிறுவனம் துணிச்சலாக வெளிக்கொண்டு வந்துள்ளது.

சிறீலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பே இந்த காணொளியை வெளியிட்டிருந்தது. அதனை பிரித்தானியா தொலைக்காட்சி துணிச்சலாக உலகின் கண்களின் முன் கொண்டுவந்துள்ளது. இந்த நவீன உலகில் காண்பவர்கள் கண்கலங்கி போகும் அளவிற்கு நிர்வாணமாக இழுத்து வரப்படும் இளைஞர்கள் ரீ-56 ரக துப்பாக்கிகள் மூலம் மிக அருகில் வைத்து தலையில் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் மனித மனங்களை உலுக்கியுள்ளது.

இந்த படுகொலையானது இந்த வருடத்தின் ஜனவரி மாதமளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழப்பகுதிகளில் இருந்து இராணுவத்தினரால் வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள், கைதுசெய்யப்பட்டவர்களே பெருமளவில் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்பது தெளிவானது.

தொழில்நுட்ப வசதிகள் குறைந்த முன்னைய காலங்களில் உலகில் நடைபெற்ற படுகொலைகளுக்கான ஆதாரங்களை சேகரிப்பது கடினமானது. ஆனாலும் கூட ஆதாரங்களை தேடி கண்டறிந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை தண்டித்த இந்த ஜனநாயக உலகம் மிருகங்களை போல வெட்ட வெளிகளுக்குள் இழுத்து வரப்பட்டு தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான பல ஆதராங்கள் கிடைத்துள்ள நிலையில் என்ன நடவடிக்கையை எடுக்கப்போகின்றது?

சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர் குற்றங்கள் பலவற்றிற்கான ஆதாரங்களை மேற்குலக ஊடகங்கள் துணிச்சலாக வெளியிட்டு வரும் நிலையில் ஐ.நாவையும், மனித உரிமைகள் மீது சிறிதளவேனும் நம்பிக்கை கொண்டுள்ள மேற்குலக நாடுகளையும், அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களையும் நோக்கி நாம் மிகப்பெரும் அழுத்தங்களை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

சிங்கள இனவெறியர்களின் இந்த கோரத்தாண்டவத்தையும், ஆதரவற்ற நிலையில் அனாதரவாக செத்துவிழும் தமிழ் மக்களின் தலைவிதியையும் வெளிக்கொண்டுவந்துள்ள இந்த காணொளி படத்தை உலகில் உள்ள ஒவ்வொரு தமிழ் மகனும் பார்க்க வேண்டும்.

அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இதனை பார்க்கவேண்டும். முடிந்தால் உலகத்தின் அத்தனை மனித குலங்களும் இதனை பார்க்கவேண்டும் அதற்கான வழியை நாம் ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் எத்தனையோ பல ஊடகங்கள் உள்ள நிலையில் அவை தமிழ் இனத்தின் பேரவலம் தொடர்பாக தனித்துவமாக செய்திகளை சேகரித்து போட முடியாத நிலையில் மேற்குலக ஊடகங்கள் தமிழ் மக்களின் பேரவலங்களை துணிச்சலுடன் வெளிக்கொண்டுவருவது மிகவும் போற்றத்தக்கது.

தமிழக தொலைக்காட்சிகள் களிப்பூட்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பில் எம்மை ஒரு மயைக்குள் தள்ளிவருகையில் மேற்குலகம் எமக்காக குரல்கொடுப்பது எமக்குள் ஒரு சிறிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி வருகின்றது.

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலகில் பரந்து வாழும் அத்தனை தமிழ் மக்களும் ஒன்று திரண்டு போராடுவதற்கு தேவையான ஆதாரங்களை மேற்குலக ஊடகங்கள் மெல்ல மெல்ல வலுப்படுத்தி வருகின்றன. ஆனால் அதற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டிய கடமை எம்மிடம் தான் உண்டு.

தமிழ் இன அழிப்பில் ஈடுபட்ட படை அதிகாரிகளை வெளிநாடுகளில் தூதுவர்களாக நியமிப்பதன் மூலமும், அவர்களை ஐ.நா சபைக்கு அழைத்து செல்வதன் மூலமும் அவர்களின் மீதுள்ள குருதிக்கறைகளை சிறீலங்கா அரசு கழுவ முற்படுகின்றது. ஆனால் அதனை தடுத்து நிறுத்தி அனைத்துலக நீதிமன்றத்தில் சிறீலங்கா அரசினை நிறுத்த வேண்டிய கடமையும், அதற்கான பலமும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு உண்டு. அதற்கான காலம் இன்னும் கடந்துவிடவில்லை.

ஆனால் காலத்தை நாம் தவறவிட்டால் வரலாறும் எம்மை ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை.

Thanks to: www.sankathi.com

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்தே இன்னும் பல தமிழர்களை கொல்வோம்!

அறிக்கையும், விளக்கமும் பெற்றுக் கொள்வோம் ...!
நேற்று காலையில் இணையத்தை பயன்படுத்தும் தமிழர்கள் அனைவருக்கும் அந்த காணொளியை காணும் வாய்ப்பு கண்டிப்பாக கிடைத்து இருக்கும். நிர்வாணமான நிலையில் கரங்கள் கட்டப்பட்டு கும்பல் கும்பலாக தமிழர்களை சிங்கள சிப்பாய்கள் சுட்டு வீழ்த்தி பிணக்காடாக மாற்றி வைத்திருக்கும் கொடுமையை சேனல் 4 என்னும் இங்கிலாந்து ஊடகம் அம்பலப்படுத்தி இருப்பதை. உண்மையிலேயே தமிழ் தாய்க்கு பிறந்த எவனுக்கும் கண்களில் கண்ணீர் துளிர்த்து இருக்கும், தமிழன் என்றாலே ஆடைகளை அவிழ்த்து பார்ப்பது சிங்களன் வழக்கம் போல. சில மாதங்களுக்கு முன்னே போரில் செத்து விழுந்த தமிழ் போராளி பெண்களை நிர்வாணப்படுத்தி இணையதளங்களில் உலவ விட்டான் சிங்கள காடையன் என்ன செய்ய முடிந்தது நம்மால்?

முத்துகுமார் போன்ற உணர்வாளர்கள் தீ குளித்து உயிர்விட்டதுதான் மிச்சம். அடைக்கலம் கேட்ட தமிழ் மக்களை நிர்வாணப்படுத்தி நடக்க வைத்தான் சிங்களன் என்ற பொழுதும் நம்மால் வாய்திறக்க முடியவில்லையே?. கொத்து கொத்தாக தமிழர்கள் மீது குண்டுவிழுந்த பொழுது நாம்மில் பலர் “யுத்தத்தை நிறுத்துங்கள் என்று இலங்கையை நிர்பந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம். இறையாண்மை மிகுந்த இலங்கையில் இந்தியா தலையிடாது என்று பதில் வந்ததே தவிர தமிழனுக்காக இந்திய அரசாங்கம் குரல் எதுவும் கொடுத்ததா?
தவிர்க்கவே முடியாமல் இந்தக் காணொளி தமிழக அணைத்து ஊடகங்களிலும் நேற்று முதல் வெளியாகிக் கொண்டிருக்கின்றன...

இதை அறிந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா " இந்த சம்பவங்கள் குறித்து இலங்கைக்கான தூதரிடம் அறிக்கை கேட்டுள்ளோம் என்று, அல்லது விளக்கம் கேட்டுள்ளோம் என்று ...

நமக்குத் தான் தெரியுமே...! இவர்களின் விளக்கம், அறிக்கை குறித்து...நாம் அன்றாடம் இவர்கள் சொல்ல கேட்டுள்ளோம்.... பாகிஸ்தானுக்கு இவர்கள் கொடுக்கும் அறிக்கையும், விளக்கமும்...இதை அப்படியே பாகிஸ்தான் இவர்களுக்கு திருப்பிக் கொடுப்பதையும்...அதுபோல் இனிமேல் சிங்கள அரசிடம் இருந்தும் இனி அறிக்கை மற்றும் விளக்கம் வரும் ....!
இந்தியனாய் இருப்போம்...! தமிழர்களைக் கொள்வோம்..!

Thanks to: www.eeladhesam.com

தமிழீழ மக்களுக்கான அவசர வேண்டுகோள்: கொலைகார சிறிலங்காவுக்கு தண்டனை வழங்க உதவுங்கள்

இலங்கை இனவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆஸ்திரேலியா அரசாங்கத்தை கோரும் இந்த மனுவுக்கு உங்கள் அனைவரினதும் கையெழுத்து மிகவும் அவசியம்.

அனைவரையும் இதில் பங்களிக்குமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம். உங்களுக்கு தெரிந்த அனைவரையும் இதில் கையெழுத்து இடுமாறும் கேளுங்கள், அவர்கள் வேற்று இனத்தவர் என்றால் இந்த காணொளி இணைப்பை அவர்களுக்கு காண்பியுங்கள்.

இந்த இணைப்பை அழுத்தி உங்கள் பங்களிப்பை செய்யுங்கள்
http://www.voiceagainstgenocide.org/vag/node/116


ராஜபக்சேவை சர்வதேச போர்குற்றவாளியாக உலக நாடுகள் அறிவிக்க வேண்டும் - வைகோ


தமிழர்களைக் கொன்று குவிப்பதில் இலங்கை அரசு நடத்திய ரத்த வெறியாட்டங்கள் அம்பலத்துக்கு வந்தே தீரும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொட‌ர்பாக அவர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், இலங்கையின் சிங்கள கொலைபாதக அரசு, தமிழ் இனத்தை கரு அறுக்கும் திட்டத்தோடு, கோரப் படுகொலைகளை நடத்தி வருகிறது என்று தொடர்ந்து நாம் கூறிவந்த குற்றச்சா‌ற்றுகள், நூற்றுக்கு நூறு உண்மை என்பதற்கு மறுக்க முடியாத சாட்சியம் கிடைத்துள்ளது.

உலகில் இருட்டடிப்பு செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களையும், அவலங்களையும் லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. அதே தொலைக்காட்சி, நேற்றைய தினம் வெளியிட்டு உள்ள தமிழர் படுகொலை காட்சிகள், இருதயத்தை பிளக்கின்றன.

கடந்த ஜனவரி மாதத்தில் தமிழ் இளைஞர்கள் இலங்கை ராணுவத்தால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகளை அந்தத் தொலைக்காட்சி கடந்த திங்கள்கிழமை ஒளிபரப்பியுள்ளது.

அந்த இளைஞர்களை முழு நிர்வாணமாக்கி, கைகளை பின்புறமாகக் கட்டி விலங்கிட்டு, தரையில் உட்கார வைக்கப்பட்டு அவர்களின் தலையிலும், பிடரியிலும், முதுகிலும் இலங்கை ராணுவத்தினர் சுட்டுக் கொல்லும் காட்சிகள் அத் தொலைக்காட்சி ஒளிபரப்பில் இடம்பெற்றுள்ளன.

அந்தத் தமிழ் இளைஞர்கள் உயிர் பிழைக்க முயன்று, குண்டுகள் சீறி வரும்போது தலையை அங்குமிங்கும் அசைப்பதும், அதையும் மீறி அவர்கள் உடலில் குண்டுகள் பாய்ந்து அவர்கள் துடிதுடிக்க இறப்பதையும் பார்க்கும்போது, நம் உள்ளம் வேதனை அடைகிறது.

சிங்கள ராணுவம் செய்து இருக்கின்ற படுகொலைகளுக்கு அனைத்து நாடுகளின் அரசுகளும் கண்டனம் தெரிவிப்பதோடு, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் சிங்கள ராஜபக்சே அரசையும், ராணுவ தளபதிகளையும், கொடுஞ் செயலில் ஈடுபட்ட ராணுவத்தினரையும் குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டிக்க முன்வர வேண்டும்.

முல்லைத் தீவு மாவட்டத்தில், வன்னிப் பிரதேசத்தில், இப்படி நிர்வாணமாக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டு சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட இக்கொடுஞ் செயலுக்கும், தமிழர்கள் சிந்திய ரத்தத்துக்கும், சிங்கள அரசு மட்டும் அல்ல, இந்திய அரசும் பொறுப்பாளி ஆகும். தமிழர்களின் அழிவுக்கு காரணமான ஆயுதங்களையும், அனைத்து ராணுவ உதவிகளையும் அளித்த இந்திய அரசுக்கு தமிழர் வரலாற்றில் எந்நாளும் மன்னிப்பு கிடையாது எ‌ன்று வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

Wednesday, August 26, 2009

இலங்கை தமிழினப் படுகொலையின் கொடுரம்

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டு விட்டோம் என்று சிறீலங்கா அரசாங்கம் அறிவித்து மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், வெளிவந்துள்ள காணொளியானது சிறீலங்காப் படையினரிடம் அகப்பட்டுள்ள தமிழர்களை சிறீலங்கா அரசாங்கம் படுகொலை செய்கின்றது என்பதை உறுதி செய்துள்ளது.

தமிழ் இளைஞர்கள் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதைக்குள் உள்ளாக்கப்பட்டு, ஆடைகள் களையப்பட்டு, கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் தரைவெளி ஒன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பின்னர் சிறீலங்காப் படையினர் குறிந்த இளைஞர்களைக் கேலி செய்து சிரிப்பதோடு, மூடுகாலணிகளால் உதைந்து அவர்களைக் சுட்டுச் கொன்றுள்ளனர்.

காணொளியில் ஒன்பது இளைஞர்களை சிறீலங்காப் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இப்படுகொலைக் காணொளியானது சிறீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இக்காணொளியானது கடந்த சனவரிமாதம் பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் மற்றும் மனதளவில் தையிரியம் இல்லாதவர்கள் தயவு செய்து இதைப் பார்க்க வேண்டாம்

Friday, August 21, 2009

உலகத் தமிழர் பிரகடனம் - முழு சாராம்சம்




தெளிவாக படிக்க image மீது click செய்யவும்.

உலகத் தமிழர் பிரகடனம் : சென்னையில் வெளியிடப்பட்டது



இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனம் ; சென்னையில் வெளியிடப்பட்டது.

உலகத்
தமிழர் பிரகடனத்தை மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலர் வைகோ படித்து வெளியிட்டார்.

பிரகடனம் படித்து முடிக்கப்பட்ட பிறகு ஈழத் தமிழர்களுக்கு உதவ சர்வபறி தியாகத்திற்கும் தயார் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஏராளமான கருஞ்சட்டை தரித்த இளைஞர்கள் தீப்பந்தம் ஏந்தி அந்த உறுதிமொழியை ஏற்றனர். அவர்கள் அனைவருடைய சட்டையிலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் படம் அச்சிடப்பட்டிருந்தது. பின்புறத்தில் தமிழீழத்தின் வரைபடம் அச்சிடப்பட்டிருந்தது.

உலகத் தமிழர் பிரகடனம் வருமாறு :


1
ஈழத் தமிழ் மக்களின் மரபு வழி தாயகத்தில் அவர்களுக்கு முழுமையான மனித, ஜனநாயக உரிமைகள் வழங்கிடவும், அதற்கேற்ற அரசியல் அமைப்பிற்கு உத்தரவாதம் தரக்கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக உலக மக்களின், அரசுகளின் ஆதரவைத் திரட்டிடவும், ஈழத் தமிழ் மக்கள் ஒப்புக்கொள்ளக் கூடியத் தீர்வு ஒன்றை அவர்களின் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரே வழி என்பதிலும் நாங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

2. தங்கள் தாயகத்திலும், உலக நாடுகளிலும் புலம் பெயர்ந்திருக்கக்கூடிய ஈழத் தமிழர்கள் அனைவரும் அவரவர்களின் ஊர்களிலும், வீடுகளிலும் மீண்டும் குடியேறவும், அமைதியான, இயல்பான, சுதந்திரமான வாழ்க்கையை நடத்தவும் துணை நிற்க நாங்கள் உறுதி பூணு‌கிறோ‌ம்.

3.
தமிழர் தாயக மண்ணில் அத்துமீறி உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களையும், சிங்கள ராணுவ முகாம்களையும் மற்றும் ராணுவ ரீதியான அமைப்புகளையும் வெளியேற்ற வேண்டும் என ஐ.நா.வை வற்புறுத்த நாங்கள் உறுதி பூணுகிறோம்.

4.
இலங்கையில் மனித நேய உணர்வை மீறித் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளையும், கொலைகளையும் செய்த சிங்கள ராணுவ அதிகாரிகளும், அவர்களை ஏவிவிட்ட சிங்கள அரசியல் வாதிகளும் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள நாங்கள் உறுதி பூணுகிறோம்.

5.
உலகில் உள்ள மற்ற தேசிய இன மக்களைப் போல முழுமையான, இறைமை உள்ள மக்களாக வாழும் உரிமையில் தங்களின் எதிர்காலத்தை தாங்களே முடிவு செய்துகொள்ளும் உரிமையும் ஈழத் தமிழர்களுக்கு இயற்கையாக உண்டு என்பதையும் அந்த வாழ்வுரிமையை அவர்கள் நிலைநிறுத்திக்கொள்ள அவர்களுக்கு தோள் கொடுத்து துணை நிற்க உலகத் தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.

6.
அளப்ப‌ரிய தியாங்களைச் செய்த ஈழத் தமிழ் மக்களும், அவர்களுக்காக இறுதிவரை போராடிய போராளிகளும், வீறுகொண்டு நடத்திய விடுதலைப் போராட்டம் பல நாடுகளின் கூட்டுச் சதியின் விளைவாக பின்னடைவைச் சந்திக்க நேர்ந்திருப்பது தற்காலிகமானது. மீண்டும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அந்த மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு உருவாவதற்கும் நாங்கள் முழுமையாக உதவுவோம். அதற்காக எங்களை முற்றிலுமாக ஒப்படைத்துக்கொண்டு எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருப்போம் என உலகளாவிய தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.

Tuesday, August 18, 2009

நாடு கடந்த தமிழீழ அரசு - உதவ முன்வருமாறு உலகத் தமிழ் அமைப்புகளுக்கு ருத்திரகுமாரன் வேண்டுகோள்


ஈழத்து தமிழ் பேசும் மக்களின் அதிஉயர் அரசியல்பீடமாக - உலகத் தமிழர்களின் நேரடி வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து - நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்தினை திடமாகவும் விரைவாகவும் முன்னெடுப்பதற்கு முன்வருமாறு அந்தத் திட்டத்தின் உருவாக்கச் செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் உலகத் தமிழ் அமைப்புகளுக்கு வேண்கோள் விடுத்துள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் திட்டச் செயற்குழுவின் சார்பாக அவர் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

"உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழர் அமைப்புக்கள் இந்தத் திட்டத்துக்கு தமது அதிகாரபூர்வ ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்கி வருவது இந்தத் திட்டத்துக்கு வலுச்சேர்த்து வருகிறது.

ஏற்கெனவே - பிரித்தானிய தமிழர் பேரவை, கனடியத் தமிழர் பேரவை, அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கம், சுவிஸ் தமிழர் பேரவை, பிரான்ஸ் தமிழீழ மக்கள் அவை, தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம், தமிழ் நாடு திராவிடர் பேரவை உட்பட பல அமைப்புக்கள் இந்தத் திட்டத்தின் வெற்றிக்காக தமது அதிகாரபூர்வ ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த அமைப்புக்களுக்கு எமது நன்றியினைத் தெரிவிக்கும் அதேவேளை, உலகளாவிய ரீதியில் இயங்கும் ஏனைய தமிழர் அமைப்புக்கள் எல்லோரிடமும் இந்தத் திட்டத்துக்கு ஆதரவினை வழங்குமாறும் எம்முடன் சேர்ந்தியங்க முன்வருமாறும் உரிமையுடன் வேண்டிக் கொள்கிறோம்." என்று தெரிவிக்கும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையை நசுக்கி விடுவதற்கு சிறிலங்கா அரசு பகீரத முயற்சி செய்து வருவதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம். தாயகத்தில் நமது தேசத்தின் மீது தான் நிலைநிறுத்தியுள்ள இராணுவ மேலாதிக்க நிலையின் மூலம் தமிழர் தேசத்தை அடிமைப்படுத்திவிடலாம் என்ற இறுமாப்புடன் செயற்பட்டுவரும் சிங்கள அரசு, தற்போது தனது இராணுவக் கொடும் கரங்களை சிறிலங்காவின் எல்லை தாண்டியும் விரித்துள்ளது. இதன் மூலம் புலத்தில் தமிழர் உரிமைப் போராட்டச் செயற்பாடுகளை நசுக்கிவிடலாம் என சிங்கள அரசு எண்ணுகிறது.

சிறிலங்கா அரசின் இராணுவ மேலாதிக்க நிலையுடனான அடக்குமுறைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் தாயகத்திலோ புலத்திலோ ஈழத்தமிழர் தேசம் அடிபணியப் போவதில்லை. தாயகத்தில் நமது மக்கள் தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புக்களாலும் இதனை வெளிப்படுத்த முனைகின்றனர். அண்மையில் நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மூலமும் மக்கள் இதனைத் தம்மால் இயன்றவரை வெளிப்படுத்தியுள்ளனர்.

புலத்தில் மக்களின் நேரடி வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து, ஈழத் தமிழர் தேசத்தின் அதிஉயர் அரசியல்பீடமாக அமையும் வண்ணம் நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்துக்கான செயற்பாடுகளை நாம் மிகவும் திடமாகவும் விரைவாகவும் முன்னெடுக்க உறுதிபூண்டுள்ளோம். நாம் வாழும் நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்ட வகையில், தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக போராடும் நமது ஜனநாயக உரிமையில் எவரும் தலையீடு செய்ய நாம் அனுமதிக்க முடியாது.

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டம் தொடர்பான விளக்கக் கோவை ஒன்றினை நாம் இம்மாத இறுதிக்குள் வெளியிடவுள்ளோம். இத்திட்டம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும் உரிய விளக்கங்களை இக்கோவை கொண்டிருக்கும்.

ஒவ்வாரு நாட்டிலும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக நாடு தழுவிய ரீதியில் அமைக்கப்படும் செயற்குழு விபரங்களையும் நாம் விரைவில் வெளிப்படுத்தவுள்ளோம்.

இக்குழுக்கள் தமிழ் மக்கள் மத்தியிலும் அனைத்துலக சமூகத்தின் மத்தியிலும் நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்துக்கு ஆதரவு திரட்டி திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக உழைக்கும்.

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்தின் வெற்றிக்கு நம் ஒவ்வொருவரினதும் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானதாகும்.

இத்திட்டத்துடன் இணைந்து செயற்பட ஆர்வமுள்ளவர்களை எம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கிறோம்.

எம்முடனான தொடர்புகளுக்குரிய மின்னஞ்சல் முகவரி: info@govtamileelam.org

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

தடம்புரண்ட திருமாவளவன்

திருமாவளவன்., ஈழம் எனும் உலகத்தமிழர்களின் கனவுக்கு உணர்ச்சிப் பங்காற்ற இன்னுமொருவர் கிடைத்துவிட்டார் என்ற மகிழ்ச்சியை சில காலம் முன்பு நமக்கு ஏற்படுத்திய மாவீரன்...

ஆனால் அதன் பின்பு, காலமும் ஓடியது, நாடளுமன்றத்துக்கு தேர்தலும் வந்தது.. அவர் கொண்ட கோலமும் மாறியது..

தன் குடும்பத்துக்காக ஒட்டுமொத்த தமிழினத்தையும் குழிதோண்டி புதைத்த கருணாநிதியிடம் பதவிக்காக மண்டியிட்டார்.

அதற்கு
முதல் நாள் வரை ஈழத்தமிழனத்தின் அழிவுக்கு முதற்க்காரணம் காங்கிரசும், அதன் தலைவி சோனியாவும் தான் என்று முழங்கிவந்த திருமாவளவன், தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அன்னை சோனியா ஒருவரால் மட்டுமே ஈழத்தமிழர்களுக்கான உரிமையை மீட்டுத்தமுடியும் என்று மகுடி ஊதினார்.

இப்போழுது மீண்டும் தன் பிறந்தனாள் பொதுக்கூட்டத்தை 'எழும் தமிழ் ஏழம்' என்ற பெயரில் கூட்டத்தைக்கூட்டி கொண்டாடியிருக்கிறார்.அதன் விளைவு மீண்டும் தேசியத்தலைவர் பற்றியும், விடுதலைப்போராட்டத்தைப் பற்றியும் பேசக்கூடாது என தடை.

எடுத்தற்கெள்ளாம் மத்திய அரசை பற்றி மட்டும் குற்றம் சாட்டும் திருமாவளவன், காங்கிரசுக்கு ஒத்து ஊதும் ஜால்ரா தமிழக முதல்வர் கருணாநிதியை பற்றி மட்டும் வாய் திறக்காதது ஏனோ கைது பயமா?..
இல்லை வாயைத்திறக்க முடியாத அளவிற்க்கு கட்டு கட்டாக எதையும் வைத்து வாயை அடைத்து விட்டார்களா?..

இவரை இப்போது பார்க்கும் போதெல்லாம், தன் குடும்பத்தினர்களுக்கு விருப்பபட்ட துறைகளை அமைச்சர் பதவிகளாக வாங்க டெல்லியில் முகாமிட்டு வாங்கிவந்த கருணாநிதியின் பின்னால் இவர் பம்முவதை பார்க்கும் போதெல்லாம், குள்ள நரியின் பின்னால் அதன் எச்சிலை பொறுக்கி திங்க திரியும் பூனையை போல் தன் இப்போது தெரிகிறார்.

வாழ்க திருமா.. வாழ்க திருமாவின் தமிழ்ப்பற்று...

Wednesday, August 5, 2009

கருத்துரிமைகள் பாதுகாப்புக் கழகம் முன்னெடுக்கும் 100 தமிழ் இனமான உணர்வாளர்கள் 100 நாட்கள் தமிழக பட்டி தொட்டியெங்கும் தொப்புள் கொடி உறவைக் காக்க பயணம்

தமிழ்ச் சொந்தங்களே! ஈழத்தில் இனப்படுகொலைக்கு ஆளான 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவும் -
இன்றும், மூன்றரை லட்சத்திற்கும் மேலான எண்ணிக்கையில் நமது ரத்தம், நமது சொந்தம், நமது தொப்புள் கொடி உறவுகள் மின்சாரம் பாய்ச்சிய முள்கம்பி வேலிக்குள்- தவித்த வாய்க்குத் தண்ணீரின்றி, பசித்த வயிற்றுக்குச் சோறின்றி, பட்ட காயத்திற்கு மருந்தின்றி, சிங்களனின் பாலியல் வன்கொடுமைக்கு நம் பெண்கள் பலியாக, அவனின் இனக் கொலைவெறிக்கு நம் இளைஞர்கள் பலியாக, வாரம் ஒன்றுக்கு நம் தொப்புள் கொடி உறவுகள் 1400 பேரை மரணம் வாரிக்கொண்டு போகும் கொடுமைச் சேதிகளையெல்லாம் ஊடகங்களின் இருட்டடிப்பினால் என்ன நடக்கிறது என்பதே அறியாமல் காடு கழனிகளில் உழலும் நம் தாயகச் சொந்தங்களுக்கு கொண்டு சேர்க்கவும்
தொப்புள் கொடி உறவு காக்கத் தொடர் பயணம் !

செயற்திட்டம்
இந்த தொடர் பயணம் ஆகஸ்து 1 முதல் தொடர்ந்து நூறு நாட்களுக்கு நடைபெறும்.
100 உணர்வாளர்களும் பத்து பத்துப் பேர் கொண்ட 10 அணிகளாகப் பிரிந்து பயணம் செய்தல்.
தமிழகத்தின் அணைத்து மாவட்டங்களும் கீழ்க்கண்டவாறு 10 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணிக்கும் ஒரு மண்டலம் ஒதுக்கப்பட்டு, அந்தெந்த மண்டலத்தில் உள்ள மாவட்டங்கள் முழுதும் 100 நாட்கள் பயணம் செய்து பரப்புரை செய்தல்.
நெல்லை மாவட்டம் நாகர்கோவில், தூத்துக்குடி,நெல்லை
மதுரை மாவட்டம் மதுரை, தேனி, திண்டுக்கல்
இராமநாதபுர மாவட்டம் இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை
தஞ்சை மாவட்டம் தஞ்சை, நாகை, புதுக்கோட்டை
கோவை மாவட்டம் கோவை, திருப்பூர்,ஈரோடு, நீலகிரி
திருச்சி மாவட்டம் திருச்சி, அரியலூர்,பெரம்பலூர்
சேலம் மாவட்டம் கரூர்,சேலம்,நாமக்கல்
வேலூர் மாவட்டம் வேலூர்,திருவண்ணாமலை, தருமபுரி,கிருஷ்ணகிரி
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம்,கடலூர்
காஞ்சி மாவட்டம் காஞ்சிபுரம், திருவள்ளூர்

தினந்தோறும் மாலையில் மேற்கண்ட மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாகச் செல்லுதல்.
ஈழத்து அவலங்களைச் சித்தரிக்கும் புகைப்படங்களைக் காட்சிக்கு வைத்தல்.

ஈழத்தில் மாண்டு போன நம் தொப்புள் கொடி உறவுகளுக்கும், இங்கே சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட 400 க்கு மேற்பட்ட மீனவர்களுக்கும், ஈழத்துச் சொந்தங்களைக் காக்கும் முயற்சியில் தங்கள் இன்னுயிர் ஈந்த முத்துக்குமார் உள்ளிட்ட 16 ஈகியருக்கும், அந்தக் கிராம மக்களோடு சேர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துதல்.

அதன் பிறகு ஈழ போரின் குறுந்தகடுகளை அந்த மக்களுக்குத் திரையிட்டுக் காட்டி, உண்மை நிலையனைத்தையும் அவர்கள் உணரும்படிச் செய்தல்.
பின் பொதுக்கூட்டம் போல் நடத்தாமல், அவர்களோடு அமர்ந்து, கலந்துரையாடி, இவ்வகையில் அவர்களிஇன் அணைத்து ஐயப்பாடுகளையும் நீக்குதல்.
நிறைவாக, முள்கம்பி வேலிக்குள் தவிக்கும் நம் மூன்றரை லட்சம் உறவுகளை விடுவிப்போம் என அந்தக் கிராம மக்களும் நாமும் சேர்ந்து உறுதிமொழி ஏற்றல்.
தினமும் மாலை தொடங்கி, இரவு 10 மணிக்குள்ளாக 2 கிராமங்களுக்காவது செல்லுதல்.
பகலில் கல்லூரி முடிந்த பிறகு, தினமும் மாணவர்களைச் சந்தித்து உணர்வுகளைக் கண்டறிந்து, அவர்கள் மூலம் உணர்வாளர்களைச் சேர்த்து, 100 நாட்களுக்குள்ளாக அந்தெந்த மண்டலத்தில் உள்ள அணைத்து கல்லூரிகளிலும் " இன உணர்வு " மேலோங்கி நிற்கச் செய்தல்.
சனி,ஞாயிறு நாட்களில் முற்பகலில் உள் அரங்கங்களில் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தமிழ் தேசிய உணர்வும், இன உணர்வும் மேலோங்கும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்துதல்.
100 நாள் பயணத் திட்டம் முடிவதற்குள்ளாக ஒரு மாவட்டத்தில் இளைஞர்களை மாணவர்களை உள்ளடக்கிய 1000 உணர்வாளர்களுக்குக் குறையாமல் இயக்கத்தில் இணைத்தல்.
பயணம் முடியப் போகும் கடைசி 10 நாட்களுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கண்ட 1000 உணர்வாளர்களையும் வரவழைத்து சிறந்த கருத்தரங்கமாக அதனை நடத்தி முடித்தல்.

இதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சருகணி என்ற கிராமத்தில் புகைப்பட கண்காட்சியையும், குறுந்தகடு திரையிடப்பட்டன. பொதுமக்கள் பெருந்திரளாக
பங்கெடுத்தனர்..இந்நிகழ்ச்சி ராமநாதபுர மாவட்ட செயலர் திரு.முகிலன்
அவர்களால் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கருத்துரிமைப் பாதுகாப்பு தலைவர் திரு, சீதைமைந்தன், தஞ்சை மாவட்ட செயலர், காஞ்சிபுர மாவட்ட செயலர் மற்றும் கருத்துரிமைப் பாதுகாப்பு கழக செய்தி தொடர்பாளர் விண்ணகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Thanks to: www.eeladhesam.com

Tuesday, August 4, 2009

சிறிலங்கா ஆடைகளைப் புறக்கணிக்குமாறு அமெரிக்காவில் தமிழர்கள் போராட்டம்


சிறிலங்காவில் தயாரிக்கப்படும் தைக்கப்பட்ட ஆடைகளைப் புறக்கணிக்குமாறு கோரி நேற்று முன்நாள் அமெரிக்காவில் நடத்தப்பட்ட முதற்கட்டப் போராட்டத்துக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளதாகவும், இந்தப் போராட்டத்தை அமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப் போவதாகவும் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திவரும் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் பெரும் சந்தை வாய்ப்பைப் பெற்றிருக்கும் சிறிலங்கா ஆடைகளை அமெரிக்க மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனக் கோரும் போராட்டம் நேற்று முன்நாள் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

இதில் பெரும் தொகையானவர்கள் கலந்துகொண்டதுடன், விற்பனையாளர்கள், கொள்வனவு செய்ய வந்தவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரதும் ஆதரவு கிடைத்ததால் இது பெரும் வெற்றி பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Thanks to: www.nerudal.com


என் இனத்திற்காக போராடுவேன் என்று வந்த உண்மையான தலைவன் பிரபாகரன்:சீமான்

புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகம் சார்பில், வழக்கு நிதியளிப்பு கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் இயக்குநர் சீமான் பங்கேற்று பேசினார்.
’புதுச்சேரியில் நான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக என்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

நான் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினேன். பிரபாகரன் என் அண்ணன் என்று கூறினேன். என்னை கைது செய்யும் போது புதுச்சேரியில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் கிடையாது. அதன் பின்னர்தான் அதைக் கொண்டு வந்தனர்.

புதுச்சேரியில் நான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக என்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தமிழின உணர்வாளர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவியதாக, கூட்டத்தில் தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளுக்காக, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் ரூ. 1.50 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

எல்லோரும் பிறர் தங்களை தலைவர் என்று அழைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். தந்தை பெரியார்தான் உண்மையான தலைவர்.

Monday, August 3, 2009

ஒரு கோப்பை சோற்றுக்காக தலை குனிந்து நிற்கும் ஈழத்தமிழர் அவலம்

தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தர இந்தியா இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென ஐ. தே. கட்சியின் ஊவா மாகாண சபை வேட்பாளர் கே. வேலாயுதம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் மேலும், உயிருக்குயிராய் நேசிக்கும் இந்தியா இன்று வரையிலும் எமது மக்களைப் பற்றி சிந்திப்பதாக தெரியவில்லை. சிறந்த எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் மலையக மக்களுக்காக எதையுமே செய்யாத இந்தியா தேவையற்ற எத்தனையோ விசயங்களில் இலங்கையில் தலையீடு செய்து வருகின்றது.

மலையக மக்களின் பிரஜாவுரிமையை 1947 ஆம் ஆண்டு பறித்தபோது இதனை தடுத்து நிறுத்தும் பொறுப்பில் இந்தியா இருந்தபோதும் அதை செய்யாததால் இன்று மலையகம் இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கின்றது.

எத்தனையோ ஏமாற்றங்கள் வந்தபோதிலும் இந்தியாவை மீண்டும் நம்பிய தமிழ் மக்களை எட்டி உதைக்கும் பாணியிலே நடந்துகொள்கிறது இந்தியா. இதில் வேதனை என்னவெனில் இந்திய மண்ணில் எத்தனையோ பேர் அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று தீக்குளித்த போதும் கூட இது குறித்து ஓரக்கண்ணாலாவது இந்திய மத்திய அரசு பார்க்கவில்லை.

இவர்களில் உணர்வுகளையும் நியாயமான ஆவேசங்களையும் தடுத்து நிறுத்தவே முழு ஆவலோடு செயற்பட்டது. காட்டுமிராண்டித் தனத்திற்கு கைகொடுத்த இந்தியா இனியாவது இந்தத் துன்பியல் சம்பவங்களை மறந்துவிட்டு எமக்காக எமது நிம்மதிக்காக செயற்பட வேண்டும்.

எமது மக்கள் ஒன்றும் பாவப்பட்ட ஜென்மங்கள் அல்ல. மலையக மக்கள் எந்தவொரு நிம்மதியுமின்றி வாழ்க்கையென்றால் என்னவென்று கூட அறியாது வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மறுபுறம் வடக்கில் அந்த மண்ணில் கௌரவமாகவும் தலை நிமிர்ந்தும் வாழ்ந்த தமிழர்கள் ஒரு கோப்பை சோற்றுக்காக வரிசையில் தலை குனிந்து நிற்கின்றனர். என்ன கொடூரம் இது? இதனையெல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு வெறும் வைத்திய வசதிகளையும் அற்ப சலுகைகளையும் வழங்கி எம்மை ஏமாற்றிவிடப் பார்க்கிறது இந்தியா.

கடந்த கால சம்பவங்களை குடைந்து குடைந்து பார்க்கையில் முன்னரைவிட இந்தியாவுக்கு எமது மக்களின் விடுதலையில் அதிகம் அக்கறை செலுத்த வேண்டிய, இதற்காக செயற்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

எனவே எங்களுக்கோர் நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தர இந்தியா முழுமையாக செயற்பட வேண்டும். இந்தத் தீர்வில் மலையக மக்களது பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு அனைத்து இன மக்களும் நிம்மதியாக வாழ இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து அதற்குத் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு மாற்றத்திற்கு முழு பங்களிப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்’’ என்று தெரிவித்துள்ளார்.